Home
Mobile

கடுகு சிறுத்தாலும்.. OPPO-வின் குட்டி போன்.. 6500mAh பேட்டரி, 200MP கேமராவுடன் புது மினி போன்!

ஒப்போ நிறுவனம் அதன் ரெனோ 15 சீரீஸ் (Oppo Reno 15 Series) ஸ்மார்ட்போன்களை வருகிற நவம்பர் 17 ஆம் தேதி அன்று அறிமுகப்படுத்த திட்டமிட்டு உள்ளது. இதன் கீழ் "மினி ஸ்மார்ட்போன்" உட்பட மொத்தம் 3 மாடல்கள் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக இந்த சீரீஸின் கீழ் வரும் மாடல் ஆனது ஒப்போ ரெனோ 15 மினி (Oppo Reno 15 Mini) என்கிற மாடல் பெயரை பெறுமென்று கூறப்பட்டது. இப்போது வெளியீட்டிற்கு சில நாட்களுக்கு முன்னதாக கிடைத்துள்ள தகவல், அது ஒப்போ ரெனோ 15சி என சந்தைப்படுத்தலாம் என்பது போல் தெரிகிறது.

கடுகு சிறுத்தாலும்.. OPPO-வின் குட்டி போன்.. 6500mAh பேட்டரி, 200MP!

ஆக ஒப்போ ரெனோ 15 சீரீஸின் கீழ் ஒப்போ ரெனோ 15 (OPPO Reno 15), ஒப்போ ரெனோ 15 ப்ரோ (OPPO Reno 15 Pro) மற்றும் ஒப்போ ரெனோ 15சி (OPPO Reno 15C) ஆகிய மூன்று மாடல்கள் இருக்கலாம்

ஒப்போ ரெனோ 15 ப்ரோ ஸ்மார்ட்போனில் என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம் (Oppo Reno 15 Pro Expected Specifications)? நம்பகமான டிப்ஸ்டர் டிஜிட்டல் சாட் ஸ்டேஷன் வழியாக கிடைத்த தகவல்களின்படி ஒப்போ ரெனோ 15 ப்ரோ ஸ்மார்ட்போனில் 6.78 இன்ச் அளவிலான பிளாட் டிபிப்ளே பொருத்தப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. இது ஒரு மெட்டல் ஃபிரேமையும் கொண்டிருக்கலாம்.

கேமராக்களை பொறுத்தவரை இது 200 மெகாபிக்சல் ப்ரைமரி கேமரா, 50 மெகாபிக்சல் அல்ட்ராவைடு கேமரா மற்றும் 50 மெகாபிக்சல் பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ கேமரா ஆகியவைகளை கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது. முன்பக்கத்தில், இது 50 மெகாபிக்சல் செல்பீ கேமரா பொருத்தப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

இது 80W வயர்டு மற்றும் 50W வயர்லெஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 6500mAh பேட்டரியை கொண்டிருக்கலாம். இந்த ஸ்மார்ட்போன் USB 2.0-வை ஆதரிக்கும் என்றும் கூறப்படுகிறது. சிப்செட்டை பொறுத்தவரை ஒப்போ ரெனோ 15 ப்ரோ மாடல் ஆனது மீடியா டெக் டைமன்சிட்டி 8450 சிப்செட் மூலம் இயக்கப்படலாம். இது 16 ஜிபி வரை ரேம் மற்றும் 1டிபி வரையிலான இன்டர்னல் ஸ்டோரேஜுடன் இணைக்கப்படலாம்

ஒப்போ ரெனோ 15 மினி ஸ்மார்ட்போனில் என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம் (Oppo Reno 15C Expected Specifications)? ​​டிப்ஸ்டர் சுதான்ஷு அம்போர் (Sudhanshu Ambhore) மற்றும் 91மொபைல்ஸ் (91mobiles) வழியாக கிடைத்த விவரங்களின்படி, இது 6.31 இன்ச் அளவிலான டிஸ்பிளேவுடன் அறிமுகமாகலாம். சிப்செட்டை பொறுத்தவரை ரெனோ 15 மினி மாடலிலும் ப்ரோ மாடலில் உள்ள அதே டைமன்சிட்டி 8450 சிப்செட் பேக் செய்யப்படலாம். பேட்டரி, கேமரா செட்டப்பிலும் ஒற்றுமைகளை காணலாம்.

எப்போது இந்திய அறிமுகம்? என்ன விலைக்கு வரும்? நவம்பர் 17 நடக்கும் சீன அறிமுகத்தை தொடர்ந்து இந்த 3 புதிய ஒப்போ ரெனோ 15 சீரீஸ் ஸ்மார்ட்போன்களை 2025 டிசம்பர் மாத இறுதிக்குள் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதனை தொடர்ந்து ஜனவரி 2026 முதல் அல்லது இரண்டாவது வாரத்தில் இருந்து இந்தியாவில் வாங்குவதற்கு கிடைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

விலையை பொறுத்தவரை ஒப்போ ரெனோ 15 ஆனது 39,990 க்கும், ரெனோ 15 ப்ரோ மாடல் ரூ.49,990 க்கும் அறிமுகம் செய்யப்படலாம். ஒப்போ ரெனோ 15எஸ் ஸ்மார்ட்போனின் விலை விவரங்கள் குறித்த தகவல் இல்லை. பெரும்பாலும் இதன் விலை - ஸ்டாண்டர்ட் மற்றும் ப்ரோ வேரியண்ட்களுக்கு இடையே நிலைநிறுத்தப்படலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
New Mini Phone Under Oppo Reno 15 Series Could Be Marketed as Oppo Reno 15C Launching November 17
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X