மலிவு விலையில் நீங்கள் எதிர்பார்த்த அம்சங்களுடன் Nokia 110 2022 போன் அறிமுகம்.!

|

எச்எம்டி குளோபல் நிறுவனம் சில நாட்களுக்கு முன்பு நோக்கியா 8210 4ஜி எனும் பீச்சர் போன் மாடலை இந்தியச் சந்தையில் அறிமுகம் செய்தது. இதை தொடர்ந்து தற்போது புதிய நோக்கியா 110 2022 (Nokia 110 2022) எனும் பீச்சர் போன் மாடலையும் அறிமுகம் செய்துள்ளது இந்நிறுவனம்.

 நோக்கியா 110 2022 பீச்சர் போன்

நோக்கியா 110 2022 பீச்சர் போன்

குறிப்பாக இந்த நோக்கியா 110 2022 பீச்சர் போன் ஆனது கம்மி விலையில் தனித்துவமான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது. இப்போது இந்த
நோக்கியா பீச்சர் போனின் விலை மற்றும் அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.

ரூ.7999 க்கு துவம்சம் செய்த Infinix- டூயல் ப்ளாஷ் லைட், ஆண்ட்ராய்டு 12, 5000mAh பேட்டரி உடன் புது ஸ்மார்ட்போன்ரூ.7999 க்கு துவம்சம் செய்த Infinix- டூயல் ப்ளாஷ் லைட், ஆண்ட்ராய்டு 12, 5000mAh பேட்டரி உடன் புது ஸ்மார்ட்போன்

 அருமையான வடிவமைப்பு

அருமையான வடிவமைப்பு

நோக்கியா 110 2022 பீச்சர் போன் ஒரு நேர்த்தியான வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு இந்த போன் மென்மையான கீபேட்வசதியை வழங்குகிறது. குறிப்பாக இந்த புதிய நோக்கியா போன் சியான், ரோஸ் கோல்ட் மற்றும் Charcoal நிறங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

நீங்க நினைச்சு கூட பார்க்காத அம்சங்களுடன் வரும் Vivo V25 Pro: அவசரப்பட்டு வேற போன் வாங்கிடாதீங்க!நீங்க நினைச்சு கூட பார்க்காத அம்சங்களுடன் வரும் Vivo V25 Pro: அவசரப்பட்டு வேற போன் வாங்கிடாதீங்க!

ஆட்டோ கால் ரெக்கார்டிங் விருப்பம்

ஆட்டோ கால் ரெக்கார்டிங் விருப்பம்

நோக்கியா 110 2022 மாடல் ஆட்டோ கால் ரெக்கார்டிங் விருப்பம், மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் (32ஜிபி), கலர் டிஸ்பிளே, இன்-பில்ட் டார்ச், 1000 எம்ஏஎச் பேட்டரி, எஃப்எம் ரேடியோ மற்றும் ப்ரீ-லோடட் கேம்களை கொண்டு வெளிவந்துள்ளது. எனவே இந்த போனை பயன்படுத்துவதற்கு
மிகவும் அருமையாக இருக்கும்.

ரூ.10,000 விலைக்குள் பெஸ்ட் Smartphone வாங்க ஆசையா? இந்த சலுகையை மட்டும் மிஸ் பண்ணிடாதீங்க!ரூ.10,000 விலைக்குள் பெஸ்ட் Smartphone வாங்க ஆசையா? இந்த சலுகையை மட்டும் மிஸ் பண்ணிடாதீங்க!

இன்பில்ட் மியூசிக் பிளேயர்

இன்பில்ட் மியூசிக் பிளேயர்

குறிப்பாக நோக்கியா 110 2022 பீச்சர் போனில் ரியர் கேமரா ஆதரவு மற்றும் இன்பில்ட் மியூசிக் பிளேயர் ஆதரவு உள்ளது. குறிப்பாக இந்த நோக்கியாபோனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது எச்எம்டி குளோபல் நிறுவனம்.

உருமாறிய Gmail.! இனி உங்கள் இன்பாக்ஸ் லுக்கே மாறபோகுது.. இனி இப்படி தான் Gmail யூஸ் பண்ணனுமா?உருமாறிய Gmail.! இனி உங்கள் இன்பாக்ஸ் லுக்கே மாறபோகுது.. இனி இப்படி தான் Gmail யூஸ் பண்ணனுமா?

நோக்கியா 110 2022 பீச்சர் போன் விலை

நோக்கியா 110 2022 பீச்சர் போன் விலை

தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ள நோக்கியா 110 2022 பீச்சர் போனின் விலை ரூ.1,799-ஆக உள்ளது. மேலும் இந்த போன் உடன் ரூ.299 மதிப்புள்ள இயர்போன் இலவசமாக கிடைக்கும் என்ற தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக புதிய நோக்கியா 110 2022 மாடலை ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன்ஸ்டோர்களில் வாங்க முடியும்.

மேலும் இந்நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த நோக்கியா 8210 4ஜி எனும் பீச்சர் போன் மாடலின் அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.

சொந்த வீட்டை விற்ற பேஸ்புக் நிறுவனர் Mark Zuckerberg- பக்கத்து வீட்டுக்காரர் ஒரே குஷி: காரணம் தெரியுமா?சொந்த வீட்டை விற்ற பேஸ்புக் நிறுவனர் Mark Zuckerberg- பக்கத்து வீட்டுக்காரர் ஒரே குஷி: காரணம் தெரியுமா?

