Home
Mobile

ரூ.10,000 பட்ஜெட்டில் புதிய 5ஜி போனை அறிமுகம் செய்து கெத்து காட்டிய Motorola.!

மோட்டோரோலா நிறுவனம் மோட்டோ எக்ஸ்40 என்ற ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் உடன் பட்ஜெட் விலையில் மோட்டோ ஜி53 5ஜி ஸ்மார்ட்போனை கூட அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன்கள் தற்போது சீனாவில் மட்டுமே அறிமுகம் செய்யப்பட்டுள்து. ஆனால் கூடிய விரைவில் இந்தியா உட்பட அனைத்து நாடுகளிலும் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முதலில் இந்த மோட்டோ ஜி53 5ஜி ஸ்மார்டபோனின் அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்ப்போம். அதாவது இந்த மோட்டோ ஜி53 5ஜி ஆனது 6.5-இன்ச் எச்டி பிளஸ் எல்சிடி டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது. பின்பு 720x1600பிக்சல்ஸ், 20:9 ஆஸ்பெக்ட் ரேஷியோ, 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு அம்சங்களுடன் இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.

ரூ.10,000 பட்ஜெட்டில் 5ஜி போனை அறிமுகம் செய்து கெத்து காட்டிய Moto!

ஆக்டா-கோர் குவால்காம் சிப்செட் மூலம் இந்த மோட்டோ ஜி53 5ஜி ஸ்மார்டபோன் இயங்குகிறது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனில் கேமிங் ஆப்புகளைத் தடையின்றி பயன்படுத்த முடியும். அதேபோல் ஆண்ட்ராய்டு 13 இயங்குதளத்தைக் கொண்டுள்ளது இந்த மோட்டோ போன். பின்பு இந்த போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

4ஜிபி/8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் ஆதரவுடன் இந்த புதிய மோட்டோ ஜி53 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் கூடுலதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த புத்தம் புதிய ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு உள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனின் கேமரா வசதியும் அருமையாகத் தான் உள்ளது.

அதாவது மோட்டோ ஜி53 5ஜி ஸ்மார்டபோன் 50எம்பி மெயின் கேமரா + 2எம்பி மேக்ரோ சென்சார் என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. எனவே இந்த கேமராக்கள் உதவியுடன் தரமான புகைப்படங்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமராவுடன் வெளிவந்துள்ளது இந்த அட்டகாமசான மோட்டோ ஸ்மார்ட்போன்.

ரூ.10,000 பட்ஜெட்டில் 5ஜி போனை அறிமுகம் செய்து கெத்து காட்டிய Moto!

மோட்டோ ஜி53 5ஜி ஸ்மார்டபோனில் 5000 எம்ஏஎச் பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது. எனவே நாம் 5ஜி சேவையை பயன்படுத்த இந்த ஸ்மார்ட்போன் மிகவும் அருமையாக இருக்கும். குறிப்பாக 5ஜி சேவைக்கு தகுந்தபடி இந்த ஸ்மார்ட்போன் உருவாக்கப்பட்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனை வாங்க மக்கள் அதிக ஆர்வம் காட்டுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதேபோல் 18 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதி, கைரேகை ஸ்கேனர் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த மோட்டோ ஜி53 5ஜி ஸ்மார்ட்போன். குறிப்பாக பிளாக் மற்றும் கிரே நிறத்தில் இந்த மோட்டோ ஜி53 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல் இந்த ஸ்மார்ட்போனின் எடை 183 கிராம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரூ.10,000 பட்ஜெட்டில் 5ஜி போனை அறிமுகம் செய்து கெத்து காட்டிய Moto!

5ஜி, 4ஜி எல்டிஇ, வைஃபை 6, புளூடூத், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டுள்ளது இந்த மோட்டோ ஜி53 ஸ்மார்ட்போன். குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனின் விலை 899 yuan (இந்திய மதிப்பில் ரூ.10,690) ஆக உள்ளது. அதேபோல் இந்தியாவில் கூட இந்த போன் ரூ.10,000 பட்ஜெட்டில் தான் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. குறிப்பாக இந்த போனின் அனைத்து அம்சங்களுமே நன்றாக தான் உள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் அதிகளவில் விற்பனை செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
New Moto G53 5G smartphone launched under Rs.10,000: Check Specifications and Features: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X