Home
Mobile

ஆரம்பமே சலுகை: முதல் முறையாக இந்தியாவில் விற்பனைக்கு வருகிறது Motorola எட்ஜ் 40.! என்ன விலை?

மிகவும் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட மோட்டோரோலா எட்ஜ் 40 ஸ்மார்ட்போன் இன்று (30-5-2023) விற்பனைக்கு வருகிறது. அதாவது பிளிப்கார்ட் மற்றும்
மோட்டோரோலா இணையதளத்தில் இன்று மதியம் 12 மணி அளவில் இந்த புதிய மோட்டோரோலா வாங்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட மோட்டோரோலா எட்ஜ் 40 ஸ்மார்ட்போனின் விலை ரூ.29,999-ஆக உள்ளது. ஆனால் பிளிப்கார்ட் தளத்தில் வங்கி சலுகைகளைப் பயன்படுத்தி, அதாவது தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டு பயன்படுத்தி இந்த புதிய மோட்டோரோலா எட்ஜ் 40 போனை ரூ.27,999-விலையில் வாங்க முடியும்.

முதல் முறையாக இந்தியாவில் விற்பனைக்கு வருகிறது Motorola எட்ஜ் 40.!

6.55-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் 3டி வளைந்த pOLED டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது மோட்டோரோலா எட்ஜ் 40. மேலும் 144 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 1200 நிட்ஸ் ப்ரைட்னஸ், 360 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த அட்டகாசமான மோட்டோரோலா ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. குறிப்பாக இதன் டிஸ்பிளே ஒரு தனித்துவமான அனுபவத்தைக் கொடுக்கும்.

ஆக்டோ-கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 8020 சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது இந்த புதிய மோட்டோரோலா எட்ஜ் 40 ஸ்மார்ட்போன். எனவே இந்த ஸ்மார்ட்போனை இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். வீடியோ எடிட்டிங் ஆப், கேமிங் ஆப் உள்ளிட்ட அனைத்தையும் தடையின்றி பயன்படுத்த முடியும். குறிப்பாக ஆண்ட்ராய்டு 13 இயங்குதளத்தைக் கொண்டுள்ளது இந்த மோட்டோரோலா எட்ஜ் 40 ஸ்மார்ட்போன்.

முதல் முறையாக இந்தியாவில் விற்பனைக்கு வருகிறது Motorola எட்ஜ் 40.!

50எம்பி பிரைமரி கேமரா + 13எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் என்கிற டூயல் ரியர் கேமராவைக் கொண்டு இந்த மோட்டோரோலா எட்ஜ் 40 ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் அட்டகாசமான புகைப்படங்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன்.

மோட்டோரோலா எட்ஜ் 40 ஸ்மார்ட்போனில் 4400 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் கிடைக்கும். பின்பு 68 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதி, 5 வாட்ஸ் ரிவர்ஸ் சார்ஜிங்,15 வாட்ஸ் வயர்லெஸ் சார்ஜிங் வசதி உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த மோட்டோரோலா எட்ஜ் 40 மாடல்.

இன்-டிஸ்பிளே கைரேகை ஸ்கேனர் வசதியைக் கொண்டுள்ளது இந்த மோட்டோரோலா எட்ஜ் 40 ஸ்மார்ட்போன். பின்பு டூயல் பேண்ட் வைஃபை, புளூடூத் 5.2, ஜிபிஎஸ், என்எப்சி, யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டுள்ளது இந்த மோட்டோரோலா எட்ஜ் 40 மாடல். மேலும் இந்த போனின் எடை 167 கிராம் என்பது குறிப்பிடத்தக்கது. எக்லிப்ஸ் பிளாக், நெபுலா க்ரீன் மற்றும் லூனார் ப்ளூ நிறங்களில் இந்த மோட்டோரோலா எட்ஜ் 40 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

முதல் முறையாக இந்தியாவில் விற்பனைக்கு வருகிறது Motorola எட்ஜ் 40.!

நிறைகள் மற்றும் குறைகள்: மோட்டோரோலா எட்ஜ் 40 5ஜி போனில் அனைத்து அம்சங்களும் அருமையாக உள்ளன. ஆனால் பேட்டரி விஷயத்தில் சொதப்பி உள்ளது மோட்டோரோலா. அதாவது இந்த போன் 4400 எம்ஏஎச் பேட்டரியடன் வெளிவந்துள்ளது. குறிப்பாக மீடியாடெக் டைமன்சிட்டி 8020 சிப்செட் மற்றும் 144 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 1200 நிட்ஸ் ப்ரைட்னஸ் கொண்ட டிஸ்பிளே போன்றவற்றுடன் இந்த பேட்டரி ஒரு நாள் கூட நீடிக்காது. அதாவது விரைவில் சார்ஜ் தீர்ந்துவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.

More from GizBot

Best Mobiles in India

English summary
New Motorola 5G phone to go on first sale in India check Motorola Edge 40 pros and cons before buying it : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X