பாக்கதான் தம்மாத்துண்டு இருக்கும்.. ஆனா இந்த Nokia பிளிப் போனில் வேற லெவல் சம்பவத்தை பண்ணியிருக்காங்க!

|

எச்எம்டி குளோபல் நிறுவனம் தொடர்ந்து அசத்தலான ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகிறது. குறிப்பாக இந்நிறுவனம் அறிமுகம் செய்யும் ஒவ்வொரு போனுக்கும் நல்ல வரவேற்பு உள்ளது.

எச்எம்டி குளோபல் நிறுவனம்

எச்எம்டி குளோபல் நிறுவனம்

அதேபோல் எச்எம்டி குளோபல் நிறுவனம் சமீபத்தில் 5ஜி போன்களை கூட இந்தியாவில் அறிமுகம் செய்யத் தொடங்கிவிட்டது. இந்நிறுவனம் சில தினங்களுக்கு முன்பு இந்தியாவில் நோக்கியா ஜி60 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்தது. இந்நிலையில் எச்எம்டி குளோபல் நிறுவனம் புதிய நோக்கியா 2780 பிளிப் மாடலை அறிமுகம் செய்துள்ளது.

5ஜி நெட் இருக்கும் 5ஜி போனும் இருக்கும்.. ஆனா Jio 5G யூஸ் பண்ண முடியாது! இதை முதலில் பண்ணுங்க!5ஜி நெட் இருக்கும் 5ஜி போனும் இருக்கும்.. ஆனா Jio 5G யூஸ் பண்ண முடியாது! இதை முதலில் பண்ணுங்க!

கிளாம்ஷெல் ரக போல்டபிள் போன் கிடையாது

கிளாம்ஷெல் ரக போல்டபிள் போன் கிடையாது

ஆனால் பிளிப் போன் என்ற வகையில் இது கிளாம்ஷெல் ரக போல்டபிள் போன் கிடையாது. மாறாக நோக்கியாவின் பழைய பானியில் மடிக்கும் வகையில் பட்டன்கள் அடங்கிய மொபைல் என்பது குறிப்பிடத்தக்கது. இருந்தபோதிலும் இந்த போனை பயன்படுத்த மிகவும் அருமையாக இருக்கும்.

தெரியுமா? பிறந்த குழந்தைக்கு கூட ஆதார் அட்டை கொடுக்குறாங்க.. வாங்குவது எப்படி?தெரியுமா? பிறந்த குழந்தைக்கு கூட ஆதார் அட்டை கொடுக்குறாங்க.. வாங்குவது எப்படி?

2.7-இன்ச் டிஎப்டி டிஸ்பிளே

2.7-இன்ச் டிஎப்டி டிஸ்பிளே

அதேபோல் இந்த புதிய நோக்கியா 2780 பிளிப் மாடல் ஆனது 2.7-இன்ச் டிஎப்டி டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது. மேலும் இந்த போனின் வெளிப்புறம்1.77-இன்ச் ஸ்கிரீன் வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

நீ BAD-னா.. நான் உன்னோட DAD! இந்தியாவின் ISRO-விற்கு பதிலடி கொடுத்த Elon Musk!நீ BAD-னா.. நான் உன்னோட DAD! இந்தியாவின் ISRO-விற்கு பதிலடி கொடுத்த Elon Musk!

5எம்பி கேமரா

5எம்பி கேமரா

குறிப்பாக இந்த நோக்கியா பிளிப் போனில் 5எம்பி கேமரா வசதி உள்ளது. மேலும் பிக்சட் போகஸ் மற்றும் எல்இடி பிளாஷ் ஆதரவைக் கொண்டு வெளிவந்துள்ளது இந்த பிளிப் போன் மாடல். அதேபோல் இதன் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது எச்எம்டி குளோபல் நிறுவனம்.

