Home
Mobile

முரட்டு போனை இறக்கிய MOTO..144Hz டிஸ்பிளே, 50எம்பி OIS கேம், வாட்டர் ரெசிஸ்டென்ட், 68W சார்ஜிங்! என்ன மாடல்?

144ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான பிஓஎல்இடி டிஸ்பிளே, ஓஐஎஸ் ஆதரவு உடனான 50எம்பி மெயின் கேமரா, டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டென்ட்டிற்கான ஐபி68 ரேட்டிங், 68W பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு போன்ற முக்கிய அம்சங்களுடன் வரும் ஒரு ஸ்மார்ட்போனை "முரட்டு போன்" என்று சொல்வதில் எத தவறும் இல்லை!

நாம் இங்கே பேசுவது மோட்டோரோலா எட்ஜ் 2023 (Motorola Edge 2023) ஸ்மார்ட்போனை பற்றித்தான். இது லெனோவாவுக்கு சொந்தமான மோட்டோரோலா நிறுவனத்தின் லேட்டஸ்ட் 5ஜி ஸ்மார்ட்போனாக (5G Smartphone) அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் விலை என்ன? அம்சங்கள் என்ன? இதோ விவரங்கள்:

முரட்டு போனை இறக்கிய MOTO.. என்ன மாடல்?

மோட்டோரோலா எட்ஜ் 2023 5ஜி ஸ்மார்ட்போனின் அம்சங்கள்: டூயல் சிம் நானோ ஆதரவுடன் (Dual Nano SIM Support) அறிமுகம் செய்யப்பட்டுள்ள மோட்டோரோலா எட்ஜ் 2023 ஸ்மார்ட்போன் ஆனது ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் (Android 13 OS) அடிப்படையிலான மோட்டோரோலாவின் சொந்த மை யுஎக்ஸ் ஸ்கின் (My UX Skin) உடன் இயங்குகிறது.

டிஸ்பிளேவை பொறுத்தவரை, இது 144ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (144Hz Refresh Rate) மற்றும் எச்டிஆர் 10 பிளஸ் (HDR10+) ஆதரவு உடனான 6.6-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் (1080 x 2400 பிக்சல்ஸ்) பிஓஎல்இடி டிஸ்பிளேவை (POLED Display) கொண்டுள்ளது. செல்பீ கேமராவிற்கான ஹோல்- பஞ்ச் கட்அவுட் (Hole Punch Cutout) ஆனது டிஸ்பிளேவின் மேல் மையத்தில் வைக்கப்பட்டுள்ளது.

ப்ராசஸரை பொறுத்தவரை, இது மீடியாடெக் டைமைன்சிட்டி 7030 சிப்செட் (MediaTek Dimensity 7030 SoC) மூலம் இயக்கப்படுகிறது. இது 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் உடன் இணைக்கப்பட்டுள்ளது. கேமராக்களை பொறுத்தவரை, மோட்டோரோலா எட்ஜ் 2023 ஆனது டூயல் ரியர் கேமரா செட்டப்பை பேக் (Dual Rear Camera Setup) செய்கிறது.

அதில் எப்/1.4 அபெர்ச்சர் லென்ஸ் (f/1.4 Aperture Lens) மற்றும் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (Optical image Stabilization - OIS) உடனான 50 மெகாபிக்சல் மெயின் சென்சார் + 13 மெகாபிக்சல் அல்ட்ரா வைட் ஆங்கிள் லென்ஸ் உள்ளது. செல்பீக்கள் மற்றும் வீடியோ கால்களுக்காக முன்பக்கத்தில் 32 மெகாபிக்சல் செல்பீ கேமரா உள்ளது.

டால்பி அட்மாஸ் சவுண்ட் தொழில்நுட்பம் (Dolby Atmos Sound Technology) மற்றும் மோட்டோரோலா ஸ்பேஷியல் சவுண்டிற்கான (Motorola Spatial Sound) ஆதரவுடன் வரும் இந்த ஸ்மார்ட்போனில் 5ஜி (5G), 4ஜி எல்டிஇ (4G LTE), வைஃபை 6இ (Wi-Fi 6E), ப்ளூடூத் (Bluetooth), ஜிபிஎஸ் (GPS) மற்றும் யூஎஸ்பி டைப்-சி போர்ட் (USB Type-C Port) போன்ற கனெக்டிவிட்டி ஆப்ஷன்கள் உள்ளன.

முன்னரே குறிப்பிட்டப்படி இது நீர் மற்றும் தூசி எதிர்ப்பிற்கான (Water and dust resistance) ஐபி68 மதீப்பீட்டையும் (IP68 Rating) பெற்றுள்ளது. மேலும் மோட்டோரோலா எட்ஜ் 2023 ஸ்மார்ட்போனில் இன்-டிஸ்ப்ளே ஃபிங்கர் பிரிண்ட் சென்சாரும் (In-display Fingerprint Sensor) உள்ளது.

மோட்டோரோலா எட்ஜ் 2023 5ஜி ஸ்மார்ட்போனின் விலை: அமெரிக்காவில் மோட்டோரோலா எட்ஜ் 2023 ஸ்மார்ட்போனின் சிங்கிள் 8ஜிபி ரேம் + 256ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷனின் விலை நிர்ணயம் இந்திய ரூபாய் மதிப்பின்படி சுமார் ரூ.49,000 க்கு அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.

எக்லிப்ஸ் பிளாக் (Eclipse Black) என்கிற சிங்கிள் கலர் ஆப்ஷனில் மட்டுமே அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த ஸ்மார்ட்போன் தற்போது மோட்டோரோலா.காம் (motorola.com), பெஸ்ட் பை (Best Buy) மற்றும் அமேசான் (Amazon) வழியாக அமெரிக்காவில் வாங்க கிடைக்கிறது. இது எப்போது இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படும் என்கிற தகவல் இன்னும் வெளிப்படுத்தப்படவில்லை.

More from GizBot

Best Mobiles in India

English summary
New Motorola 5G Smartphone Motorola Edge 2023 Launched in US Check Price Specifications
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X