நல்ல வருஷம் பொறக்குது.. ஜனவரி 2026 ல் அறிமுகமாகும் 11 புது போன்கள்.. Redmi, Realme, Poco முதல் Oppo, Vivo வரை!
2026 புத்தாண்டுக்கு புதிய ஸ்மார்ட்போன் வாங்க வேண்டும் என்று திட்டமிட்டு உள்ளீர்களா? ஆம் என்றால் சரியான நேரத்தில் சரியான முடிவைத்தான் எடுத்து உள்ளீர்கள். ஏனென்றால் 2026 புத்தாண்டு ஆனது பல வகையான புதிய ஸ்மார்ட்போன்களுடன் வலுவான தொடக்கத்தை காண உள்ளது.
அதாவது ஜனவரி 2026 இல் இந்திய சந்தையில் - பல நிறுவனங்களின் தங்களுடைய மிட்-ரேன்ஜ் மற்றும் அப்பர் மிட்-ரேன்ஜ் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய உள்ளன. அப்படியாக ஜனவரி 2026 இல் என்னென்ன ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளன? அவைகள் என்ன விலைக்கு வரலாம்? என்கிற பட்டியல் இதோ:

1. ரெட்மி நோட் 15 சீரீஸ் (Redmi Note 15 Series): இது ஜனவரி 2026 இல் அறிமுகப்படுத்தப்படும் "மிகவும் பேசப்படும்" ஸ்மார்ட்போன் சீரிஸில் ஒன்றாக இருக்கும். இது ஜனவரி 6, 2026 அன்று இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படுவது உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதன்கீழ் நோட் 15, நோட் 15 ப்ரோ, நோட் 15 ப்ரோ பிளஸ் என மொத்தம் 3 மாடல்கள் வரலாம்.
விலையை பொறுத்தவரை ரெட்மி நோட் 15 சீரீஸின் பேஸிக் மாடல் (ரெட்மி நோட் 15 5ஜி) ஆனது ரூ.22,999 க்கு அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதே சீரிஸின் கீழ் வரும் ஹை எண்ட் மாடல் (ரெட்மி நோட் 15 ப்ரோ பிளஸ் 5ஜி) ஆனது ரூ.40,000 பட்ஜெட்டில் வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
2. ரியல்மி 16 ப்ரோ சீரீஸ் (Realme 16 Pro Series): இதுவும் அதே நாளில், அதாவது ஜனவரி 6 ஆம் தேதி அன்று இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்த சீரீஸின் கீழ் ரியல்மி 16 ப்ரோ மற்றும் ரியல்மி 16 ப்ரோ பிளஸ் அறிமுகம் செய்யப்படலாம்.
விலையை பொறுத்தவரை ரியல்மி 16 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது ரூ.30,990 க்கு அறிமுகம் செய்யப்படலாம் மற்றும் ரியல்மி 16 ப்ரோ பிளஸ் 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது ரூ.34,999 க்கு அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது இது ரெட்மி நோட் 15 சீரீஸ் உடன் நேரடியாக போட்டியிடும் விலையில் அறிமுகம் செய்யப்படலாம்.
3. போக்கோ எம்8 சீரீஸ் (Poco M8 Series): போக்கோ நிறுவனம் 2026 ஆம் ஆண்டு தொடங்கியதுமே அதன் போக்கோ எம்8 சீரிஸின் கீழ் போக்கோ எம்8 மற்றும் போக்கோ எம்8 ப்ரோ ஆகிய 2 மாடல்களை அறிமுகம் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் சரியான வெளியீட்டு தேதி குறித்த எந்த விவரங்களும் இல்லை.
இவ்விரு ஸ்மார்ட்போன்களுமே பட்ஜெட் உணர்வுள்ள வாங்குபவர்களின் கவனத்தி ஈர்க்கும்படியான விலை மற்றும் பெரிய பேட்டரிகள், திறமையான சிப்செட்கள் மற்றும் 5ஜி ஆதரவை வழங்க வாய்ப்புள்ளது. போக்கோ எம்8 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது ரூ.14,990 க்கும், போக்கோ எம்8 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது ரூ.17,990 க்கும் அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
4. ஒப்போ ரெனோ 15 சீரீஸ் 5ஜி (Oppo Reno 15 Series 5G): இந்த சீரிஸின் கீழ் ஒப்போ ரெனோ 15 (Oppo Reno 15), ஒப்போ ரெனோ 15 ப்ரோ (Oppo Reno 15 Pro) மற்றும் ஒப்போ ரெனோ 15 ப்ரோ மினி (Oppo Reno 15 Pro Mini) என மொத்தம் 3 5ஜி ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளது
இந்தியாவில் ரெனோ 15 சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் அறிமுக தேதி இன்னும் உறுதி செய்யப்படவில்லை, ஆனால் இந்த ஸ்மார்ட்போன்கள் எப்படியும் ஜனவரி 2026 முதல் பாதியில் அறிமுகமாகி விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒப்போ நிறுவனத்தின் முந்தைய விலை நிர்ணயப் போக்குகளின்படி, ரெனோ 15 சீரிஸ் சுமார் ரூ.35,000 பட்ஜெட்டில் தொடங்கலாம்.
5. விவோ எக்ஸ்200டி (Vivo X200T): விவோ நிறுவனத்தின் இந்த புதிய எக்ஸ் சீரீஸ் ஸ்மார்ட்போனானது இந்த டிஸம்ப்ரா மாத இறுதியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இப்போது இது ஜனவரி 2026 இல் அறிமுகப்படுத்தப்படும் விவோவின் முதல் பிரீமியம் ஸ்மார்ட்போன் ஆக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது ஜனவரி 2026 இறுதிக்குள் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விலை பிரீமியம் மிட்-ரேஞ்ச் பிரிவில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது ரூ.60,000 பட்ஜெட்டில் இருக்கலாம்.


Click it and Unblock the Notifications








