நாளை விற்பனைக்கு வரும் புது motorola போன்.. சோனி கேமரா.. 68W சார்ஜிங்.. எந்த மாடல்? என்ன விலை?
மோட்டோரோலா (motorola) நிறுவனம் சமீபத்தில் மோட்டோரோலா எட்ஜ் 60 ஃபியூஷன் (Motorola Edge 60 FUSION) ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்தது. இந்நிலையில் இந்த புதிய மோட்டோரோலா போன் முதல் முறையாக பிளிப்கார்ட் தளத்தில் நாளை (ஏப்ரல் 9) விற்பனைக்கு வர இருக்கிறது. மோட்டோரோலா எட்ஜ் 60 ஃபியூஷன் போனின் விலை மற்றும் அம்சங்களை இப்போது பார்க்கலாம்.
8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட மோட்டோரோலா எட்ஜ் 60 ஃபியூஷன் ஸ்மார்ட்போன் விலை ரூ.22,999-ஆக உள்ளது. மேலும் இதன் 12ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் விலை ரூ.24,999-ஆக உள்ளது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் ரூ.2000 தள்ளுபடியும் உள்ளது. எனவே இந்த போனை ரூ.20,999 விலையில் வாங்கிவிட முடியும்.

மோட்டோரோலா எட்ஜ் 60 ஃபியூஷன் அம்சங்கள் (Motorola Edge 60 FUSION Specifications): ஆக்டோ கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 7400 4என்எம் (Octa Core MediaTek Dimensity 7400 4nm) சிப்செட் வசதி இந்த போனில் உள்ளது. மேலும் மாலி ஜி615 எம்சி2 ஜிபியு (Mali-G615 MC2 GPU) கிராபிக்ஸ் கார்டு ஆதரவும் இந்த போனில் உள்ளது.
6.7-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் 10-பிட் ஒஎல்இடி டிஸ்பிளே வசதியுடன் மோட்டோரோலா எட்ஜ் 60 ஃபியூஷன் போன் வெளிவந்தது. பின்பு எச்டிஆர் 10 பிளஸ் ஆதரவு, 120Hz ரெஃப்ரஷ் ரேட், 360 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் (360Hz touch sampling rate), கார்னிங் கொரில்லா கிளாஸ் 7ஐ புரொடெக்சன் (Corning Gorilla Glass 7i protection), 4500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் உள்ளிட்ட பல அம்சங்கள் இதன் டிஸ்பிளேவில் உள்ளன.
மோட்டோரோலா எட்ஜ் 60 ஃபியூஷன் ஸ்மார்ட்போன் பின்புறம் 50எம்பி சோனி எல்ஒய்டி-700சி மெயின் சென்சார் மற்றும் 13எம்பி அல்ட்ரா வைடு கேமரா உள்ளன. மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமரா உள்ளது. IP68 + IP69 ரேட்டிங் டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ட் ஆதரவுடன் இந்த புதிய மோட்டோரோலா போன் வெளிவந்தது.
ஆண்ட்ராய்டு 15 (Android 15) இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு மோட்டோரோலா எட்ஜ் 60 ஃபியூஷன் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டது. ஆனாலும் ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் இந்த போனுக்கு கிடைக்கும். அதேபோல் இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor) வசதி இந்த போனில் உள்ளது.
MIL-STD-810H இராணுவ தர சான்றிதழுடன் மோட்டோரோலா எட்ஜ் 60 ஃப்யூஷன் அறிமுகம் செய்யப்பட்டது. யுஎஸ்பி டைப்-சி ஆடியோ (USB Type-C audio), ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், டால்பி அட்மாஸ் (Dolby Atmos) உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்கள் இந்த மோட்டோரோலா எட்ஜ் 60 ஃபியூஷன் ஸ்மார்ட்போனில் உள்ளன.
5500mAh பேட்டரி உடன் மோட்டோரோலா எட்ஜ் 60 ஃபியூஷன் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டது. மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 68W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. 5ஜி, 4ஜி வோல்ட்இ, வைஃபை 6 802.11ஏஎக்ஸ், ப்ளூடூத் 5.4, ஜிபிஎஸ், யூ.எஸ்.பி டைப்-சி உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த போனில் உள்ளன.


Click it and Unblock the Notifications








