Home
Mobile

உண்மையாவே விலை இவ்ளோ தானா? 6.55-இன்ச் pOLED டிஸ்பிளே, 12GB ரேம், IP ரேட்டிங், 5000mAh பேட்டரி.. என்ன மாடல்?

உண்மையாகவே இந்த ஸ்மார்ட்போனின் விலை இவ்ளோ தானா? 6.55-இன்ச் பிஓஎல்இடி டிஸ்பிளே, 12ஜிபி ரேம், ஐபி வாட்டர் ப்ரூஃப் ரேட்டிங், 5000எம்ஏஎச் பேட்டரி என்று.. கிட்டத்தட்ட எல்லா அம்சங்களும் அட்டகாசமாக இருக்கிறதே.. என்று கூறவைக்கும்படியான ஒரு ஸ்மார்ட்போன் தான் மோட்டோ ஜி84 5ஜி!

வருகிற செப்டம்பர் 1 ஆம் தேதியன்று இந்தியியாவில் அறிமுகம் செய்யப்படவுள்ள மோட்டோ ஜி84 5ஜி (Moto G84 5G) விலை நிர்ணயம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. இது என்ன விலைக்கு வரும்? மேற்கண்ட முக்கிய அம்சங்களை தவிர்த்து இது வேறு என்னென்ன அம்சங்களை பேக் செய்யும்? இதோ விவரங்கள்:

உண்மையாவே விலை இவ்ளோ தானா? செப்.1ல் Moto G84 5G இந்திய அறிமுகம்!

மோட்டோ ஜி84 5ஜி ஸ்மார்ட்போனின் டிசைன், டிஸ்பிளே, ப்ராசஸர், கேமரா மற்றும் பேட்டரி உள்ளிட்ட பல முக்கிய விவரக்குறிப்புகளை மோட்டோரோலா நிறுவனம் ஏற்கனேவே அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது. இதற்கிடையில் நம்பகமான டிப்ஸ்டர்களில் ஒருவரின் வழியாக இந்த புதிய 5ஜி ஸ்மார்ட்போனின் விலை வரம்பும் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

டிப்ஸ்டர் யோகேஷ் பிராரின் (@heyitsyogesh) சமீபத்திய ட்வீட்டின்படி, மோட்டோ ஜி84 5ஜி ஸ்மார்ட்போனின் இந்திய விலை நிர்ணயம் ரூ.22,000 - ரூ.24,000 ஆக இருக்கும். இது 12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜுடன் இணைக்கப்பட்ட ஆக்டா-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 695 சிப்செட் மூலம் இயக்கப்படும்.

உறுதி செய்யப்பட்ட அம்சங்களை பொறுத்தவரை, மோட்டோ ஜி84 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் (Android 13 OS) உடன் அனுப்பப்படும். மேலும் இது மார்ஷ்மெல்லோ ப்ளூ, மிட்நைட் ப்ளூ மற்றும் விவா மெஜந்தா கலர் ஆப்ஷன்களில் வாங்க கிடைக்கும் என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது; கூடவே இது வேகன் லெதர் ஃபினிஷையும் (Vegan Leather Finish) வழங்கும்.

டிஸ்பிளேவை பொறுத்தவரை, மோட்டோ ஜி84 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (120Hz Refresh Rate) மற்றும் 1300 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் (1300 Nits Peak Brightness) உடனான 6.55-இன்ச் 10-பிட் பிஓஎல்இடி டிஸ்பிளேவை (pOLED Display) கொண்டிருக்கும். கேமராக்களை பொறுத்தவரை, இதில் ட்ரிபிள் ரியர் கேமரா யூனிட் பேக் செய்யப்படும். அதில் 50 மெகாபிக்சல் மெயின் கேமரா இருக்கும்.

மற்ற கேமராக்களை பொறுத்தவரை, ஆப்டிகல் இமேஜ் ஸ்டேபிலைசேஷன் (Optical image stabilisation - OIS) உடனான இரண்டாம் நிலை 8 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் சென்சார் மற்றும் 8 மெகாபிக்சல் டெப்த் சென்சார் இடம்பெறும். இதன் கேமரா செட்டப்பில் எல்இடி ஃபிளாஷ் யூனிட்டும் இருக்கும். முன்பக்க கேமரா, அதாவது செல்பீ கேமராவின் சென்சார் குறித்து எந்த தகவலும் இல்லை.

கேமராக்களின் வடிவமைப்பை பொறுத்தவரை, செல்பீ கேமராவானது டிஸ்பிளேவின் மேலே உள்ள ஹோல்-பஞ்ச் ஸ்லாட்டில் (Hole-punch slot) வைக்கப்படும். ரியர் கேமரா செட்டப்பை பொறுத்தவரை, பேக் பேனலின் மேல் இடது மூலையில், சற்றே உயர்த்தப்பட்ட செவ்வக கேமரா ஐலேண்ட்டில் (Rectangular camera island) உட்பொதிக்கப்பட்டுள்ளது.

பேட்டரியை பொறுத்தவரை, மோட்டோ ஜி84 5ஜி ஆனது 30W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 5,000mAh பேட்டரியை பேக் செய்யும் என்பதையும் மோட்டோரோலா உறுதிப்படுத்தியுள்ளது. மேலும் இது தூசி மற்றும் ஸ்பிளாஷ் எதிர்ப்பிற்கான ஐபி54 ரேடிங்கையும் (IP54 Rating) பெற்றுள்ளது. மேலும் இது டால்பி அட்மோஸ் (Dolby Atmos), மோட்டோ ஸ்பேஷியல் சவுண்ட் (Moto Spatial sound) மற்றும் ஸ்போர்ட்ஸ் ஸ்டீரியோ ஸ்பீக்கர்களையும் (Sports stereo Speakers) ஆதரிக்கிறது.

ஒட்டுமொத்தமாக மோட்டோ ஜி84 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது கடந்த 2022 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட மோட்டோ ஜி82 5ஜி (Moto G82 5G) மாடலின் தொடர்ச்சியாக இருக்கும்; அதே சமயம் இந்த 2023இல் வெளியான மோட்டோ ஜி73 5ஜி (Moto G73 5G) மாடலை விட மேம்படுத்தப்பட்ட அம்சங்களை கொண்டிருக்கும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
New Moto G84 5G Smartphone Price Range Tipped Ahead India Launch on September 1
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X