சத்தமின்றி புதிய Moto ஸ்மார்ட்போனுக்கு விலைகுறைப்பு: புதிய விலை இதுதான்.!

|

மோட்டோரோலா நிறுவனத்தின் பிரபலமான ஸ்மார்ட்போனுக்கு தற்போது விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது மோட்டோ இ40 எனும் ஸ்மார்ட்போனுக்கு தான் தற்போது விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இப்போது இந்த ஸ்மார்ட்போனின் புதிய விலை மற்றும் அம்சங்களைப் பார்ப்போம்.

மோட்டோ இ40

மோட்டோ இ40

முன்பு ரூ.9,499-விலையில் விற்பனை செய்யப்பட்ட மோட்டோ இ40 ஸ்மார்ட்போன் தற்போது நடைபெறும் Flipkart Black Friday Sale எனும் சிறப்பு விற்பனையின் மூலம் ரூ.8,299-விலையில் வாங்கக் கிடைக்கும். குறிப்பாக இந்த சலுகையை பல்வேறு மக்கள் பயன்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரூ.3000 பட்ஜெட்டில் எக்கச்சக்க அம்சங்களுடன் அறிமுகமான புதிய ஸ்மார்ட்வாட்ச்: தாராளமா வாங்கலாம்.!ரூ.3000 பட்ஜெட்டில் எக்கச்சக்க அம்சங்களுடன் அறிமுகமான புதிய ஸ்மார்ட்வாட்ச்: தாராளமா வாங்கலாம்.!

90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்

90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்

மோட்டோ இ40 ஸ்மார்ட்போன் ஆனது 6.5-இன்ச் மேக்ஸ் விஷன் எச்டி பிளஸ் ஐபிஎஸ் டிஸ்பிளே வசதியுடன் வெளிவந்துள்ளது. மேலும் 720x1,600 பிக்சல்ஸ், 20:9 ஆஸ்பெக்ட் ரேஷியோ, 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு அம்சங்களுடன் வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான மோட்டோ ஸ்மார்ட்போன்.

விஸ்வரூபம் எடுத்த YouTube: இந்தியாவில் 1.7 மில்லியன் வீடியோக்கள் டெலிட்! இனி தேடினாலும் சிக்காது..விஸ்வரூபம் எடுத்த YouTube: இந்தியாவில் 1.7 மில்லியன் வீடியோக்கள் டெலிட்! இனி தேடினாலும் சிக்காது..

Unisoc T700 பிராசஸர் வசதி

Unisoc T700 பிராசஸர் வசதி

புதிய மோட்டோ இ40 ஸ்மார்ட்போனில் ஆக்டோ-கோர் Unisoc T700 பிராசஸர் வசதி உள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனை இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். மேலும் ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு வெளிவந்துள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன். குறிப்பாக இந்த போனில் ஆப்ஸ்களை தடையின்றி பயன்படுத்த முடியும்.

குறுக்கே வந்து நிற்கும் புதிய அம்சம்! இனிமேல் ஒரு போட்டோவை அவ்ளோ ஈஸியா Forward பண்ண முடியாது!குறுக்கே வந்து நிற்கும் புதிய அம்சம்! இனிமேல் ஒரு போட்டோவை அவ்ளோ ஈஸியா Forward பண்ண முடியாது!

64ஜிபி ஸ்டோரேஜ் ஆதரவு

4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி ஸ்டோரேஜ் ஆதரவு கொண்டு இந்த மோட்டோ இ40 ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இதில் உள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

வீட்டுக்கு LPG சிலிண்டர் புக் செய்தால் கேஷ்பேக் உறுதி! வேற லெவல்.. உடனே இதை ஓபன் பண்ணுங்கவீட்டுக்கு LPG சிலிண்டர் புக் செய்தால் கேஷ்பேக் உறுதி! வேற லெவல்.. உடனே இதை ஓபன் பண்ணுங்க

48எம்பி பிரைமரி சென்சார்

48எம்பி பிரைமரி சென்சார்

மோட்டோ இ40 ஸ்மார்ட்போன் 48எம்பி பிரைமரி சென்சார் + 2எம்பி டெப்த் சென்சார் + 2எம்பி மேக்ரோ சென்சார் வசதியைக் கொண்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் தரமான படங்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த மோட்டோ போன். குறிப்பாக பின்புற கேமராக்கள் போர்ட்ரெய்ட் மோட், பனோரமா, ஃபேஸ் பியூட்டி, எச்டிஆர் நைட் விஷன், மேக்ரோ விஷன் மற்றும் ப்ரோ மோட் உள்ளிட்ட அம்சங்களை வழங்குகின்றன.

ரூ.12,000 முதல் ரூ.49,999 வரை.. டிச.1 மற்றும் டிச.2-இல் அடுத்தடுத்து அறிமுகமாகும் ஐந்து புதிய 5G போன்கள்!ரூ.12,000 முதல் ரூ.49,999 வரை.. டிச.1 மற்றும் டிச.2-இல் அடுத்தடுத்து அறிமுகமாகும் ஐந்து புதிய 5G போன்கள்!

5000 எம்ஏஎச் பேட்டரி

5000 எம்ஏஎச் பேட்டரி

5000 எம்ஏஎச் பேட்டரி மற்றும் பாஸ்ட் சார்ஜிங் வசதியைக் கொண்டுள்ளது இந்த மோட்டோ இ40 ஸ்மார்ட்போன். எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. மேலும் பாஸ்ட் சார்ஜிங் வசதி, கைரேகை ஸ்கேனர் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களை வழங்குகிறது இந்த மோட்டோ போன்.

இந்த மேட்டர் தெரியாம ரீசார்ஜ் பண்ணாதீங்க..ரூ.750 பட்ஜெட்டில் கிடைக்கும் ஜியோவின் 2 ப்ரீபெய்ட் திட்டங்கள்.!இந்த மேட்டர் தெரியாம ரீசார்ஜ் பண்ணாதீங்க..ரூ.750 பட்ஜெட்டில் கிடைக்கும் ஜியோவின் 2 ப்ரீபெய்ட் திட்டங்கள்.!

கனெக்டிவிட்டி

கனெக்டிவிட்டி

4ஜி எல்டிஇ, வைபை, ப்ளூடூத், ப்ளூடூத் 5.0, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப் சி போர்ட் உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகளை கொண்டு இந்த ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கம்மி விலையில் ஒரு நல்ல ஆண்ட்ராய்டு போனை வாங்க நினைக்கும் பயனர்கள் இதை வாங்குவது நல்லது.

மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

Best Mobiles in India

English summary
new Moto E40 smartphone has a silent price cut. This is the new price: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X