ஆளுக்கு ரெண்டு வாங்கும் விலையில் Nokia 2660 Flip போன் அறிமுகம்.!

|

எச்எம்டி குளோபல் நிறுவனம் சர்வதேசச் சந்தையில் சூப்பரான Nokia 2660 Flip போனை அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இந்த பீச்சர் போன் நாம் எதிர்பார்க்கும் அனைத்து அம்சங்களுடன் வெளிவந்துள்ளது என்றுதான் கூறவேண்டும்.

 நோக்கியா 2660 பிளிப் பீச்சர் போன்

நோக்கியா 2660 பிளிப் பீச்சர் போன்

கடந்த சில வாரங்களில் எச்எம்டி குளோபல் நிறுவனம் பல அசத்தலான பீச்சர் போன்களை குறைந்த விலையில் அறிமுகம் செய்துவிட்டது. அந்தவரிசையில் தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ள நோக்கியா 2660 பிளிப் மாடலும் தனித்துவமான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது.

இப்போது நோக்கியா 2660 பிளிப் பீச்சர் போனின் விலை மற்றும் விபரங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.

Xiaomi இன் அதிரடி சுதந்திர தின ஆஃபர்: ரூ.24,000 வரை தள்ளுபடியா? இது தெரியாம போச்சேப்பா!Xiaomi இன் அதிரடி சுதந்திர தின ஆஃபர்: ரூ.24,000 வரை தள்ளுபடியா? இது தெரியாம போச்சேப்பா!

நோக்கியா 2660 பிளிப் போனின் விலை

நோக்கியா 2660 பிளிப் போனின் விலை

UK-இல் நோக்கியா 2660 பிளிப் பீச்சர் போனின் விலைEUR 64.99 (இந்திய மதிப்பில் ரூ.5,000) ஆக உள்ளது. குறிப்பாக இந்த போன் கருப்பு, நீலம் மற்றும் சிவப்பு நிறங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் நோக்கியா 2660 பிளிப் போனின் இந்திய விலை மற்றும் கிடைக்கும் தன்மையை எச்எம்டி குளோபல் நிறுவனம் இன்னும் அறிவிக்கவில்லை.கூடிய விரைவில் இந்த போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டு விற்பனைக்கும் கொண்டுவரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஒரே ஸ்மார்ட்போனில் 2 WhatsApp நம்பரை பயன்படுத்துவது எப்படி? உங்க போனில் டூயல் வாட்ஸ்அப் யூஸ் பண்ணலாமா?ஒரே ஸ்மார்ட்போனில் 2 WhatsApp நம்பரை பயன்படுத்துவது எப்படி? உங்க போனில் டூயல் வாட்ஸ்அப் யூஸ் பண்ணலாமா?

Series 30+ இயங்குதளம்

Series 30+ இயங்குதளம்

நோக்கியா 2660 பிளிப் போன் ஆனது Series 30+ இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது. எனவே இந்த பீச்சர் போனை
பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். குறிப்பாக இதன் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

கீழடியில் கண்டெடுக்கப்பட்ட செவ்வக வடிவ பகடை, பாசிமணிகள்: யானை தந்தத்தால் உருவாக்கப்பட்டதாம்!கீழடியில் கண்டெடுக்கப்பட்ட செவ்வக வடிவ பகடை, பாசிமணிகள்: யானை தந்தத்தால் உருவாக்கப்பட்டதாம்!

தனித்துவமான டிஸ்பிளே

தனித்துவமான டிஸ்பிளே

நோக்கியா 2660 பிளிப் போன் ஆனது 2.8-இன்ச் QVGA பிரைமரி டிஸ்பிளே வசதியுடன் வெளிவந்துள்ளது. பின்பு இந்த போனில் 1.77-இன்ச்
QQVGA அவுட்சைடு டிஸ்பிளே கூட உள்ளது. குறிப்பாக தனித்துவமான டிஸ்பிளே வசதியுடன் இந்த நோக்கியா போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ஸ்மார்ட்போனை விட இந்த பீச்சர் போனின் டிஸ்பிளே உங்களுக்கு ஒரு நல்ல திரை அனுபவத்தைக் கொடுக்கும் என்றே கூறலாம்.

அதீத சக்தி, 360 ஹெர்ட்ஸ் டிஸ்ப்ளே, பக்கா கேமிங் ஆதரவு: ஏசர் பிரேடேட்டர் ஹீலியோ 300 கேமிங் லேப்டாப் அறிமுகம்!அதீத சக்தி, 360 ஹெர்ட்ஸ் டிஸ்ப்ளே, பக்கா கேமிங் ஆதரவு: ஏசர் பிரேடேட்டர் ஹீலியோ 300 கேமிங் லேப்டாப் அறிமுகம்!

மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட்

மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட்

128எம்பி ரேம் மற்றும் 48எம்பி ஸ்டோரேஜ் ஆதரவைக் கொண்டுள்ளது இந்த நோக்கியா பீச்சர் போன். மேலும் கூடுதலாக 32ஜிபி வரை மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த நோக்கியா போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவும் உள்ளது.

