Home
Mobile

சிங்கிள் சார்ஜில் 24 நாட்களுக்கு பேட்டரி.. அசத்தும் புதிய Nokia போன்.. யோசிக்காம வாங்கலாம்..

நோக்கியா நிறுவனம் இந்தியாவில் அறிமுகம் செய்யும் ஒவ்வொரு போன்களுக்கும் நல்ல வரவேற்பு உள்ளது. காரணம் என்னவென்றால் தனித்துவமான அம்சங்கள், தரமான வடிவமைப்பு மற்றும் பட்ஜெட் விலையில் இந்நிறுவனத்தின் போன்கள் வெளிவருகின்றன. எனவே இந்நிறுவனத்தின் போன்கள் அதிகளவில் விற்பனை செய்யப்படுகின்றன.

இந்நிலையில் நோக்கியா நிறுவனம் சமீபத்தில் நோக்கியா 150 எனும் பீச்சர் போனை அறிமுகம் செய்துள்ளது. இந்த போன் அருமையான பேட்டரி வசதியுடன் வெளிவந்துள்ளது என்றே கூறலாம். அதேபோல் இந்த புதிய போனின் ஹார்ட்வேரில் (Hardware) எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. ஆனால் மென்பொருள் (Softwawe) மற்றும் அதிலுள்ள அம்சங்கள் (Features) நவீனமாக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

சிங்கிள் சார்ஜில் 24 நாட்களுக்கு பேட்டரி.. அசத்தும் புதிய Nokia போன்..

மேலும் இப்போது இந்த புதிய நோக்கியா 150 போனின் அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்ப்போம். அதாவது இந்த நோக்கியா 150 பீச்சர் போன் ஆனது 1450எம்ஏஎச் நீக்கக்கூடிய பேட்டரி (Removable Battery) வசதியுடன் வெளிவந்துள்ளது. மேலும் இந்த போனை ஒருமுறை சார்ஜ் செய்தால் 24 நாட்களுக்கு பேட்டரி பேக்கப் கிடைக்கும் என்று நோக்கியா நிறுவனம் கூறியுள்ளது.

எனவே நோக்கியா 150 (Nokia 150) போன் வாங்கும் பயனர்களுக்கு சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதேபோல் நம் அனைவரும் ஸ்மார்ட்போன்களை தான் அதிகம் பயன்படுத்துகிறோம். வாட்ஸ்அப், யுபிஐ, பேஸ்புக், யூடியூப் போன்றவற்றைப் பயன்படுத்துவதன் மூலம் ஸ்மார்ட்போனின் பேட்டரி விரைவில் சார்ஜ் தீர்ந்துவிடும் நிலைமை உள்ளது.

எனவே இதுபோன்ற பீச்சர் போனை ஸ்மார்ட்போன் உடன் வைத்துக்கொள்வது நல்லது. இந்த பீச்சர் போன் நீண்ட நாட்கள் பேட்டரி ஆயுள் வழங்குகிறது. அதேபோல் பயணங்கள் அல்லது எதாவது அவசர வேலைகளில் இந்த பீச்சர் போன் கட்டாயம் கை கொடுக்கும். அதேபோல் ஐீ52 சான்றிதழ் உடன் இந்த நோக்கியா 150 போன் வெளிவந்துள்ளது.

குறிப்பாக 2.4 இன்ச் அளவிலான க்யூவிஜிஏ டிஸ்பிளேவை (QVGA Display) கொண்டு வெளிவந்துள்ளது இந்த புத்தம் புதிய நோக்கியா 150 பீச்சர் போன். மேலும் இதில் ப்ரீ-இன்ஸ்டால்டு எஃப்எம் ரேடியோ வசதி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே இந்த போனின் உதவியுடன் உங்களுக்குப் பிடித்த இசையைக் கேட்கலாம்.

நோக்கியா 150 மாடலில் 0.3 மெகாபிக்சல் விஜிஏ கேமரா (0.3MP VGA Camera) வசதி உள்ளது. மேலும் சீரிஸ் 30 பிளஸ் (Series 30+) எனும் இயங்குதளத்தைக் கொண்டுள்ளது இந்த நோக்கியா பீச்சர் போன். அதேபோல் இதில் மீடியாடெக் (MediaTek) சேர்ந்த ARM SoC ஆதரவு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக இதன் மென்பொருள் மற்றும் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது நோக்கியா நிறுவனம்.

மைக்ரோ எஸ்டி கார்டிற்கான ஆதரவை(Micro SD Card Support) கொண்டுள்ளது இந்த புத்தம் புதிய நோக்கியா 150 போன். மேலும் 3.5எம்எம் ஹெட்போன் ஜாக் (3.5 mm headphone jack), எம்பி3 பிளேயர், ஸ்னேக் கேமின் புதுப்பிக்கப்பட்ட பதிப்பு உள்ளிட்ட பல சிறப்பான வசதிகளைக் கொண்டுள்ளது இந்த புதிய நோக்கியா 150 பீச்சர் போன்.

சிங்கிள் சார்ஜில் 24 நாட்களுக்கு பேட்டரி.. அசத்தும் புதிய Nokia போன்..

அதேபோல் இந்த போனில்12-கீ நம்பர் பேட் (12-Key Number Pad) உடனான பிஸிக்கல் பட்டன்கள் மற்றும் ஆப்ரேட்டிங் சிஸ்டமிற்கு உதவும் நேவிகேஷன் பட்டன்களை (Navigation Buttons) உள்ளன. மேலும் மைக்ரோ யுஎஸ்பி (Micro USB) மூலம் இந்த போனை சார்ஜ் செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

நோக்கியா 150 மாடல் ஆனது மூன்று நிறங்களில் விற்பனைக்கு வரும். குறிப்பாக இந்த புதிய போனின் விலை மற்றும் விற்பனை தேதி ஆகிய விவரங்களை நோக்கியா நிறுவனம் இன்னும் வெளியிடவில்லை. இருந்தபோதிலும் விரைவில் இந்தியச் சந்தையில் நோக்கியா 150 மாடல் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
New Nokia 150 phone with 24 days of battery life on single charge has been launched : Check specifications : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X