Home
Mobile

Moto மிரட்டல்! ரூ.6000 பட்ஜெட்ல.. 6.6-inch டிஸ்பிளே, Night vision கேமரா, Dolby Atmos சவுண்ட், 5000mAh பேட்டரி!

ரூ.20,000 க்குள்.. ரூ.30,000 க்குள்.. அல்லது ரூ.40,000 க்குள் என.. எந்தவொரு பட்ஜெட்டின் கீழும், பெஸ்ட் ஸ்மார்ட்போன்களை தேடினாலும்.. அந்த பட்டியலில் நிச்சயம் ஒரு மோட்டோரோலா (Motorola) மாடல் இருக்கும். அப்படியாக ரூ.10,000 க்குள் என்கிற பட்ஜெட்டில் பக்காவான அம்சங்களுடன் புதிய மோட்டோரோலா ஸ்மார்ட்போன் ஒன்று மே 30 ஆம் தேதி அன்று இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. அது என்ன மாடல்? அது சரியாக என்ன விலைக்கு வரும்? என்னென்ன அம்சங்களை பேக் செய்யும்? இதோ விவரங்கள்:

என்ன மாடல்? அது மோட்டோ ஜி04எஸ் (Moto G04s) ஸ்மார்ட்போன் ஆகும். மோட்டோரோலா நிறுவனத்தின் மிகவும் பிரபலம ஜி-சீரீஸின் கீழ் வரும் இந்த ஸ்மார்ட்போன் மே 30 ஆம் தேதி அன்று இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இது கடந்த பிப்ரவரியில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட மோட்டோ ஜி04 (Moto G04) ஸ்மார்ட்போனின் மேம்படுத்தப்பட்ட வெர்ஷனாக இருக்கும் என்பதிலும் சந்தேகம் வேண்டாம்.

Moto மிரட்டல்! ரூ.6000 பட்ஜெட்ல 6.6-inch டிஸ்பிளே, Night vision கேமரா!

என்ன விலைக்கு வரும்? அறிமுகத்திற்கு பின்னர் மோட்டோ ஜி04ஏ ஸ்மார்ட்போன் ஆனது பிளிப்கார்ட் (Flipkart) வழியாக வாங்குவதற்கு கிடைக்கும். இதுதொடர்பான மைக்ரோசைட்டும் தற்போது நேரலையில் உள்ளது. மே 30 நடக்கும் அறிமுகத்தை தொடர்ந்து ஜூன் முதல் வாரத்தில், அதாவது அறிமுகமான சில நாட்களுக்குள்ளேயே இது விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விலை நிர்ணயத்தை பொறுத்தவரை, முன்னதாக இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட மோட்டோ ஜி04 ஸ்மார்ட்போனின் பேஸிக் 4ஜிபி ரேம் + 64ஜிபி ஸ்டோரேஜ் மற்றும் 8ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன்கள் முறையே ரூ.6,999 மற்றும் ரூ.7,499 க்கும் அறிமுகமாகின. மோட்டோ ஜி04எஸ் ஸ்மார்ட்போனிலும் கூட நாம் இதேபோன்ற ஸ்டோரேஜ் ஆப்ஷன்களை மற்றும் இதே விலை நிர்ணயத்தை எதிர்பார்க்கலாம். அதாவது ரூ.6000 அல்லது ரூ.7000-ஐ சுற்றிய பட்ஜெட்டை எதிர்பார்க்கலாம்.

என்னென்ன அம்சங்களை பேக் செய்யும்? முன்னரே குறிப்பிட்டபடி மோட்டோ ஜி04எஸ் ஸ்மார்ட்போன் ஆனது மோட்டோ ஜி04 ஸ்மார்ட்போனின் மேம்படுத்தப்பட்ட பதிப்பாகஇருக்கும். மோட்டோ ஜி04 ஆனது 16 மெகாபிக்சல் மெயின் ரியர் கேமராவுடன் வருகிறது. ஆக மோட்டோ ஜி04எஸ் மாடலில் 50-மெகாபிக்சல் மெயின் கேமராவை எதிர்பார்க்கலாம். அதாவது கேமராவில் பெரிய அளவிலான மேம்பாடுகள் இருக்கும் போதிலும் கூட மோட்டோ ஜி04எஸ் ஆனது மோட்டோ ஜி040-ன் விலையில் அறிமுகப்படுத்தப்படலாம்.

மேலும் மோட்டோ ஜி04எஸ் ஸ்மார்ட்போன் ஆனது அதன் க்ளோபல் வேரியண்ட்-ஐ போலவே 4ஜிபி ரேம், 64ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ், ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் மற்றும் டால்பி அட்மோஸ் சவுண்ட் ஆதரவு, யுனிசாக் டி606 சிப்செட் (Unisoc T606 SoC), 5000mAh பேட்டரி போன்ற அம்சங்களையும் பேக் செய்யலாம்.

டிஸ்பிளேவை பொறுத்தவரை, இது கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 ப்ரொடெக்ஷன், 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.6-இன்ச் டிஸ்பிளேவை கொண்டிருக்கும். எடையில் 178.8 கிராமும், 7.99மிமீ தடிமனும் கொண்டிருக்கும் இந்த ஸ்மார்ட்போனின் கேமரா செட்டப்பில் போர்ட்ரெய்ட் மோட் மற்றும் ஆட்டோ நைட் விஷன் போன்ற கேமரா அம்சங்களும் இடம்பெறும்.

மோட்டோ ஜி04 ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்: இது 90ஹெர்ட்ஸ் ரெப்ரெஷ் ரேட் உடனான 6.6-இன்ச் எச்டி பிளஸ் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்பிளேவை (IPS LCD Display) கொண்டுள்ளது. யுனிசாக் டி606 சிப்செட் (UniSoC T606 SoC) உடனாக மாலி ஜி57 ஜிபியு (Mali G57 GPU) உடன் இணைக்கப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) அடிப்படையிலான மை யுஎக்ஸ் (My UX) மூலம் இயக்கப்படுகிறது.

கேமராக்களை பொறுத்தவரை எல்ஐடி பிளாஷ் (LED Flash) உடனான 16 மெகாபிக்சல் ரியர் கேமராவையும், செல்பீக்கள் மற்றும் வீடியோ கால் களுக்காக 5 மெகாபிக்சல் செல்பீ கேமராவையும் கொண்டுள்ளது. மேலும் இது தூசி மற்றும் ஸ்பிளாஸ் (Dust and splash) எதிர்ப்பிற்கான ஐபி52 ரேட்டிங்கை (IP52 Rating) பெற்றுள்ளது. கடைசியாக 10W வயர்டு சார்ஜிங் ஆதரவுடன் 5000mAh பேட்டரியை பேக் செய்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
New Moto G04s Smartphone Price Flipkart Sale Date Specifications Tipped Ahead India Launch on May 30
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X