Airtel, Jio, Vi இல் ரூ.200க்கும் குறைவான விலையில் கிடைக்கும் ப்ரீபெய்ட் திட்டங்கள்.. பட்ஜெட் பிரண்ட்லி பாஸ்..Airtel, Jio, Vi இல் ரூ.200க்கும் குறைவான விலையில் கிடைக்கும் ப்ரீபெய்ட் திட்டங்கள்.. பட்ஜெட் பிரண்ட்லி பாஸ்..

கேமராவில் சொதப்பல்

கேமராவில் சொதப்பல்

எச்எம்டி குளோபல் நிறுவனம் இந்த நோக்கியா போனின் கேமராவில் மட்டும் சொதப்பி வைத்துள்ளது. அதாவது 0.3 மெகாபிக்சல் கேமராவைக்கொண்டு வெளிவந்துள்ளது நோக்கியா 2660 பிளிப் பீச்சர் போன். இதற்கு கேமராவே இதில் இல்லாமல் இருந்திருக்கலாம். சிறுவர்கள் கூடஇந்த கேமராவை பயன்படுத்தமாட்டார்கள்.

எலோன் மஸ்க் போட்ட ஸ்கெட்ச்.. செவ்வாய் கிரகத்தில் மனிதர்களுக்கான திட்டம் இது தானா? வீடியோ இதோ..எலோன் மஸ்க் போட்ட ஸ்கெட்ச்.. செவ்வாய் கிரகத்தில் மனிதர்களுக்கான திட்டம் இது தானா? வீடியோ இதோ..

எம்பி3 பிளேயர்

எம்பி3 பிளேயர்

வயர்டு மற்றும் வயர்லெஸ் ஆகிய இரண்டிற்கும் பொருந்தும் எஃப் ரேடியோ ஆதரவைக் கொண்டுள்ளது இந்த நோக்கியா போன். மேலும் எம்பி3 பிளேயர்,புளூடூத் வி4.2, 3.5மிமீ ஆடியோ ஜாக் மற்றும் மைக்ரோ-யூஎஸ்பி போர்ட் போன்ற அசத்தலான அம்சங்களுடன் நோக்கியா 2660 பிளிப் பீச்சர் போன் வெளிவந்துள்ளது.

ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கி குறித்து யாரும் அறியாத 7 விஷயங்கள்- நம்பமுடியாத உண்மைகள்!ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கி குறித்து யாரும் அறியாத 7 விஷயங்கள்- நம்பமுடியாத உண்மைகள்!

உங்களுக்க பிடித்த கேம்

உங்களுக்க பிடித்த கேம்

ஸ்னேக், கிராஸி ரோடு, டெட்ரிஸ், ஆரோ மாஸ்டர் உள்ளிட்ட கேம்களை கொண்டுள்ளது புதிய நோக்கியா பீச்சர்போன். கண்டிப்பாக இது 90ஸ் கிட்ஸ்களுக்குபிடிக்கும் என்றே கூறலாம். குறிப்பாக இந்த போனை அனைத்து இடங்களுக்கும் எத்துச் சென்று பயன்படுத்த அருமையாக இருக்கும்.

உங்கள் ஸ்மார்ட்போனை டிவி ரிமோட்டாகவும் பயன்படுத்துவது எப்படி? ஆண்ட்ராய்டு மற்றும் iOS பயனர்களுக்கு டிப்ஸ்..உங்கள் ஸ்மார்ட்போனை டிவி ரிமோட்டாகவும் பயன்படுத்துவது எப்படி? ஆண்ட்ராய்டு மற்றும் iOS பயனர்களுக்கு டிப்ஸ்..

  சூப்பரான பேட்டரி

சூப்பரான பேட்டரி

நோக்கியா 2660 பிளிப் போனில் 1450 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. எனவே சிறந்த பேட்டரி பேக்கப் கிடைக்கும். சார்ஜ்; பற்றிய கவலை ஒருபோதும் இருக்காது. மேலும் இந்த புதிய நோக்கியா போனின் எடை 123 கிராம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மெசஞ்சர் ஆப் யூஸ் பண்றிங்களா? எந்தச் சூழ்நிலையிலும் இதை செய்யாதிங்க- மார்க் ஜூக்கர்பெர்க் எச்சரிக்கை!மெசஞ்சர் ஆப் யூஸ் பண்றிங்களா? எந்தச் சூழ்நிலையிலும் இதை செய்யாதிங்க- மார்க் ஜூக்கர்பெர்க் எச்சரிக்கை!

 4ஜி வசதி

4ஜி வசதி

நோக்கியா 2660 பிளிப் பீச்சர் போன் 4ஜி ஆதரவைக் கொண்டுள்ளது. மேலும் இந்த புதிய போன் இந்தியாவில் அறிமுகமானால் நல்ல வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் இந்நிறுவனம் விரைவில் பல அசத்தலான ஸ்மார்ட்போன்களையும் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.

மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

Best Mobiles in India

English summary
New Nokia 2660 Flip Feature Phone Price Revealed: full details: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X