Home
Mobile

அட்ரா சக்கை விலையில் Moto-வின் புது போன்.. வாட்டர் டச் டிஸ்பிளே, 12GB ரேம், 50MP கேமரா, 5500mAh பேட்டரி!

மோட்டோரோலா (Motorola) நிறுவனம் இந்தியாவில் ஒரு புதிய ஸ்மார்ட்போனின் அறிமுகத்தை 'டீஸ்' செய்ய தொடங்கியுள்ளது. பிரபல இகாமர்ஸ் வலைத்தளம் ஆன பிளிப்கார்ட்டில் (Flipkart) கிடைக்கும் "மர்மமான" மோட்டோரோலா போனின் ஹோம் பேஜ் ஆனது - அது மோட்டோ ஜி96 (Moto G96) ஸ்மார்ட்போன் ஆக இருக்கலாம் என்பதற்கான சில தடயங்களை தருகிறது.

ஆக மோட்டோ ஜி96 ஸ்மார்ட்போன் ஆனது இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்யப்பட (Moto G96 India Launch) அதிக நேரம் எடுக்காது என்பது போல் தெரிகிறது. சரி மோட்டோ ஜி96 எப்போது அறிமுகம் செய்யப்படலாம்? என்னென்ன அம்சங்களை பேக் செய்யலாம்? என்ன மாதிரியான விலை நிர்ணயத்தை பெறலாம். இதோ விவரங்கள்:

அட்ரா சக்கை விலையில் Moto-வின் புது போன்!

எப்போது அறிமுகம் செய்யப்படலாம்? பிளிப்கார்ட் டீசர் வழியாக வரவிருக்கும் மோட்டோரோலா ஸ்மார்ட்போன் ஆனது எட்ஜ் டிஸ்பிளே (Edge Display), தண்ணீரில் மூழ்கினாலும் போன் சேதமடையாமல் இருக்க அனுமதிக்கும் ஐபி ரேட்டிங் (IP Rating), டூயல் கேமரா (Dual Camera) செட்டப் மற்றும் ஸ்னாப்டிராகன் சிப் (Snapdragon Chip) ஆகியவற்றை கொண்டிருப்பதாக தெரிவிக்கிறது.

மேலும் இந்த மோட்டோரோலா ஸ்மார்ட்போனானது க்ரீன், பிங்க் மற்றும் இரண்டு வெவ்வேறு ப்ளூ கலர் ஆப்ஷன்கள் என மொத்தம் 4 கலர்களில் வரும் என்பது போல் தெரிகிறது. 2025 ஜூலை மாதம் இந்தியாவில் அறிமுகமாகும் (Phones Launching in India July 2025) முதல் போன்களில் இதுவும் ஒன்றாக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மோட்டோ ஜி96 ஸ்மார்ட்போன் என்ன விலைக்கு அறிமுகம் செய்யப்படலாம்? இந்த போன் இந்தியாவில் ரூ.25,000 க்கு கீழே என்கிற பட்ஜெட்டில் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மோட்டோ ஜி96 ஸ்மார்ட்போனின் சரியான விலை விவரங்கள் அறிமுகத்தின் போது தான் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.

மோட்டோ ஜி96 ஸ்மார்ட்போனில் என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்? முன்னதாக ஆண்ட்ராய்டு ஹெட்லைன்ஸ் (Android Headlines) வழியாக மோட்டோ ஜி96 மாடலின் முக்கிய அம்சங்கள் லீக் ஆகி இருந்தன. அதன்படி, இந்த போனில் 144ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 10-பிட் கலர் மற்றும் வாட்டர் டச் 2.0 உடனான 6.67-இன்ச் கர்வ்டு பிஓஎல்இடி டிஸ்பிளே இடம்பெறலாம்.

அட்ரா சக்கை விலையில் Moto-வின் புது போன்!

இது செல்பீ கேமராவிற்கான ஹோல்-பஞ்ச் கட்அவுட்டை கொண்டு இருக்கலாம். அதாவது இந்த ஸ்மார்ட்போனின் டிசைன் மோட்டோ ஜி85 மாடலில் பார்த்ததை போலவே இருக்கலாம். சிப்செட்டை பொறுத்தவரை இந்த போன் ஸ்னாப்டிராகன் 7எஸ் ஜென் 2 சிப்செட்டின் கீழ் இயங்கும் என்று கூறப்படுகிறது. இது 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி ஸ்டோரேஜ் உடன் வரலாம்.

மோட்டோரோலா நிறுவனம் புதிய 7எஸ் ஜென் 3 சிப்பை பயன்படுத்தவில்லை என்றாலும், 7எஸ் ஜென் 2 சிப் ஆனது மோட்டோ ஜி95 மாடலில் உள்ள ஸ்னாப்டிராகன் 6 ஜென் 4 சிப்பை விட ஒரு படி மேலே உள்ளது. கேமராக்களை பொறுத்தவரை மோட்டோ ஜி96 ஸ்மார்ட்போனில் 50எம்பி சோனி LYTIA 700C ப்ரைமரி சென்சார் மற்றும் 8எம்பி மேக்ரோ லென்ஸ் ஆகியவைகள் பேக் செய்யப்படலாம்.

முன்பக்கத்தில் 32எம்பி செல்பீ கேமரா இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பேட்டரியை பொறுத்தவரை இந்த போனில் 5500mAh பேட்டரி இடம்பெறலாம். பெயர் குறிப்பிடுவது போலவே இது மோட்டோ ஜி86 5ஜி (Moto G86 5G) ஸ்மார்ட்போனின் அப்கிரேடட்வெர்ஷன் ஆக இருக்கும்.

மோட்டோ ஜி86 ஸ்மார்ட்போன் ஆனது 6.67-இன்ச் 1.5கே கர்வ்டு pOLED டிஸ்பிளே, மீடியாடெக் டைமன்சிட்டி 7300 சிப்செட், OIS ஆதரவு உடன் 50எம்பி சோனி LYT-600 ப்ரைமரி கேமரா, 32எம்பி செல்பீ கேமரா, 33W பாஸ்ட் சார்ஜிங் உடனான 5200mAh பேட்டரி ஆகிய முக்கிய அம்சங்களை கொண்டுள்ளது.

Best Mobiles in India

English summary
New Motorola phone teased in India Could be Moto G96 What to Expect Price Specifications
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X