 நோக்கியா 8210 4ஜி

நோக்கியா 8210 4ஜி

நோக்கியா 8120 4ஜி பீச்சர் போன் ஆனது விண்டேஜ் ஃபீச்சர் போனால் ஈர்க்கப்பட்ட வடிவமைப்பைக் கொண்டுள்ளது. எனவே இதை பயன்படுத்த அருமையாகஇருக்கும். பின்பு 4ஜி வோல்ட்இ ஆதரவைக் கொண்டு இந்த நோக்கியா போன் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

IRCTC பயணிகளுக்கு இப்படி ஒரு புது விதியா? ரயில் பயணிகளே கொஞ்சம் கவனியுங்க! இது ரொம்ப முக்கியம்IRCTC பயணிகளுக்கு இப்படி ஒரு புது விதியா? ரயில் பயணிகளே கொஞ்சம் கவனியுங்க! இது ரொம்ப முக்கியம்

நோக்கியா 8210 4ஜி டிஸ்பிளே வசதி எப்படி?

நோக்கியா 8210 4ஜி டிஸ்பிளே வசதி எப்படி?

நோக்கியா 8210 4ஜி மாடல் ஆனது சிறிய டிஸ்பிளே வசதியுடன் வெளிவந்துள்ளது. அதாவது இந்த போன் 2.8-இன்ச் QVGA டிஸ்பிளேவுடன் வெளிவந்துள்ளது. பின்பு 320 x 240 பிக்சல்ஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான நோக்கியா 8210 4ஜி மாடல்.

200எம்பி கேமராவுடன் புதிய ஸ்மார்ட்போன் வாங்க ஆசையா? கொஞ்சம் வெயிட் பண்ணுங்க வருது ரெட்மி போன்.!200எம்பி கேமராவுடன் புதிய ஸ்மார்ட்போன் வாங்க ஆசையா? கொஞ்சம் வெயிட் பண்ணுங்க வருது ரெட்மி போன்.!

  வயர்லெஸ் எஃப்எம் ரேடியோ

வயர்லெஸ் எஃப்எம் ரேடியோ

அதேபோல் நோக்கியா 8210 4ஜி மாடலில் எம்பி3 பிளேயர், வயர்லெஸ் எஃப்எம் ரேடியோ, டார்ச்லைட் மற்றும் அசத்தலான கேமரா வசதியும் உள்ளன. குறிப்பாக இந்த போன் 48எம்பி ரேம் மற்றும் 128எம்பி மெமரி வசதியைக் கொண்டுள்ளது. .

மேலும் கூடுதலாக 32ஜிபி வரை மெமரி நீட்டிப்பு ஆதரவைக் கொண்டுள்ளது இந்த பீச்சர் போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு உள்ளது.

பேரு Philips நியாபகம் இருக்கா?- இனி தியேட்டரே வீட்டில், ஜொலிக்கும் லைட் உடன் அல்ட்ரா HD டிவி!பேரு Philips நியாபகம் இருக்கா?- இனி தியேட்டரே வீட்டில், ஜொலிக்கும் லைட் உடன் அல்ட்ரா HD டிவி!

சூப்பரான பேட்டரி

சூப்பரான பேட்டரி

நோக்கியா 8210 4ஜி போன் 1ஜிகாஹெர்ட்ஸ் Unisoc T107 பிராசஸர் மூலம் இயக்கப்படுகிறது. அதேபோல் 1450 எம்ஏஎச் பேட்டரி ஆதரவைக்கொண்டு இந்த பீச்சர் போன் வெளிவந்துள்ளதால் சார்ஜ் பற்றிய கவலை இருக்காது.

8GB மற்றும் 12GB ரேம் Oppo ஸ்மார்ட்போன்கள்- பட்ஜெட் டூ ப்ரீமியம், உங்க காசுக்கு நிச்சயம் கேரண்டி!8GB மற்றும் 12GB ரேம் Oppo ஸ்மார்ட்போன்கள்- பட்ஜெட் டூ ப்ரீமியம், உங்க காசுக்கு நிச்சயம் கேரண்டி!

நோக்கியா 8210 விலை

நோக்கியா 8210 விலை

நோக்கியா 8210 4ஜி போனில் S30+ OS வசதி உள்ளது. மேலும் இந்த போன் விஜிஏ ரியர் கேமரா ஆதரவு, 3.5mm ஹெட்ஃபோன் ஜாக், ப்ளூடூத் 5.0, 4ஜி வோல்ட்இ, மைக்ரோ யுஎஸ்பி போர்ட் போன்ற அட்டகாசமான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது.

குறிப்பாக சிவப்பு மற்றும் நீல நிறத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது இந்த நோக்கியா 8120 4ஜி பீச்சர் போன். அதேபோல் ரூ.3,999-விலையில் அமேசான் இந்தியா மற்றும் நோக்கியா ஸ்டோர்களில் இந்த பீச்சர் போனை வாங்க முடியும்.

மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

Best Mobiles in India

English summary
New Nokia 110 2022 Feature Phone Launched in India Check Price Specifications Sale Details: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X