ரூ.12,000-க்கு கீழ் இந்தியாவில் அறிமுகமாகும் புதிய Moto ஸ்மார்ட்போன்: என்னென்ன அம்சங்கள்?
மோட்டோரோலா நிறுவனம் சமீபத்தில் தான் மோட்டோ ஜி73 5ஜி ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்தது. குறிப்பாக இந்த மோட்டோ ஜி73 5ஜி ஸ்மார்ட்போனுக்கு இந்தியாவில் நல்ல வரவேற்பு உள்ளது. இந்நிலையில் புதிய மோட்டோ ஜி13 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது மோட்டோரோலா நிறுவனம்.
இணையத்தில் வெளிவந்த தகவலின்படி மோட்டோ ஜி13 ஸ்மார்ட்போன் ஆனது அடுத்த மாதம் துவக்கத்தில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த புதிய மோட்டோ ஸ்மார்ட்போன் அட்டகாசமான அம்சங்களுடன் வரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. மேலும் ஆன்லைனில் கசிந்த இந்த புதிய மோட்டோ ஜி13 ஸ்மார்ட்போனின் அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.

அதாவது ஆன்லைனில் கசிந்த தகலின்படி, விரைவில் அறிமுகமாகும் மோட்டோ ஜி13 ஸ்மார்ட்போன் ஆனது 6.5-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது. பின்பு 1600 X 720 பிக்சல்ஸ், 20:9 ஆஸ்பெக்ட் ரேஷியோ, 90ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 570 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த புதிய மோட்டோ போன் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் 50எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி மேக்ரோ கேமரா + 2எம்பி டெப்த் சென்சார் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த புதிய மோட்டோ ஜி13 ஸ்மார்ட்போன் மாடல். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன். மேலும் எல்இடி பிளாஷ் மற்றும் பல கேமரா அம்சங்கள் இவற்றுள் அடக்கம்.
குறிப்பாக மோட்டோ ஜி13 ஸ்மார்ட்போன் ஆனது ஆக்டோ-கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி85 சிப்செட் வசதியைக் கொண்டு வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக கேமரா பயன்பாடுகளுக்கு இந்த சிப்செட் மிக அருமையாக பயன்படும். அதேபோல் இந்த சிப்செட் சிறந்த செயல்திறன் வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. பின்பு ஆண்ட்ராய்டு 13 இயங்குதளத்தைக் கொண்டுள்ளது இந்த புதிய மோட்டோ ஸ்மார்ட்போன்.

4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி/128ஜிபி ஸ்டோரேஜ் ஆதரவைக் கொண்டுள்ளது இந்த மோட்டோ ஜி13 ஸ்மார்ட்போன் மாடல். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவைக் கொண்டுள்ளது இந்த புதிய போன்.
இந்த மோட்டோ ஜி13 ஸ்மார்ட்போன் 5000 எம்ஏஎச் பேட்டரி வசதியைக் கொண்டுள்ளது. எனவே இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு பாஸ்ட் சார்ஜிங் வசதி, கைரேகை ஸ்கேனர் உள்ளிட்ட பல அசத்தலான அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த புதிய மோட்டோ ஸ்மார்ட்போன். குறிப்பாக இந்த போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.
மோட்டோ ஜி13 ஸ்மார்ட்போனில் அனைத்து அம்சங்களும் அருமையாக உள்ளது. ஆனால் இது 5ஜி போன் கிடையாது என்று தகவல் வெளிவந்துள்ளது. அதாவது இந்த மோட்டோ ஜி13 ஸ்மார்ட்போன் ஆனது 4ஜி ஆதரவுடன் வெளிவரும். பின்பு வைஃபை, ஜிபிஎஸ், 3.5எம்எம் ஆடியோ ஜாக், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டுள்ளது இந்த புதிய மோட்டோ ஜி13 ஸ்மார்ட்போன்.

அதேபோல் இந்த மோட்டோ ஜி13 ஸ்மார்ட்போன் ஆனது ரூ.12,000-க்கு கீழ் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த மோட்டோ ஜி13 ஸ்மார்ட்போன் ஆனது 5ஜி ஆதரவுடன் வெளிவந்தால் அதிக வரவேற்பு கிடைக்கும். தற்போது இந்தியாவில் 5ஜி போன்களுக்கு மட்டும் தான் அதிக வரவேற்பு உள்ளது.


Click it and Unblock the Notifications








