ஜனவரி 7 குறிச்சு வச்சுக்கோங்க: அதிரடி காட்டும் லாவா- வெளியான டீசர்!

|

ஜனவரி 7 ஆம் தேதி லாவா நிறுவனம் தனது புதிய ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளதாக அதன் டுவிட்டர் பக்கத்தில் உறுதிப்படுத்தியுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் எதிர்பார்க்கப்படும் விவரங்கள் குறித்து பார்க்கலாம்.

களமிறங்கிய லாவா நிறுவனம்

களமிறங்கிய லாவா நிறுவனம்

உள்நாட்டு பொருட்களை ஊக்குவிப்பதற்கான பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. அதன்படி மைக்ரோமேக்ஸ் நாட்டில் தங்களது ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்து வாடிக்கையாளர்களை கவரும் முயற்சியில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதற்கு இணையாக லாவா நிறுவனமும் களம் இறங்கியுள்ளது.

இந்தியாவில் புதிய மாடல் ஸ்மார்ட்போன்கள்

இந்தியாவில் புதிய மாடல் ஸ்மார்ட்போன்கள்

லாவா நிறுவனம் தங்களது புதிய மாடல் ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் அறிமுகம் செய்வதை உறுதிப்படுத்தியுள்ளது. இந்த வெளியீடானது ஜனவரி 7, 2021 இல் நடக்க இருக்கிறது. இதை ஒரு டீசர் மூலம் நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.

டீசர் மூலம் உறுதிப்படுத்திய லாவா

லாவா நிறுவனம் தனது புதிய ஸ்மார்ட்போன் வெளியீட்டை வீடியோ டீசர் ஒன்றை டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு உறுதிப்படுத்தியுள்ளது. அந்த டுவிட்டில் #AbDuniyaDekhegi என்ற ஹேஷ்டேக்குடன் ஸ்மார்ட்போன் தொழில் மீண்டும் ஒருபோதும் மாறாது என குறிப்பிட்டுள்ளது.

ஆன்லைன், ஆஃப்லைன் தளங்களில் கிடைக்கும்

ஆன்லைன், ஆஃப்லைன் தளங்களில் கிடைக்கும்

இதுகுறித்து சமீபத்தில் வெளியான தகவலில் லாவா இந்தியாவில் நான்கு ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இந்த புதிய ஸ்மார்ட்போன்கள் ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் தளங்களில் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டது.

குறைந்த விலையில் அறிமுகம்

குறைந்த விலையில் அறிமுகம்

லாவா இந்தியாவில் அறிமுகம் செய்த ஸ்மார்ட்போன்கள் ரூ.5000 முதல் ரூ.15,000 வரை விலை நிர்ணயிக்கப்பட்டது. புதிதாக வெளியாகும் எந்த ஸ்மார்ட்போன்களின் பெயர்களும் இதுவரை தெரியவில்லை. இருப்பினும் லாவா தற்போது அறிமுகம் செய்யும் புதிய மாடல் ஸ்மார்ட்போன்கள் வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
New Model of Lava Smartphone will be Launched on January 7 2021

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X