Moto E22s போனின் வெளியீட்டு தேதி அறிவிப்பு: பட்ஜெட் விலை.!
இந்தியாவில் Moto E22s ஸ்மார்ட்போன் ஆனது வரும் அக்டோபர் 17-ம் தேதி அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் பட்ஜெட் விலையில் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

அதேபோல் பிளிப்கார்ட் தளத்தில் இந்த மோட்டோ இ22எஸ் ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்போது
இந்த ஸ்மார்ட்போனின் அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.

90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்
புதிய மோட்டோ இ22எஸ் ஸ்மார்ட்போன் ஆனது 6.5-இன்ச எச்டி பிளஸ் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 720x1,600 பிக்சல்ஸ், 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 20:9 ஆஸ்பெக்ட் ரேஷியோ மற்றும் பல்வேறு சிறந்த அம்சங்களுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும். குறிப்பாக இதன் டிஸ்பிளே பயன்படுத்த அருமையாக இருக்கும்.

மீடியாடெக் சிப்செட் வசதி
மோட்டோ இ22எஸ் ஸ்மார்ட்போனில் மீடியாடெக் ஹீலியோ ஜி37 சிப்செட் வசதி உள்ளது. எனவே இயக்கத்திற்கு மிகவும் அருமையாக இருக்கும் இந்த அட்டகாசமான மோட்டோ ஸ்மார்ட்போன். அதேபோல் ஆண்ட்ராய்டு 12 இயங்குதள வசதியுடன் இந்த புதிய ஸ்மார்ட்போன் அறிமுகமாகும்.

மைக்ரோ எஸ்டி கார்ட் ஸ்லாட்
4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி ஸ்டோரேஜ் ஆதரவைக் கொண்டுள்ளது இந்த மோட்டோ இ22எஸ் ஸ்மார்ட்போன். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவுடன் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்ட் ஸ்லாட் ஆதரவைக் கொண்டுள்ளது மோட்டோ இ22எஸ்.

கேமரா?
மோட்டோ இ22எஸ் ஸ்மார்ட்போன் 16எம்பி மெயின் கேமரா + 2எம்பி டெப்த் சென்சார் என்கிற டூயல் ரியர் கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது. பின்பு செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி செல்பி கேமரா வசதியுடன் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். அதேபோல்எல்இடி பிளாஷ் மற்றும் பல கேமரா அம்சங்களை கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன்.

5000 எம்ஏஎச் பேட்டரி
5000 எம்ஏஎச் பேட்டரி மற்றும 10 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவைக் கொண்டுள்ளது இந்த மோட்டோ இ22எஸ் ஸ்மார்ட்போன். எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் கிடைக்கும். குறிப்பாக இந்த போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது
மோட்டோ நிறுவனம்.

கனெக்டிவிட்டி
மோட்டோ இ22எஸ் ஸ்மார்ட்போனில் 4ஜி வோல்ட்இ, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட், 3.5எம்எம் ஹெட்போன் ஜாக் போன்ற கனெக்டிவிட்டி ஆதரவுகள் உள்ளன. பின்பு இந்த போன் ரூ.12,500-க்குள் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. அதேபோல் ஆர்க்டிக் ப்ளூ மற்றும் ஈகோ பிளாக் நிறங்களில்இந்த போன் வெளிவரும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.


Click it and Unblock the Notifications