Home
Mobile

பட்ஜெட் விலையில் 2 ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்த Motorola.! என்ன விலை? என்னென்ன அம்சங்கள்?

மோட்டோரோலா நிறுவனம் விவோ, ஒப்போ நிறுவனங்களுக்குப் போட்டியாக அசத்தலான ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகிறது. குறிப்பாக இந்நிறுவனம் கொண்டுவரும் ஒவ்வொரு ஸ்மார்ட்போன்களுக்கும் இந்தியாவில் நல்ல வரவேற்பு உள்ளது. இந்நிலையில் இரண்டு அசத்தலான போன்களை அறிமுகம் செய்துள்ளது மோட்டோரோலா நிறுவனம்.

அதாவது மோட்டோரோலா நிறுவனம் தற்போது மோட்டோ ஜி 5ஜி (2023) மற்றும் மோட்டோ ஜி ஸ்டைலஸ் 5ஜி (2023) போன்களை அறிமுகம் செய்துள்ளது. இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களும் அசத்தலான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது. இப்போது இந்த இரண்டு போன்களின் விலை மற்றும் அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.

 பட்ஜெட் விலையில் 2 ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்த Motorola.!

மோட்டோ ஜி 5ஜி (2023) அம்சங்கள்: புதிய மோட்டோ ஜி 5ஜி (2023) ஸ்மார்ட்போன் ஆனது 6.5-இன்ச் எச்டி பிளஸ் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்பிளே வசதியைக் கொண்டு வெளிவந்துள்ளது. பின்பு 1600 x 720 பிக்சல், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டு இந்த புதிய ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.

குறிப்பாக ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 480 பிளஸ் சிப்செட் உடன் அட்ரினோ 619 ஜிபியு வசதியைக் கொண்டுள்ளது இந்த மோட்டோ ஜி 5ஜி (2023) ஸ்மார்ட்போன். மேலும் ஆண்ட்ராய்டு 13 இயங்குதள வசதியுடன் இந்த போன் வெளிவந்துள்ளது. அதேபோல் 4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் வசதியைக் கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன்.

48எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி மேக்ரோ கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த மோட்டோ ஜி 5ஜி (2023) ஸ்மார்ட்போன். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த புதிய போன். குறிப்பாக எல்இடி பிளாஷ், கைரேகை ஸ்கேனர் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த புதிய போன்.

 பட்ஜெட் விலையில் 2 ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்த Motorola.!

அதேபோல் 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை 802.11 ஏசி, புளூடூத் 5.1, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டுள்ளது இந்த புதிய போன். குறிப்பாக 5000 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 15 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் இந்த ய மோட்டோ ஜி 5ஜி (2023) ஸ்மார்ட்போன்
வெளிவந்துள்ளது. இன்க் ப்ளூ மற்றும் ஹார்பர் மிஸ்ட் நிறங்களில் இந்த போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

மோட்டோ ஜி ஸ்டைலஸ் 5ஜி (2023) அம்சங்கள்: புதிய மோட்டோ ஜி ஸ்டைலஸ் 5ஜி (2023) போன் 6.5-இன்ச் எச்டி பிளஸ் எல்சிடி டிஸ்பிளே வசதியைக் கொண்டு வெளிவந்துள்ளது. பின்பு 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாகக் கொண்டு இந்த மோட்டோ ஜி ஸ்டைலஸ் 5ஜி (2023) போன் வெளிவந்துள்ளது.

ஆக்டோ-கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி85 சிப்செட் உடன் இந்த மோட்டோ ஜி ஸ்டைலஸ் 5ஜி (2023) போன் வெளிவந்துள்ளது. மேலும் ஆண்ட்ராய்டு 13இயங்குதளம், 4ஜிபி ரேம், 64ஜிபி ஸ்டோரேஜ், கைரேகை சென்சார் மற்றும் பல சிறப்பு அம்சங்களுடன் இந்த போன் வெளிவந்துள்ளது. அதேபோல் 5000 எம்ஏஎச் பேட்டரி, 15 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டுள்ளது இந்த போன்.

டூயல் 4ஜி வோல்ட்இ, புளூடூத் 5.0, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட், உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த மோட்டோ ஜி ஸ்டைலஸ் 5ஜி (2023) போன். மிட்நைட் ப்ளூ மற்றும் கிளாம் பிங்க் நிறங்களில் இந்த மோட்டோ ஜி ஸ்டைலஸ் 5ஜி (2023) போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

 பட்ஜெட் விலையில் 2 ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்த Motorola.!

விலை: புதிய மோட்டோ ஜி 5ஜி (2023) போனின் விலை 249.99 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.20,500). புதிய மோட்டோ ஜி ஸ்டைலஸ் 5ஜி (2023) போனின் விலை 199.99 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.16,200). குறிப்பாக இந்த இரண்டு மோட்டோ போன்களும் முதலில் அமெரிக்காவில் விற்பனைக்கு வரும். அதன்பின்பு மற்ற நாடுகளில் இந்த போன்கள் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
New Moto G 5G (2023) and Moto G Stylus (2023) phones launched: check price, specifications : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X