Home
Mobile

Snapdragon 888+ சிப்செட் வசதியுடன் விரைவில் அறிமுகமாகும் மோட்டோரோலா போன்.!

மிகவும் அதிகம் எதிர்பார்த்த மோட்டோரோலா எட்ஜ் 30 ஃபியூஷன் (Motorola Edge 30 Fusion) ஸ்மார்ட்போன் ஆனது இந்தியாவில் வரும் செப்டம்பர் 8-ம் தேதி அறிமுகமாகும் என்று தகவல் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் தனித்துவமான அம்சங்களுடன் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

மோட்டோரோலா எட்ஜ் 30 ஃபியூஷன்

மோட்டோரோலா எட்ஜ் 30 ஃபியூஷன்

குறிப்பாக மோட்டோரோலா எட்ஜ் 30 ஃபியூஷன் ஸ்மார்ட்போன் உடன் மோட்டோ எக்ஸ்30 ப்ரோ, மோட்டோ எஸ்30 ப்ரோ ஸ்மார்ட்போன்களும் அறிமுகமாகும்என்று கூறப்படுகிறது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன்கள் தனித்துவமான அம்சங்களுடன் சற்று உயர்வான விலையில் அறிமுகமாகும் என்றுதெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இணையத்தில் கசிந்த மோட்டோரோலா எட்ஜ் 30 ஃபியூஷன் ஸ்மார்ட்போனின் அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.

ஸ்னாப்டிராகன் சிப்செட்

ஸ்னாப்டிராகன் சிப்செட்

மோட்டோரோலா எட்ஜ் 30 ஃபியூஷன் ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 888 பிளஸ் சிப்செட் வசதி உள்ளது. எனவே கேமிங் பயனர்கள் இந்தஸ்மார்ட்போனை நம்பி வாங்கலாம். குறிப்பாக இந்த போனில் ஆப்ஸ்களை தடையின்றி பயன்படுத்த முடியும்.

இதுதவிர அட்ரினோ 660ஜிபியு ஆதரவு கொண்டு இந்த மோட்டோரோலா எட்ஜ் 30 ஃபியூஷன் ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். குறிப்பாக இது மேம்பட்ட வேகத்தை கொடுக்கும். பின்பு ஆண்ட்ராய்டு 12 இயங்குதள வசதியுடன் வெளிவரும் இந்த அட்டகாசமான மோட்டோரோலா எட்ஜ் 30 ஃபியூஷன் மாடல்.

சூப்பரான டிஸ்பிளே

சூப்பரான டிஸ்பிளே

மோட்டோரோலா எட்ஜ் 30 ஃபியூஷன் ஸ்மார்ட்போனில் 6.5-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் ஒஎல்இடி டிஸ்பிளே வசதி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக பெரிய டிஸ்பிளே வசதி உள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

அதேபோல் 144 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 360 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட், எச்டிஆர் 10 பிளஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனின் வடிவமைப்பு மிகவும் அருமையாக இருக்கும்.

அருமையான கேமரா

அருமையான கேமரா

விரைவில் அறிமுகமாகும் இந்த மோட்டோரோலா போன் 50எம்பி மெயின் சென்சார் + 13எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 2எம்பி டெப்த் சென்சார் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது.

மேலும் 32எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஷ் மற்றும் பல கேமரா அம்சங்களுடன் இந்த மோட்டோரோலா ஸ்மார்ட்போன் அறிமுகமாகும்.

  கனெக்டிவிட்டி

கனெக்டிவிட்டி

குறிப்பாக 5ஜி, 4ஜி வோல்ட்இ, டூயல்-பேண்ட் வைஃபை, ப்ளூடூத் 5.2, ஏ-ஜிபிஎஸ், என்எப்சி போன்ற கனெக்டிவிட்டி ஆதரவுகளை கொண்டு வெளிவரும் இந்த மோட்டோரோலா எட்ஜ் 30 ஃபியூஷன் ஸ்மார்ட்போன் மாடல். குறிப்பாக இந்த புதிய போன் குறைந்த எடையில் வெளிவரும் என்று கூறப்படுகிறது.

512ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ்

512ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ்

12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி/512ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான மோட்டோரோலா எட்ஜ் 30 ஃபியூஷன். அதேபோல்இந்த போனின் கேமரா பேட்டரி வசதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது மோட்டோரோலா நிறுவனம்.

பாஸ்ட் சார்ஜிங் வசதி

பாஸ்ட் சார்ஜிங் வசதி

அதாவது மோட்டோரோலா எட்ஜ் 30 ஃபியூஷன் ஸ்மார்ட்போனில் 4400 எம்ஏஎச் பேட்டரி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே நீண்ட நேரம் பேட்டரிபேக்கப் கிடைக்கும். மேலும் 68 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதி, இன்-டிஸ்பிளே கைரேகை ஸ்கேனர் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களுடன் வெளிவரும் இந்த மோட்டோரோலா ஸ்மார்ட்போன்.

மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

Best Mobiles in India

English summary
New Motorola Edge 30 Fusion Smartphone to Launch in India on September 8: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X