BSNL ப்ரீபெய்ட் ரீசார்ஜ் பயனர்களுக்கு BSNL ப்ரீபெய்ட் ரீசார்ஜ் பயனர்களுக்கு "பெரிய" டிவிஸ்ட்.! இந்த மேட்டரை உடனே தெரிஞ்சுக்கோங்க.!

குவால்காம் 215 சிப்செட்

குவால்காம் 215 சிப்செட்

புதிய நோக்கியா 2780 பிளிப் மாடலில் குவாட்-கோர் 1.3ஜிகாஹெர்ட்ஸ் குவால்காம் 215 சிப்செட் வசதி உள்ளது. அதேபோல் இந்த போனில் X5 எல்டிஇ மோடெம் வழங்கப்பட்டுள்ளது. இதுதவிர 50Mbps டவுன்லோட் வேகத்திற்கான சப்போர்ட் வழங்குகிறது இந்த நோக்கியா 2780 பிளிப்மாடல்.

மிரண்டு போன விஞ்ஞானிகள்! இத்தனை வருஷமாக சூரியனுக்கு பின்னால் ஒளிந்திருந்த மிரண்டு போன விஞ்ஞானிகள்! இத்தனை வருஷமாக சூரியனுக்கு பின்னால் ஒளிந்திருந்த "பொருள்" வெளிப்பட்டது!

4ஜி

குறிப்பாக நோக்கியா 2780 பிளிப் மாடல் 4ஜி ஆதரவை வழங்குகிறது. எனவே சிக்னல் பிரச்சனை இன்றி இந்த போனில் பேச முடியும். மேலும் ரியல் டைம் டெக்ஸ்ட்டிங், வோல்ட்இ போன்ற ஆதரவையும் வழங்குகிறது இந்த புதிய நோக்கியா போன்.

4ஜிபி ரேம்

4ஜிபி ரேம்

4ஜிபி ரேம் மற்றும் 512எம்பி ஸ்டோரேஜ் வசதியை அடிப்படையாகக் கொண்டு வெளிவந்துள்ளது இந்த நோக்கியா பிளிப் போன். பின்பு கைஒஎஸ் 3.1, எப்எம் ரேடியோ, எம்பி3 சப்போர்ட், எப்எம் ரேடியோ, வைஃபை போன்ற பல சிறப்பான அம்சங்களை வழங்குகிறது புதிய நோக்கியா 2780 பிளிப் மாடல்.

இந்த பக்கமே வர கூடாது! அப்துல் கலாம் தீவில் நடந்த ஆயுத சோதனை.. சைலன்ட் ஆன சீனா!இந்த பக்கமே வர கூடாது! அப்துல் கலாம் தீவில் நடந்த ஆயுத சோதனை.. சைலன்ட் ஆன சீனா!

ரெட் மற்றும் புளூ

ரெட் மற்றும் புளூ

1450 எம்ஏஎச் பேட்டரி வசதியைக் கொண்டு இந்த நோக்கியா 2780 பிளிப் மாடல் வெளிவந்துள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் கிடைக்கும். அதேபோல் ரெட் மற்றும் புளூ என இரண்டு விதமான நிறங்களில் இந்த போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

Price Cut-னா இப்படி இருக்கணும்! இரவோடு இரவாக ரூ.10,000 விலை குறைந்த Samsung போன்!Price Cut-னா இப்படி இருக்கணும்! இரவோடு இரவாக ரூ.10,000 விலை குறைந்த Samsung போன்!

நோக்கியா 2780 பிளிப் மாடலின் விலை

நோக்கியா 2780 பிளிப் மாடலின் விலை

மேலும் நோக்கியா 2780 பிளிப் மாடலின் விலை 90 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.7,457). அமெரிக்காவில் வரும் நவம்பர் 15 ஆம் தேதி இதன் விற்பனை தொடங்கும். கூடிய விரைவில் இந்த போன் அனைத்து நாடுகளிலும் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

Best Mobiles in India

English summary
New Nokia 2780 Flip Phone Launched With 4GB RAM, 5MP Camera, FM Radio: Price, Specs And More: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X