3 நாள் பேட்டரி லைஃப் வேணும்னா.. இந்த புத்தம் புதிய Moto போன் தான் லாயக்கி!
மோட்டோரோலா நிறுவனம் புதிய மோட்டோ ஜி பிளே 2023 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இந்த புதிய ஸ்மார்ட்போன் அசத்தலான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது. அதேபோல் இந்த போன் தற்போது அமெரிக்காவில் மட்டும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. விரைவில் அனைத்து நாடுகளிலும் அறிமுகமாகும்.

90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ்
மேலும் இப்போது மோட்டோ ஜி பிளே 2023 ஸ்மார்ட்போனின் விலை மற்றும் அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்ப்போம். புதிய மோட்டோ ஜி பிளே 2023 ஸ்மார்ட்போன் ஆனது 6.5-இன்ச் எச்டி பிளஸ் ஐபிஎஸ் டிஎப்டி டிஸ்பிளே வசதியுடன் வெளிவந்துள்ளது. மேலும் 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 20:9 ஆஸ்பெக்ட் ரேஷியோ மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது அட்டகாசமான ஸ்மார்ட்போன்.

ஆண்ட்ராய்டு 13 அப்டேட்
மோட்டோ ஜி பிளே 2023 ஸ்மார்ட்போன் மீடியாடெக் ஹீலியோ ஜி37 சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனை இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். அதேபோல் இந்த போன் ஆண்ட்ராய்டு 12 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு வெளிவந்துள்ளது. பின்பு விரைவில் இந்த சாதனத்தின் ஆண்ட்ராய்டு 13 அப்டேட் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

32ஜிபி ஸ்டோரேஜ் வசதி
புதிய மோட்டோ ஜி பிளே 2023 ஸ்மார்ட்போனில் 3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி ஸ்டோரேஜ் வசதி உள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவைக் கொண்டுள்ளது இந்த மோட்டோ போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு உள்ளது.

16எம்பி பிரைமரி கேமரா
இந்த மோட்டோ ஜி பிளே 2023 ஸ்மார்ட்போன் 16எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி டெப்த் கேமரா + 2எம்பி மேக்ரோ கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 5எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். மேலும் இந்த போனின் உதவியுடன் ஃபுல் எச்டி வீடியோவை பதிவு செய்ய முடியும்.

5000 எம்ஏஎச் பேட்டரி
மோட்டோ ஜி பிளே 2023 ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. குறிப்பாக இதை ஒருமுறை சார்ஜ் செய்தால் 3 நாட்கள் பேட்டரி லைஃப் வழங்கும் என்று நிறுவனம் கூறியுள்ளது.

பாஸ்ட் சார்ஜிங் வசதி
மேலும் 10 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதி, கைரேகை ஸ்கேனர் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான மோட்டோ ஸ்மார்ட்போன். அதேபோல் யுஎஸ்பி டைப்-சி போர்ட், 3.5MM ஹெட்ஃபோன் ஜாக், டூயல் பேண்ட் வைஃபை, புளூடூத் வி5.0 உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகளை கொண்டுள்ளது மோட்டோ ஜி பிளே 2023 ஸ்மார்ட்போன்.

மோட்டோ ஜி பிளே 2023 விலை
இந்த புதிய மோட்டோ ஜி பிளே 2023 ஸ்மார்ட்போனின் விலை $169.99 (இந்திய மதிப்பில் ரூ.14,000) ஆக உள்ளது. குறிப்பாக இந்த போன் விரைவில் அனைத்து நாடுகளிலும் அறிமுகம் செய்யப்படும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.
மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.


Click it and Unblock the Notifications