புதுசா 5ஜி போன் வாங்கப்போறீங்களா? இந்த போனை பாருங்க! இனி தான் வரப்போகுது! வெயிட் பண்ணீ வாங்குனா செம ஒர்த்!
மோட்டோரோலா நிறுவனம் தற்போது தனித்துவமான போன்களை அறிமுகம் செய்ய அதிக ஆர்வம் காட்டுகிறது. குறிப்பாக இந்நிறுவனம் கொண்டுவரும் ஒவ்வொரு ஸ்மார்ட்போனுக்கு இந்தியாவில் நல்ல வரவேற்பு உள்ளது என்றுதான் கூறவேண்டும். இந்நிலையில் மோட்டோரோலா நிறுவனம் ஒரு புதிய போனை அறிமுகம் செய்துள்ளது.
அதாவது மோட்டோரோலா நிறுவனம் தற்போது மோட்டோ ஜி ஸ்டைலஸ் 5ஜி (2023) (moto g stylus (2023)) மாடலை தான் அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய ஸ்மார்ட்போன் அசத்தலான வடிவமைப்புடன் வெளிவந்துள்ளது. இப்போது மோட்டோ ஜி ஸ்டைலஸ் 5ஜி (2023) மாடலின் விலை மற்றும் சிறப்பு அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.

புதிய மோட்டோ ஜி ஸ்டைலஸ் 5ஜி (2023) ஸ்மார்ட்போன் ஆனது 6.6-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் எல்சிடி டிஸ்பிளே வசதியைக் கொண்டு வெளிவந்துள்ளது. பின்பு 1080×2400 பிக்சல்ஸ், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக பெரிய டிஸ்பிளேவுடன் இந்த போன் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.
மோட்டோ ஜி ஸ்டைலஸ் 5ஜி (2023) ஸ்மார்ட்போன் 4ஜிபி/6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி/256ஜிபி ஸ்டோரேஜ் வசதியைக் கொண்டுள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இதில் உள்ளது.
தரமான ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 6 ஜென் 1 4என்எம் சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது இந்த மோட்டோ ஜி ஸ்டைலஸ் 5ஜி (2023) ஸ்மார்ட்போன். எனவே இந்த போன் மேம்பட்ட செயல்திறன் வழங்கும். பின்பு ஆண்ட்ராய்டு 13 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு மோட்டோ ஜி ஸ்டைலஸ் 5ஜி (2023) ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த போனின் மென்பொருள் வசதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது மோட்டோரோலா நிறுவனம்.
மோட்டோ ஜி ஸ்டைலஸ் 5ஜி (2023) ஸ்மார்ட்போன் 50எம்பி பிரைமரி கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா ஆதரைவைக் கொண்டுள்ளது. குறிப்பாக இந்த போனின் உதவியுடன் துல்லியமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமராவுடன் இந்த போன் வெளிவந்துள்ளது. இதுதவிர எல்இடி பிளாஷ் மற்றும் பல கேமரா அம்சங்கள் இவற்றுள் அடக்கம்.

5000 எம்ஏஎச் பேட்டரி வசதியைக் கொண்டுள்ளது இந்த மோட்டோ ஜி ஸ்டைலஸ் 5ஜி (2023) ஸ்மார்ட்போன். எனவே இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு 20 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதி, கைரேகை ஸ்கேனர், டால்பி அட்மோஸ் ஆதரவு கொண்ட ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது இந்த போன். காஸ்மிக் பிளாக் மற்றும் ரோஸ் நிறங்களில் இந்த போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை 802.11, புளூடூத், ஜிபிஎஸ், என்எப்சி, யுஎஸ்பி டைப்-சி போரத்ட், 3.5மிமீ ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகளை கொண்டு இந்த மோட்டோ ஜி ஸ்டைலஸ் 5ஜி (2023) ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. பின்பு இந்த போனின் எடை 202 கிராம் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்த போன் அமெரிக்காவில் மட்டுமே அறிமுகம் செய்யப்பட்டுள்ளது, விரைவில் அனைத்து நாடுகளிலும் அறிமுகம் செய்யப்படும். பின்பு மோட்டோ ஜி ஸ்டைலஸ் 5ஜி (2023) போனின் விலை $399.99 (இந்திய மதிப்பில் ரூ.33,070).


Click it and Unblock the Notifications








