Home
Mobile

போர்டு எல்லாம் புதுசு புதுசா எழுதுற டீ தூள் மட்டும் மாத்த மாட்டேங்கிற: தப்பி தவறி இந்த Nokia போனை வாங்காதீங்க!

வேல் திரைப்படத்தில் போர்டு எல்லாம் புதுசு புதுசா எழுதுற டீ தூள் மட்டும் மாத்த மாட்டேங்கிற என்ற வடிவேலு கமெடி வரும். அதேபோல் எச்எம்டி குளோபல் நிறுவனமும் பெயரை மட்டும் புதுசு புதுசாக வைத்துக் கொண்டு ஒரே மாதரியான புதிய போன்களை அறிமுகம் செய்து சலிப்படைய செய்துள்ளது. குறிப்பாக இந்நிறுவனம் பேட்டரி, பிராஸசர் மட்டும் போன்றவற்றில் சில மாற்றங்களைச் செய்து ஒரே மாதிரியான போனை அறிமுகம் செய்து கமெடி செய்து வருகிறது.

அதாவது ஏற்கனவே இந்நிறுவனம் நோக்கியா சி12 மற்றும் நோக்கியா சி12 ப்ரோ அறிமுகம் செய்துள்ளது. தற்போது மூன்றாவதாக நோக்கியா சி12 பிளஸ் எனும் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இந்நிறுவனம் லோகோவை மாற்றியதும் பல அசத்தலான ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதே ஆண்ட்ராய்டு கோ எடிஷன் இயங்குதளம் கொண்ட ஸ்மார்ட்போன்களை தான் இந்நிறுவனம் அதிகமாக அறிமுகம் செய்து வருகிறது.

தப்பி தவறி கூட இந்த Nokia போனை வாங்காதீங்க! ஏன்?

சரி இப்போது இந்த நோக்கியா சி12 பிளஸ் ஸ்மார்ட்போனின் அம்சங்கள் மற்றும் விலைப் பற்றிய தகவலைச் சற்று விரிவாகப் பார்ப்போம். புதிய நோக்கியா சி12 பிளஸ் ஸ்மார்ட்போன் ஆனது 6.3-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வசதியுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பின்பு 720 X 1520 பிக்சல்ஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த புதிய நோக்கியா ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.

அதேபோல் 1.6ஜிகாஹெர்ட்ஸ் Unisoc ஆக்டோ-கோர் பிராஸசர் வசதியை அடிப்படையாகக் கொண்டு இந்த ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக கேமிங் ஆப்ஸ்களை இதில் பயன்படுத்துவது கடினம். மற்றபடி அனைத்து ஆப்ஸ்களையும் இதில் பயன்படுத்தலாம். மேலும் ஆண்ட்ராய்டு 12 (கோ எடிஷன்) இயங்குதளத்தைக் கொண்டுள்ளது இந்த புதிய நோக்கியா ஸ்மார்ட்போன் மாடல்.

நோக்கியா சி12 பிளஸ் ஸ்மார்ட்போனில் 8எம்பி ரியர் கேமரா வசதி உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 5எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த புதிய நோக்கியா போன். குறிப்பாக எல்இடி பிளாஷ் மற்றும் பல கேமரா அம்சங்கள் இவற்றுள் அடக்கம். ஆனால் ரெட்மி நிறுவனம் கூட கம்மி விலை போன்களில் 50எம்பி ரியர் கேமரா கொடுத்துள்ளது. ஆனால் இந்த நோக்கியா சி12 பிளஸ் ஸ்மார்ட்போனில் 8எம்பி ரியர் கேமரா இருப்பது பல்வேறு பயனர்களுக்கு ஏமாற்றத்தைக் கொடுத்துள்ளது.

தப்பி தவறி கூட இந்த Nokia போனை வாங்காதீங்க! ஏன்?

2ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி ஸ்டோரேஜ் ஆதரவுடன் இந்த புதிய நோக்கியா சி12 பிளஸ் ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன் மாடல். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவைக் கொண்டுள்ளது நோக்கியா ஸ்மார்ட்போன்

நோக்கிய சி12 பிளஸ் ஸ்மார்ட்போனில் 4000 எம்ஏஎச் பேட்டரி வசதி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் கிடைக்கும். ஆனால் இந்த போனில் பாஸ்ட் சார்ஜிங் வசதி இல்லை. குறிப்பாக இப்போது பாஸ்ட் சார்ஜிங் போன்களை தான் மக்கள் அதிகமாக எதிர்பார்க்கின்றனர்.

தப்பி தவறி கூட இந்த Nokia போனை வாங்காதீங்க! ஏன்?

4ஜி வோல்ட்இ, வைஃபை 802.11, ஜிபிஎஸ், 3.5எம்எம் ஆடியோ ஜாக், ப்ளூடூத் 5.2, மைக்ரோ யுஎஸ்பி போர்ட் உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த நோக்கிய சி12 பிளஸ் ஸ்மார்ட்போன். மேலும் இந்த புதிய நோக்கிய மாடலின் விலை ரூ.7,999-ஆக உள்ளது. இதன் விற்பனை விவரங்களை அந்நிறுவனம் இன்னும் வெளியிடவில்லை. கூடிய விரைவில் இதன் விற்பனை விவரம் தெரியவரும்.

Best Mobiles in India

English summary
New Nokia C12 Plus smartphone launched in India at price of Rs 7,999: Check Specifications: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X