Home
Mobile

சத்தமின்றி சிறிய டிஸ்பிளே கொண்ட புதிய ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்த Nokia.! என்னென்ன அம்சங்கள்?

எச்எம்டி குளோபல் நிறுவனம் கடந்த 2021-ம் ஆண்டு நோக்கியா சி01 எனும் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்தது. அதன்பின்பு இப்போது சத்தமின்றி நோக்கியா சி02 எனும் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக புதிய நோக்கியா சி02 போன் சிறிய டிஸ்பிளே, அருமையான பேட்டரி மற்றும் பல அசத்தலான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது.

நோக்கியா சி02 அம்சங்கள்

இப்போது நோக்கியா சி02 ஸ்மார்ட்போனின் அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்ப்போம். அதாவது இந்த புதிய நோக்கியா போன் ஆனது 5.45-இன்ச் FWVGA+ டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது. பின்பு 480 x 960 பிக்சல்ஸ், 18:9 ஆஸ்பெக்ட் ரேஷியோ மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

சத்தமின்றி சிறிய டிஸ்பிளே கொண்ட புதிய போனை அறிமுகம் செய்த Nokia.!

பிராசஸர் எப்படி?

அதேபோல் இந்த புதிய நோக்கியா சி02 ஸ்மார்ட்போன் 1.4ஜிகாஹெர்ட்ஸ் குவாட்-கோர் Unisoc பிராசஸர் வசதியை அடிப்படையாகக் கொண்டு வெளிவந்துள்ளது. இந்த பிராசஸர் மேம்பட்ட செயல்திறன் வழங்கும். குறிப்பாக ஆப்புகளைத் தடையின்றி பயன்படுத்த உதவுகிறது இந்த சக்திவாய்ந்த பிராசஸர். அதேபோல் இந்த போனின் வடிவமைப்பு கூட மிகவும் அருமையாக உள்ளது.

புதிய நோக்கியா சி02 ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு 12 (கோ எடிஷன்) இயங்குதள வசதி உள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனை இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். பின்பு 2ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் வசதியுடன் இந்த போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த போனில் நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவும் உள்ளது.

சத்தமின்றி சிறிய டிஸ்பிளே கொண்ட புதிய போனை அறிமுகம் செய்த Nokia.!

இப்போது அறிமுகம் செய்யப்பட்ட நோக்கியா சி02 ஸ்மார்ட்போன் 2எம்பி செல்பி கேமரா மற்றும் 5எம்பி ரியர் கேமரா ஆதரவுடன் வெளிவந்துள்ளது. இதற்குப் பதிலாக 13எம்பி ரியர் கேமரா மற்றும் 8எம்பி செல்பி கேமரா கொடுத்திருந்தால் இன்னும் அருமையாக இருந்திருக்கும். பின்பு எல்இடி பிளாஷ் ஆதரவைக் கொண்டுள்ளது இந்த புதிய நோக்கியா சி02 ஸ்மார்ட்போன்.

நோக்கியா சி02 ஸ்மார்ட்போனில் 3000 எம்ஏஎச் பேட்டரி வசதி உள்ளது. எனவே இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு 5 வாட்ஸ் சார்ஜிங் வசதி, Splash resistant (IP52) ஆதரவு உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த புதிய நோக்கியா சி02 ஸ்மார்ட்போன். மேலும் இந்த போனின் எடை 191 கிராம் என்பது குறிப்பிடத்தக்கது.

சத்தமின்றி சிறிய டிஸ்பிளே கொண்ட புதிய போனை அறிமுகம் செய்த Nokia.!

விலை மற்றும் விற்பனை?

4ஜி வோல்ட்இ, வைஃபை 802.11, ப்ளூடூத் 4.2, ஜிபிஎஸ், மைக்ரோ யுஎஸ்பி உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகளை கொண்டு வெளிவந்துள்ளது இந்த நோக்கியா சி02 ஸ்மார்ட்போன் மாடல். குறிப்பாக Dark Cyan மற்றும் Charcoal நிறங்களில் இந்த புத்தம் புதிய நோக்கியா சி02 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

அதேபோல் நோக்கியா சி02 ஸ்மார்ட்போன் தற்போது அறிமுகம் மட்டும் தான் செய்யப்பட்டுள்ளது. இதன் விலை மற்றும் விற்பனை விவரங்களை எச்எம்டி குளோபல் நிறுவனம் இன்னும் வெளியிடவில்லை. கூடிய விரைவில் இதன் விலை மற்றும் விற்பனை விவரங்களை அந்நிறுவனம் அறிவிக்கும். அப்போது உடனே அப்டேட் செய்கிறோம்.

சத்தமின்றி சிறிய டிஸ்பிளே கொண்ட புதிய போனை அறிமுகம் செய்த Nokia.!

கடந்த வாரம் எச்எம்டி குளோபல் நிறுவனம் இந்தியாவில் நோக்கியா எக்ஸ்30 5ஜி எனும் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்தது. 50எம்பி ரியர் கேமரா, ஸ்னாப்டிராகன் சிப்செட், 4200 எம்ஏஎச் பேட்டரி மற்றும் பல சிறப்பான அம்சங்களுடன் சற்று உயர்வான விலையில் இந்த நோக்கியா எக்ஸ்30 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டது.

More from GizBot

Best Mobiles in India

English summary
new Nokia C02 smartphone has been launched with a 5.45-inch display: Price, Specifications : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X