அடி தூள்: ரூ.9999-விலையில் 50எம்பி கேமரா, 5000 எம்ஏஎச் பேட்டரியுடன் புது Moto போன் அறிமுகம்.!
மோட்டோரோலா நிறுவனம் இன்று பட்ஜெட் விலையில் மோட்டோ ஜி13 எனும் ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இந்த போன் தரமான பிராசஸர், நீண்ட நேரம் பேக்கப் தரும் பேட்டரி, அருமையான கேமரா எனப் பல சிறப்பு அம்சங்களுடன் வெளிவந்துள்ளது. இப்போது இந்த போனின் அம்சங்களை விரிவாகப் பார்ப்போம்.
அதாவது இந்த மோட்டோ ஜி13 ஸ்மார்ட்போன் ஆனது 6.5-இன்ச் எச்டி பிளஸ் எல்சிடி டிஸ்பிளே வசதியுடன் வெளிவந்துள்ளது. பின்பு 720 x 1600 பிக்சல்ஸ், 20:9 ஆஸ்பெக்ட் ரேஷியோ, 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 576 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட், பாண்டா கிளாஸ் பாதுகாப்பு வசதி உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களுடன் இந்த மோட்டோ போன் வெளிவந்துள்ளது.

குறிப்பாக மோட்டோ ஜி13 ஸ்மார்ட்போனில் தரமான ஆக்டோ-கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி85 12என்எம் பிராசஸர் உடன் ARM Mali-G52 2EEMC2 வசதி உள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனை இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். மேலும் ஆண்ட்ராய்டு 13 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த புதிய போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் வசதியைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான மோட்டோ ஜி13 ஸ்மார்ட்போன். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவுடன் இந்த போன் வெளிவந்துள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவைக் கொண்டுள்ளது இந்த புதிய போன்.
புதிய மோட்டோ ஜி13 ஸ்மார்ட்போன் 50எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி டெப்த் கேமரா + 2எம்பி மேக்ரோ கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. குறிப்பாக இந்த போனின் உதவியுடன் அசத்தலான புகைப்படங்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமராவுடன் இந்த போன் வெளிவந்துள்ளது. இதுதவிர எல்இடி பிளாஷ் மற்றும் பல கேமரா அம்சங்கள் இவற்றுள் அடக்கம்.

குறிப்பாக மோட்டோ ஜி13 ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி வசதி உள்ளது. எனவே நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் கிடைக்கும். பின்பு 10 வாட்ஸ் சார்ஜிங் வசதி, கைரேகை ஸ்கேனர், ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், Dolby Atmos ஆதரவு உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த புத்தம் புதிய ஸ்மார்ட்போன் மாடல்.
அதேபோல் 4ஜி வோல்ட்இ, வைஃபை 802.11, புளூடூத் 5.1, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டுள்ளது இந்த மோட்டோ ஜி13 ஸ்மார்ட்போன். மேலும் இந்த ஸ்மார்ட்போனின் எடை 184 கிராம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் இந்த புதிய போனில் 3.5எம்எம் ஆடியோ ஜாக் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட மோட்டோ ஜி13 ஸ்மார்ட்போனின் விலை ரூ.9,999-ஆக உள்ளது. பின்பு இந்த போனை பிளிப்கார்ட் தளத்தில் ஏப்ரல் 5-ம் தேதி வாங்க முடியும். மேலும் மேட் சார்கோல் மற்றும் ப்ளூ லாவெண்டர் நிறங்களில் இந்த மோட்டோ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இந்த போனின் குறை என்னவென்றால், பாஸ்ட் சார்ஜிங் கிடையாது. அதேபோல் 8எம்பி செல்பி கேமராவுக்கு பதிலாக 13எம்பி கேமராவுடன் இந்த போன் வெளிவந்திருந்தால் இன்னும் அருமையாக இருக்கும். பின்பு இந்த போன் 4ஜி வசதியுடன் வெளிவந்துள்ளது. ஆனால் தற்போது 5ஜி போன்களுக்கு தான் இந்தியாவில் அதிக வரவேற்பு உள்ளது. மற்றபடி அசத்தலான ரியர் கேமரா, தரமான பிராசஸர்,அருமையான பேட்டரி உள்ளிட்ட அனைத்து சிறப்பு அம்சங்களை வழங்குகிறது இந்த மோட்டோ போன்.


Click it and Unblock the Notifications








