சைனீஸ் 5ஜி போன்களை நூடுல்ஸ் போட்ட NOKIA.. ரூ.9000 பட்ஜெட்டில் புது 5G போன்.. எந்த மாடல்?
நோக்கியா (NOKIA) பிராண்டட் மொபைல் போன்கள் மற்றும் ஸ்மார்ட்போன்களை தயாரிக்கும் உரிமத்தை கொண்டுள்ள எச்எம்டி க்ளோபல் (HMD Global) நிறுவனமானது, இந்திய சந்தையில் ஒரு புதிய பட்ஜெட் விலை 5ஜி ஸ்மார்ட்போன் மாடலின் வெளியீட்டு தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளது.
என்ன மாடல்? புதிய 5ஜி ஸ்மார்ட்போன் குறித்து எச்எம்டி க்ளோபல் நிறுவனம் பதிவிட்டுள்ள எக்ஸ் (X) தள பதிவின்படி - இந்திய சந்தையில் எச்எம்டி வைப் 5ஜி (HMD Vibe 5G) என்கிற ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படவுள்ளது. மேலும் இது ரூ.10,000 க்கும் குறைவான (அதாவது ரூ.9000 பட்ஜெட்டில்) விலையில் வாங்க கிடைக்கும் ஒரு என்ட்ரி-லெவல் 5ஜி ஸ்மார்ட்போனாக (Entry Level 5G Smartphone) இருக்குமென்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எப்போது அறிமுகமாகும்? எச்எம்டி வைப் 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது செப்டம்பர் 11 அம தேதி அன்று அதிகாரப்பூர்வமாக அறிமுகமாகும். இதுகுறித்து எக்ஸ் (X) தளம் வழியாக ஒரு சிறிய வீடியோ டிரெய்லர் பகிரப்பட்டுள்ளது. அதன் வழியாக மாடல் பெயர் மற்றும் டிசைன் குறித்த சில விவரங்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளது
எச்எம்டி வைப் 5ஜி ஸ்மார்ட்போனை பார்க்கும் போது, முன்னதாக அறிமுகமான எச்எம்டி வைப் (HMD Vibe) மாடலை போலவே உள்ளது. நினைவூட்டும் வண்ணம் எச்எம்டி வைப் மாடல் ஆனது 4ஜி ஆதரவுடன் வந்த ஸ்மார்ட்போனாகும். ஆக எச்எம்டி வைப் 5ஜி ஆனது சிப்செட் விஷயத்தில் நிச்சயம் அப்கிரேட்-ஐ காணும். இதுதவிர்த்து எச்எம்டி வைப் 5ஜி ஸ்மார்ட்போனின் மற்ற அம்சங்கள் குறித்து எந்த விவரங்களும் வெளிப்படுத்தப்படவில்லை.
டிசைனை பொறுத்தவரை எச்எம்டி வைப் 5ஜி ஸ்மார்ட்போனின் டீஸர் வீடியோவில், ஸ்மார்ட்போனின் பின்புறத்தில் ஒரு செவ்வக கேமரா யூனிட்டை காண முடிகிறது; அதில் டூயல் ரியர் கேமரா செட்டப்பையும் பார்க்க முடிகிறது. அதில் 50எம்பி ஏஐ (50MP AI) என்கிற வார்த்தைகளை வெளிப்படையாகவே காண முடிகிறது.
மேலும் எச்எம்டி வைப் 5ஜி ஸ்மார்ட்போனின் கேமரா யூனிட்டில் எல்இடி ஃபிளாஷ் மற்றும் இரண்டு ஒளிரும் கோடுகள் இருப்பதாக தெரிகிறது. அவை அழகியலுக்காக மட்டுமே உள்ளதா அல்லது நத்திங் நிறுவனத்தின் கிளிஃப் இன்டர்பேஸ் (Nothing Glyph Interface) போன்ற ஒளிரும் எல்இடி லைட்களா என்பது தெளிவாகத் தெரியவில்லை.
இதுவரை நமக்கு தெரிந்தவற்றின் அடிப்படையில், எச்எம்டி வைப் 5ஜி ஸ்மார்ட்போனானது ஏற்கனவே எச்எம்டி இந்தியாவின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் பட்டியலிடப்பட்டு உள்ளது. டீஸர் வீடியோவில், கடைசியாக டீஸ் செய்யப்பட்ட குறிப்பிடத்தக்க விவரம் அதன் விலை ஆகும். முன்னரே குறிப்பிட்டபாடி இந்த ஸ்மார்ட்போன் ரூ.10,000 க்கும் குறைவான விலையில் அறிமுகமாகும்.
எச்எம்டி பல்ஸ் 2 ப்ரோ (HMD Pulse 2 Pro) ஸ்மார்ட்போனும் விரைவில் அறிமுகம் செய்யப்படவுள்ளது: சமீபத்தில் இந்த ஸ்மார்ட்போனின் விலை மற்றும் முக்கிய அம்சங்கள் ஆன்லைனில் லீக் ஆகி இருந்தன. அதன்படி எச்எம்டி பல்ஸ் 2 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது 6.7 இன்ச் டிஸ்ப்ளே, யூனிசாக் டி615 சிப்செட், 5000mAh பேட்டரி மற்றும் 50 மெகாபிக்சல் ரியர் கேமரா ஆகிய அம்சங்களை கொண்டிருக்கும்.
எச்எம்டி பல்ஸ் 2 ப்ரோ ஸ்மார்ட்போனின் விலை நிர்ணயம் எப்படி இருக்கும்? டார்க் ப்ளூ மற்றும் க்ரீன் ஆகிய 2 கலர் ஆப்ஷன்களில் அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படும் எச்எம்டி பல்ஸ் 2 ப்ரோ ஸ்மார்ட்போனின் இந்திய விலை நிர்ணயம் ரூ.20,000 க்குள் இருக்கும். இன்னும் சரியாக சொல்ல வேண்டுமென்றால் பேஸிக் 6ஜிபி ரேம் + 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் சுமார் ரூ.18,000 க்கு அறிமுகம் செய்யப்படலாம் .


Click it and Unblock the Notifications








