Home
Mobile

நாளை விற்பனைக்கு வரும் புது மோட்டோரோலா போன்.. 50எம்பி கேமரா.. 5200mAh பேட்டரி.. எந்த மாடல்?

மோட்டோரோலா (motorola) நிறுவனம் சமீபத்தில் மோட்டோ ஜி05 (Moto G05) ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்தது. இந்நிலையில் இந்த புதிய மோட்டோ போன் முதல் முறையாக பிளிப்கார்ட் தளத்தில் நாளை (ஜனவரி 13) விற்பனைக்கு வர இருக்கிறது. குறிப்பாக இந்த போன் மலிவு விலையில் விற்பனைக்கு வரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

நாளை 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கெண்ட புதிய மோட்டோ ஜி05 போனை பிளிப்கார்ட் தளத்தில் ரூ.6,999 விலையில் வாங்கிவிட முடியும். மேலும் இந்த ஸ்மார்போன் ஃபாரெஸ்ட் கிரீன் மற்றும் பிளம் ரெட் நிறங்களில் வாங்க கிடைக்கும். இப்போது மோட்டோ ஜி05 ஸ்மார்ட்போனின் அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

நாளை விற்பனைக்கு வரும் புது மோட்டோரோலா போன்.. எந்த மாடல்?

மோட்டோ ஜி05 அம்சங்கள் (Moto G05 Specifications): தரமான ஆக்டோ-கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி81-அல்ட்ரா (Octa Core MediaTek Helio G81-Ultra) சிப்செட் வசதியுடன் வெளிவந்துள்ளது இந்த மோட்டோ ஜி05 போன். மேலும் ஏஆர்எம் மாலி-ஜி52 எம்பி2 ஜிபியு (ARM Mali-G52 MP2 GPU) கிராபிக்ஸ் கார்டு கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.

குறிப்பாக 6.67-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வசதியுடன் வெளிவந்துள்ளது மோட்டோ ஜி05. மேலும் ஆஸ்பெக்ட் ரேஷியோ (20:9 aspect ratio), 1000 நிட்ஸ் பிரைட்னஸ், கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 (Corning Gorilla Glass 3 protection), 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இதன் டிஸ்பிளே. இதில் பெரிய டிஸ்பிளே இருப்பதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

அதேபோல் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி ஸ்டோரேஜ் கொண்டுள்ளது இந்த மோட்டோ ஜி05 ஸ்மார்ட்போன். மேலும் இதில் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த போனில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. IP52 தர டஸ்ட் மற்றும் ப்ளாஷ் ரெசிஸ்டன்ட் (Dust and Splash resistant) கொண்டுள்ளது இந்த மோட்டோ ஜி05 போன்.

இந்த மோட்டோ ஜி05 ஸ்மார்ட்போன் 50எம்பி டூயல் ரியர் கேமரா அமைப்புடன் வெளிவந்துள்ளது.செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமரா இதில் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இதில் உள்ளன. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் தெளிவான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும்.

நாளை விற்பனைக்கு வரும் புது மோட்டோரோலா போன்.. எந்த மாடல்?

மேலும் சைடு மவுண்டெட் பிங்கர் பிரிண்ட் சென்சார் (Side-mounted fingerprint sensor), 3.5 மிமீ ஆடியோ ஜாக் (3.5mm audio jack), ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo speakers), டால்பி அட்மோஸ் (Dolby Atmos),எப்எம் ரேடியோ உள்ளிட்ட பல்வேறு சிறப்பான வசதிகள் இந்த மோட்டோ ஜி05 போனில் உள்ளன.

5200mAh பேட்டரி உடன் இந்த மோட்டோ ஜி05 ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. பின்பு 18W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் இந்த ஸ்மார்ட்போனில் உள்ளது. அதேபோல் இந்த போனின் வடிவமைப்பு மிகவும் அருமையாக உள்ளது . அதேபோல் டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை 802.11 ஏசி, புளூடூத் 5.4, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த போனில் உள்ளன. அனைத்து சிறப்பான அம்சங்களுடன் இந்த போன் கம்மி விலையில் விற்பனைக்கு வரும் என்பதால் நம்பி வாங்கலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
New Moto G05 phone will go on sale for the first time tomorrow: check specifications, price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X