மோட்டோரோலாவின் சைலன்ட் சம்பவம்.. 50MP கேமரா.. 5000mAh பேட்டரி.. அறிமுகமானது புது போன்.. எந்த மாடல்?
மோட்டோரோலா நிறுவனம் தனது மோட்டோ ஜி பிளே 2024 ஸ்மார்ட்போனை அமெரிக்காவில் அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக 50எம்பி கேமரா, 5000எம்ஏஎச் பேட்டரி, ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் இந்த மோட்டோ ஜி பிளே 2024 போன் வெளிவந்துள்ளது.
அதேபோல் மோட்டோ ஜி பிளே 2024 ஆனது விரைவில் அனைத்து நாடுகளிலும் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இப்போது இந்த புதிய மோட்டோ ஸ்மார்ட்போனின் விலை மற்றும் அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.

மோட்டோ ஜி பிளே 2024 அம்சங்கள் (Moto G Play 2024 Specifications): 6.5-இன்ச் எச்டி பிளஸ் மேக்ஸ்விஷன் டிஸ்பிளே வசதியுடன் இந்த மோட்டோ ஜி பிளே (2024) மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பின்பு 1600 x 720 பிக்சல்ஸ், 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் ( 90Hz refresh rate), 500 நிட்ஸ் ப்ரைட்னஸ், 20:9 ஆஸ்பெக்ட் ரேஷியோ (20:9 aspect ratio), கார்னிங் கொரில்லா கிளாஷ் 3 வசதி போன்ற பல சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது இந்த போனின் டிஸ்பிளே.
குவால்காம் ஸ்னாப்டிராகன் 680 ( Qualcomm Snapdragon 680 SoC) சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது இந்த மோட்டோ ஜி பிளே 2024 மாடல். குறிப்பாக இந்த போனுக்கு வழங்கப்பட்ட சிப்செட் ஆனது மேம்பட்ட செயல்திறன் வழங்கும். பின்பு My UX சார்ந்த ஆண்ட்ராய்டு 13 (Android 13) இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு மோட்டோ ஜி பிளே 2024 ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும்.
4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி ஸ்டோரேஜ் வசதியுடன் இந்த மோட்டோ ஜி பிளே 2024 மாடல் வெளிவந்துள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் (microSD card slot) ஆதரவு இந்த போனில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
எல்இடி பிளாஷ் ஆதரவு கொண்ட 50எம்பி சிங்கிள் ரியர் கேமரா அமைப்புடன் இந்த மோட்டோ ஜி பிளே 2024 மாடல் வெளிவந்துள்ளது. பின்பு இந்த போனில் ஃபுல் எச்டி வீடியோக்களை பதிவு செய்ய முடியும் என்று கூறப்படுகிறது. மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த மோட்டோ ஜி பிளே (2024) மாடல்.
5000எம்ஏஎச் பேட்டரி வசதியைக் கொண்டுள்ளது மோட்டோ ஜி பிளே 2024 மாடல். எனவே இந்த ஸ்மார்ட்போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு இந்த 1 பேட்டரியை சார்ஜ் செய்ய 15 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. அதேபோல் சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side-mounted Fingerprint Sensor) ஆதரவு இந்த போனில் உள்ளது.

4ஜி வோல்ட்இ, புளூடூத் 5.1, வைஃபை 802.11 AC, ஜிபிஎஸ் 802.11, என்எப்சி, யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டுள்ளது இந்த மோட்டோ ஜி பிளே 2024 ஸ்மார்ட்போன். மேலும் இந்த மோட்டோ ஜி54 5ஜி ஸ்மார்ட்போனின் எடை 185 கிராம் ஆகும். குறிப்பாக ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (stereo speakers), டால்பி அட்மோஸ் ( Dolby Atmos), ஐபி52 ரேட்டிங் ( IP52 rating) உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்கள் இந்த போனில் உள்ளன.
மோட்டோ ஜி பிளே 2024 ஸ்மார்ட்போனின் விலை $149.99 (இந்திய மதிப்பில் ரூ.12,500)-ஆக உள்ளது. விரைவில் இந்த போன் அனைத்து நாடுகளிலும் அறிமுகமாகும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.


Click it and Unblock the Notifications








