Home
Mobile

நவ.23 வரை எந்த போனும் வாங்கிடாதீங்க.. ஏன்னா ஒரே நாள்ல 5 போன்கள் அறிமுகமாகுது.. என்னென்ன மாடல்கள்?

அடுத்த வாரம், நவம்பர் 23 ஆம் தேதியன்று மொத்தம் 5 புதிய ஸ்மார்ட்போன்கள் சீனாவில் அறிமுகம் செய்யப்படவுள்ளன. அதென்ன ஸ்மார்ட்போன்கள்? அவைகளின் விலை நிர்ணயம் எப்படி இருக்கும்? என்னென்ன அம்சங்களை பேக் செய்யும்? இந்த 5 போன்களில் எதெல்லாம் இந்திய சந்தைக்கு வரும்? இதோ விவரங்கள்:

01. ஹானர் 100 சீரீஸ் (Honor 100 Series): ஹானர் நிறுவனத்தின் இந்த லேட்டஸ்ட் ஸ்மார்ட்போன் சீரிஸின் கீழ் ஹானர் 100 மற்றும் ஹானர் 100 ப்ரோ என்கிற 2 மாடல்கள் அறிமுகமாகும். முக்கிய அம்சங்களை பொறுத்தவரை, ஹானர் 100 சீரீஸின் வெண்ணிலா வேரியண்ட் ஆன ஹானர் 100 ஸ்னாப்டிராகன் 7 ஜென் 3 சிப் (Snapdragon 7 Gen 3) மூலம் இயக்கப்படும்.

நவ.23.. ஒரே நாள்ல 5 போன்கள் அறிமுகமாகுது.. என்னென்ன மாடல்கள்?

மறுகையில் உள்ள ப்ரோ வேரியண்ட் ஆனது ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 சிப்செட்டை (Snapdragon 8 Gen 2 SoC) பேக் செய்யும். மேலும் இவ்விரண்டு ஸ்மார்ட்போன்களுமே 3840ஹெர்ட்ஸ வரையிலான பிடபுள்யூஎம் டிம்மிங் (3840Hz PWM dimming) உடனான 1.5கே டிஸ்பிளேவை (1.5K display) கொண்டிருக்கும்.

கூடுதலாக, ஓஐஎஸ் (OIS) என்று சுருக்கமாக அழைக்கப்படும் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (Optical image stabilization) உடனான 50எம்பி மெயின் கேமராவையும் கொண்டிருக்கும். கடைசியாக இவ்விரு ஹானர் மாடல்களுமே 100வாட்ஸ் வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவையும் (100W Wired Fast Charging Support) கொண்டிருக்கும்.

நவ.23.. ஒரே நாள்ல 5 போன்கள் அறிமுகமாகுது.. என்னென்ன மாடல்கள்?

ஹானர் நிறுவனம் தனது லேட்டஸ்ட் ஸ்மார்ட்போன்களை இந்திய சந்தைக்கு கொண்டுவர தொடங்கியுள்ளதால், சீன அறிமுகத்தை தொடர்ந்து ஹானர் 100 சீரீஸ் இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்படலாம். எதிர்பார்க்கப்படும் விலை நிர்ணயத்தை பொறுத்தவரை, ஹானர் 100 ரூ.39,990 க்கும், ப்ரோ மாடல் ரூ.59,990 க்கும் அறிமுகம் செய்யப்படலாம்.

02. ஒப்போ ரெனோ 11 சீரீஸ் (Oppo Reno 11 Series): ஒப்போ நிறுவனமும் நவம்பர் 23 ஆம் தேதியன்று ஒரு வெளியீட்டு நிகழ்வை திட்டமிட்டுள்ளது. அந்நாளில் அதன் ஒப்போ ரெனோ 11 சீரீஸின் கீழ் ஒப்போ ரெனோ 11 மற்றும் ஒப்போ ரெனோ 11 ப்ரோ என்கிற 2 மாடல்கள் அறிமுகமாகும். இரண்டுமே இந்திய சந்தைக்கும் வரும் என்பதில் சந்தேகமே வேண்டாம்.

நவ.23.. ஒரே நாள்ல 5 போன்கள் அறிமுகமாகுது.. என்னென்ன மாடல்கள்?

வெண்ணிலா வேரியண்ட் ஆனது மீடியாடெக் டைமன்சிட்டி 8200 (MediaTek Dimensity 8200) சிப்செட் மூலம் இயக்கப்படும்; ப்ரோ வேரியண்ட் ஆனது குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 (Qualcomm Snapdragon 8 Plus Gen 1) சிப்செட்டை கொண்டிருக்கும். இரண்டு போன்களுமே 32எம்பி செல்பி கேமராவை பேக் செய்யும்.

ரியர் கேமராக்களை பொறுத்தவரை, 8எம்பி சோனி ஐஎம்எக்ஸ்355 அல்ட்ராவைட் கேமரா மற்றும் 32எம்பி சோனி ஐஎம்எக்ஸ்709 2எக்ஸ் டெலிஃபோட்டோ கேமரா இடம்பெறும். வேறுபாடுகளை பொறுத்தவரை ப்ரோ வேரியண்ட்டில் 50எம்பி சோனி IMX890 மெயின் சென்சார் இருக்கும்; வெண்ணிலா வேரியண்ட்டில் 50எம்பி சோனி LYT-600 மெயின் சென்சார் இருக்கும்.

மேலும் இவ்விரு ஸ்மார்ட்போன்களின் சார்ஜிங் வேகமும் வித்தியாசமாக இருக்கும். ரெனோ 11 ப்ரோவில் 80வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு இருக்கும்; வெண்ணிலா வேரியண்ட்டில் 67வாட்ஸ் சார்ஜிங் ஆதரவு இருக்கும். விலையை பொறுத்தவரை ரெனோ 11 ரூ.34,990 க்கும் ரெனோ 11 ப்ரோ ரூ.47,990 க்கும் அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

03. ரெட் மேஜிக் 9 ப்ரோ (Red Magic 9 Pro): இதுவும் நவம்பர் 23 ஆம் தேதியன்று சீனாவில் அறிமுகம் செய்யப்படவுள்ளது. பெரும்பாழும் இந்த ரெட் மேஜிக் மாடல் நேரடியாக இந்திய சந்தையில் அறிமுகம் ஆகாது. இருப்பினும் இது குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 சிப்செட் (Qualcomm Snapdragon 8 Gen 3) மூலம் இயக்கப்படும் முதல் கேமிங் ஸ்மார்ட்போனாக இருக்கும்.

Best Mobiles in India

English summary
New Mobile Launch November 23 Honor 100 Oppo reno 11 Series
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X