Home
Mobile

மீண்டும் ஒரு அட்டகாசமான ஸ்மார்ட்போனை மலிவு விலையில் அறிமுகம் செய்த Nokia.! முழு விவரம்.!

எச்எம்டி குளோபல் நிறுவனம் இந்தியாவில் தொடர்ந்து அட்டகாசமான ஸ்மார்ட்போன்களை கம்மி விலையில் அறிமுகம் செய்து வருகிறது. குறிப்பாக இந்நிறுவனம் அறிமுகம் செய்யும் ஒவ்வொரு ஸ்மார்ட்போன்களுக்கும் இந்தியாவில் நல்ல வரவேற்பு உள்ளது. இந்நிலையில் புதிய நோக்கியா சி12 ப்ரோ ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது இந்நிறுவனம்.

அதாவது gadgetsnow வெளியிட்ட தகவலின்படி, நோக்கியா சி12 ப்ரோ எனும் புதிய போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த போன் கம்மி விலையில் பல அசத்தலான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது இந்த புதிய போனின் விலை மற்றும் அம்சங்களைச் சற்று விரிவாகாப் பார்ப்போம்.

மீண்டும் ஒரு ஸ்மார்ட்போனை மலிவு விலையில் அறிமுகம் செய்த Nokia.!

புதிய நோக்கியா சி12 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது 6.3-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது. பின்பு 720x1600 பிக்சல்ஸ், 20:9 ஆஸ்பெக்ட் ரேஷியோ மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாகக் கொண்டு இந்த நோக்கியா போன் வெளிவந்துள்ளது. பெரிய டிஸ்பிளே என்பதால் இதைப் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

அதேபோல் இந்த புதிய நோக்கியா சி12 ப்ரோ ஸ்மார்ட்போனில் ஆக்டோ-கோர் Unisoc SC9863A1 சிப்செட் வசதி உள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனை இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். மேலும் இந்த புதிய போனில் ஆண்ட்ராய்டு 12 கோ எடிஷன் இயங்குதள வசதி இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

நோக்கியா சி12 ப்ரோ ஸ்மார்ட்போன் 2ஜிபி/3ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி ஸ்டோரேஜ் வசதியுடன் வெளிவந்துள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் கொடுக்கப்பட்டுள்ளது.

மீண்டும் ஒரு ஸ்மார்ட்போனை மலிவு விலையில் அறிமுகம் செய்த Nokia.!

புதிய நோக்கியா சி12 ப்ரோ ஸ்மார்ட்போனில் எல்இடி பிளாஸ் ஆதரவு கொண்ட 8எம்பி ரியர் கேமரா வசதி உள்ளது. மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 5எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன். ஆனால் இந்த போனில் 8எம்பி ரியர் கேமராவுக்கு பதிலாக 13எம்பி கேமரா இடம்பெற்றிருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்.

அதேபோல் 4000 எம்ஏஎச் பேட்டரி வசதியைக் கொண்டுள்ளது இந்த புதிய நோக்கியா சி12 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடல். எனவே இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு 10 வாட்ஸ் சார்ஜிங் வசதியைக் கொண்டுள்ளது இந்த நோக்கியா ஸ்மார்ட்போன். குறிப்பாக இந்த போனின் வடிவமைப்புமிகவும் அருமையாக இருக்கிறது.

அதேபோல் வைஃபை, 4ஜி, யுஎஸ்பி டைப்-சி போர்ட், 3.5எம்எம் ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டுள்ளது இந்த நோக்கியா சி12 ப்ரோ ஸ்மார்ட்போன். மேலும் இந்த புதிய போனுக்கு இரண்டு வருட பாதுகாப்பு அப்டேட்களை கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் டார்க் சியான், Charcoal மற்றும் லைட் மிண்ட் நிறங்களில் இந்த புதிய போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

மீண்டும் ஒரு ஸ்மார்ட்போனை மலிவு விலையில் அறிமுகம் செய்த Nokia.!

2ஜிபி ரேம் மற்றும் கொண்ட நோக்கியா சி12 ப்ரோ ஸ்மார்ட்போனின் விலை ரூ.6,999-ஆக உள்ளது. பின்பு இதன் 3ஜிபி வேரியண்டின் விலை ரூ.7,499-ஆக உள்ளது. குறிப்பாக நோக்கியா.காம் மற்றும் ஆஃப்லைன் ஸ்டோர்களில் இந்த புதிய நோக்கியா ஸ்மார்ட்போனை வாங்க முடியும். அதேபோல் எச்எம்டி குளோபல் நிறுவனம் விரைவில் பல அசத்தலான ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய உள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
new Nokia C12 Pro smartphone has been launched at price of Rs 6,999: Check Specifications : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X