மறுபடியும் விலை கம்மி.. Samsung-க்கு புது ஸ்கெட்ச் போட்ட Motorola.. வாய்பிளக்க வைக்கும் Razr 50 Ultra போன்!
சாம்சங்கிற்கு எதிரான தனது பழைய பாணியை மோட்டோரோலா நிறுவனம் மாற்றிக்கொள்வது போல் தெரியவில்லை. விரைவில் அறிமுகம் செய்யப்படவுள்ள மோட்டோரோலா ரேஸர் 50 அல்ட்ரா (Motorola Razr 50 Ultra) ஸ்மார்ட்போனின் விலையை பற்றி அறிந்தால்.. அதென்ன பாணி என்பதை நீங்களே புரிந்துகொள்வீர்கள்.
வருகிற மே 16 ஆம் தேதியன்று மோட்டோரோலா எட்ஜ் 50 ஃப்யூஷன் (Motorola Edge 50 Fusion) ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படவுள்ள நிலையில்.. இன்னொரு புதிய மோட்டோரோலா ஸ்மார்ட்போனின் அறிமுகமாகும் உறுதி செய்யப்பட்டுள்ளது. அது மோட்டோரோலா ரேஸர் 50 அல்ட்ரா மாடலாகும்.

இது லெனோவாவுக்கு சொந்தமான மோட்டோரோலா பிராண்டிலிருந்து அடுத்து வெளியாகும் கிளாம்ஷெல் போல்டபிள் ஸ்மார்ட்போனாகும். மேலும் இது கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில் இந்தியாவில் அறிமுகமான மோட்டோரோலா ரேஸர் 40 அல்ட்ரா (Motorola Razr 40 Ultra) ஸ்மார்ட்போனின் "அப்கிரேடட் வெர்ஷன்" ஆக இருக்கும் என்பதிலும் சந்தேகமே வேண்டாம்.
ரேஸர் 40 அல்ட்ரா வெளியான நேரத்தில் அதன் விலை நிர்ணயம் தான் ஹைலைட் ஆக இருந்தது. இந்தியாவில் இந்த ஸ்மார்ட்போனின் சிங்கிள் 8ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் .ரூ.89,999 க்கு அறிமுகமானது. இது அந்த நேரத்தில் வாங்க கிடைத்த பெரும்பாலான சாம்சங் போல்டபிள் போன்களை விட மலிவான விலையாகும்.
அதே பாணியை ரேஸர் 50 அல்ட்ரா மாடலிலும் நாம் பார்க்கலாம். அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு முன்னதாக ஐரோப்பிய சில்லறை விற்பனையாளர் தளம் வழியாக மோட்டோரோலா எட்ஜ் 50 ஃப்யூஷன் ஸ்மார்ட்போனின் விலை நிர்ணயம் லீக் ஆகியுள்ளது.
அதன்படி இந்த ஸ்மார்ட்போனின் 12ஜிபி ரேம் + 512ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷனின் கீழ்.. இந்திய ரூபாய் மதிப்பின்படி தோராயமாக ரூ.1,07,00 க்கு அறிமுகம் செய்யப்படலாம்.மேலும் இது மோட்டோரோலா ரேஸர் பிளஸ் 2024 (Motorola Razr Plus 2024) உடன் தேர்ந்தெடுக்கப்பட்ட உலகளாவிய சந்தைகளில் விற்பனைக்கு வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் மோட்டோரோலா ரேஸ்ர் 50 அல்ட்ரா ஸ்மார்ட்போன் ஆனது மேலும் சில ரேம் மற்றும் ஸ்டோரேஜ் ஆப்ஷன்களிலும் அறிமுகம் செய்யப்படலாம். கலர் ஆப்ஷன்களை பொறுத்தவரை இது ப்ளூ, க்ரீன் மற்றும் பீச் ஃபஸ் நிறங்களில் விற்பனைக்கு வரலாம். வடிவமைப்பை பொறுத்தவரை, ஹோல் பஞ்ச் டிஸ்பிளேவை கொண்டிருக்கலாம் மற்றும் டூயல் ரியர் கேமரா செட்டப்பை பேக் செய்யலாம். இதுதவிர்த்து என்னென்ன அம்சங்களை பேக் செய்யும் என்கிற விவரங்கள் எதுவும் இல்லை.
மோட்டோரோலா ரேஸர் 40 அல்ட்ரா ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்களை பொறுத்தவரை, இது 165 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.9-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் பிஓஎல்இடி இன்னர் டிஸ்பிளே, 144 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான 3.6-இன்ச் பிஓஎல்இடி அவுட்டர் டிஸ்பிளேவை கொண்டுள்ளது.
ப்ராசஸர், ரேம் மற்றும் ஸ்டோரேஜை பொறுத்தவரை - அட்ரெனோ 730 ஜிபியு, 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் உடன் இணைக்கப்பட்ட 4என்எம் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 சிப்செட்டை கொண்டுள்ளது. கேமராக்களை பொறுத்தவரை டூயல் ரியர் கேமரா செட்டப்பை கொண்டுள்ளது.
அதில் ஆப்டிகல் இமேஜ் ஸ்டேபிலைசேஷன் ஆதரவுடன் 12 மெகாபிக்சல் மெயின் சென்சார் மற்றும் அல்ட்ரா-வைட் லென்ஸுடன் 13 மெகாபிக்சல் கேமரா உள்ளது. முன்பக்கத்தில் (இன்னர் டிஸ்பிளேவில்) 32 மெகாபிக்சல் செல்பீ கேமரா உள்ளது. பேட்டரி மற்றும் ஃபாஸ்ட் சார்ஜிங்கை பொறுத்தவரை 30வாட்ஸ் வயர்டு மற்றும் 5வாட்ஸ் வயர்லெஸ் சார்ஜிங் ஆதரவுடன் 3800mAh பேட்டரி உள்ளது.
மே 16 அறிமுகமாகும் மோட்டோரோலா எட்ஜ் 50 ஃப்யூஷனின் இந்திய விலையை பொறுத்தவரை, இந்த போன் ஐரோப்பாவில் இந்திய ரூபாய் தோராயமாக ரூ.35,900க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஆகையால் இதேபோன்ற விலையை நாம் இந்திய சந்தையிலும் எதிர்பார்க்கலாம். அறிமுகத்திற்கு பின்னர் இது பிளிப்கார்ட் வலைத்தளம் வழியாக வாங்க கிடைக்கும் என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








