இந்தியாவில் Moto இ32 போன் அறிமுகம்.! ரொம்ப, ரொம்ப கம்மி விலை.!
மோட்டோரோலா இந்தியாவில் புதிய Moto E32 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய ஸ்மார்ட்போன் அட்டகாசமான அம்சங்களுடன் கம்மி விலையில் வெளிவந்துள்ளது என்றுதான் கூறவேண்டும். இப்போது இந்த ஸ்மார்ட்போனின் விலை மற்றும் அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.

மோட்டோ இ32
அதாவது 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட மோட்டோ இ32 ஸ்மார்ட்போனின் விலை ரூ.10,499-ஆக உள்ளது. குறிப்பாக இந்த போனை பிளிப்கார்ட் மற்றும் சில ஆஃப்லைன் ஸ்டோர்களில் வாங்க முடியும். மேலும் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் சார்பில் இந்த போனுக்கு கேஷ்பேக் சலுகை வழங்கப்பட்டுள்ளது.

6.5-இன்ச் எச்டி பிளஸ் எல்சிடி டிஸ்பிளே
மோட்டோ இ32 ஸ்மார்ட்போன் ஆனது 6.5-இன்ச் எச்டி பிளஸ் எல்சிடி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 1600 x 700 பிக்சல்ஸ், 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல். குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

மிடியாடெக் சிப்செட்
மோட்டோ இ32 ஸ்மார்ட்போனில் மிடியாடெக் ஹீலியோ ஜி37 சிப்செட் வசதி உள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனை இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். குறிப்பாக இந்த சிப்செட் சிறந்த செயல்திறன் வழங்கும். அதேபோல் ஆண்ட்ராய்டு 12 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

64ஜிபி ஸ்டோரேஜ்
மோட்டோரோலாவின் மோட்டோ இ32 ஸ்மார்ட்போன் ஆனது 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி ஸ்டோரேஜ் வசதியைக் கொண்டுள்ளது. பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு ஸ்லாட் கொடுக்கப்பட்டுள்ளது.

50எம்பி பிரைமரி கேமரா
குறிப்பாக மோட்டோ இ32 ஸ்மார்ட்போன் 50எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி டெப்த் சென்சார் என்கிற டூயல் ரியர் கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது. பின்பு செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். இதுதவிர எல்இடி பிளாஷ் மற்றும் பல கேமரா அம்சங்களை கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன்.

5000 எம்ஏஎச் பேட்டரி
புதிய மோட்டோ இ32 ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. பின்பு 10 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதி, கைரேகை ஸ்கேனர் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது இந்த புதிய மோட்டோ ஸ்மார்ட்போன்.

கனெக்டிவிட்டி
4ஜி எல்டிஇ, டூயல் பேண்ட் வைஃபை, ப்ளூடூத் வி5.0, ஜிபிஎஸ், ஏ-ஜிபிஎஸ்,3.5எம்எம் ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டுள்ளது இந்த மோட்டோ இ32 ஸ்மார்ட்போன். குறிப்பாக Eco Black மற்றும் Artic White நிறங்களில் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகம்
செய்யப்பட்டுள்ளது.
மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.


Click it and Unblock the Notifications