மிட்-ரேன்ஜ் ப்ரைஸ்ல.. சிங்கிள் ஸ்டோரேஜ்ல.. 'கிங்' போல ஒரு புதிய Vivo போன்!

|

லேட்-ஆ வந்த மொபைல் போனாக இருந்தாலும் சரி.. லேட்டஸ்ட் ஆக வந்த ஸ்மார்ட்போனாக இருந்தாலும் சரி.. "வாங்குனா -Vivo; இல்லனா - நோ..நோ" என்று கூறுபவரா நீங்கள்?

ஆம் எனில், லேட்டஸ்ட் ஆக (மலேசியாவில்) அறிமுகமாகி ஆனால் கொஞ்சம் லேட் ஆக இந்தியாவுக்கு வந்துள்ள, ஒரு மிட்-ரேன்ஞ் விவோ ஸ்மார்ட்போனை பற்றி நீங்கள் கட்டாயம் அறிந்துகொள்ள வேண்டும்!

அதென்ன மாடல்?

அதென்ன மாடல்?

அது Vivo Y35 ஸ்மார்ட்போன் ஆகும்.. இது நிறுவனத்தின் Y சீரீஸ் போர்ட்ஃபோலியோவிற்க்குள் நுழைந்துள்ள லேட்டஸ்ட் மிட்-ரேன்ஜ் ஸ்மார்ட்போன் ஆகும்.

விவோ ஒய்35 ஸ்மார்ட்போனின் இந்திய விலை நிர்ணயம் என்ன? இது என்னென்ன முக்கிய அம்சங்களை பேக் செய்கிறது? எப்போது முதல் வாங்க கிடைக்கும்? அறிமுக சலுகைகள் ஏதேனும் உண்டா? வாருங்கள் விரிவாக பார்க்கலாம்!

மொத்தம் 8 போன்கள்! இதுக்கு மேல விலை குறையாது; சரியான வாய்ப்பு!மொத்தம் 8 போன்கள்! இதுக்கு மேல விலை குறையாது; சரியான வாய்ப்பு!

முக்கிய அம்சங்களை பற்றி பேசும் போது..!

முக்கிய அம்சங்களை பற்றி பேசும் போது..!

இன்று (அதாவது ஆகஸ்ட் 29) இந்தியாவில் அறிமுகமான இந்த புதிய விவோ ஸ்மார்ட்போன் ஆனது 90Hz ரெஃப்ரெஷ் ரேட்-ஐ கொண்ட ஃபுல்-எச்டி+ டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 680 SoC ப்ராசஸர், 44W ஃபிளாஷ் சார்ஜ் ஆதரவை கொண்ட 5,000mAh பேட்டரி, எலக்ட்ரானிக் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (EIS) உடனான 50 மெகாபிக்சல் சூப்பர் நைட் கேமரா போன்ற முக்கிய அம்சங்களை பேக் செய்கிறது.

சுருக்கமாக இதை ஒரு 'ஸ்பெக்ஸ்-பேக்டு' ஸ்மார்ட்போன் என்றே கூறலாம்!

விரிவான அம்சங்களை பற்றி பார்க்கும் போது..!

விரிவான அம்சங்களை பற்றி பார்க்கும் போது..!

டூயல் சிம் (நானோ) ஆதரவு கொண்ட Vivo Y35 ஸ்மார்ட்போன் ஆனது ஆண்ட்ராய்டு 12 ஓஎஸ் அடிப்படையிலான நிறுவனத்தின் சொந்த Funtouch OS 12 கொண்டு இயங்குகிறது.

முன்னரே குறிப்பிட்டபடி, இது 90Hz ரெஃப்ரெஷ் ரேட் சப்போர்ட் உடனான 6.58-இன்ச் அளவிலான Full-HD+ (1,080x2,408 பிக்சல்ஸ்) LCD டிஸ்ப்ளேவை பேக் செய்கிறது.

Redmi-யின் பவர்ஃபுல் போன் மீது பலே ஆபர்! இதுக்கு தானே வெயிட் பண்ணோம்!Redmi-யின் பவர்ஃபுல் போன் மீது பலே ஆபர்! இதுக்கு தானே வெயிட் பண்ணோம்!

என்ன ப்ராசஸர்? எத்தனை ஜிபி ரேம்?

என்ன ப்ராசஸர்? எத்தனை ஜிபி ரேம்?

இந்த விவோ ஸ்மார்ட்போன் ஆனது குவால்காம் ஸ்னாப்டிராகன் 680 SoC ப்ராசஸர் மூலம் இயக்கப்படுகிறது, இது 8ஜிபி ரேம் உடன் இணைக்கப்பட்டுள்ளது.

சுவாரசியமாக இந்த லேட்டஸ்ட் விவோ ஒய்-சீரிஸ் ஸ்மார்ட்போன் ஆனது Extended RAM அம்சத்துடன் வருகிறது,. அதாவது இன்டர்னல் ஸ்டோரேஜில் இருந்து 8ஜிபி ரேம்-ஐ கடன் வாங்குவதன் வழியாக இதன் ஒட்டுமொத்த RAM-ஐ 16ஜிபி வரை அதிகரிக்கலாம்!

முன்பக்க, பின்பக்க கேமராக்கள் எப்படி?

முன்பக்க, பின்பக்க கேமராக்கள் எப்படி?

போட்டோக்கள் மற்றும் வீடியோக்களுக்கு வரும் போது, Vivo Y35 ஆனது f/1.8 அபெர்ச்சர் லென்ஸுடனான 50 மெகாபிக்சல் மெயின் சென்சார் + 2-மெகாபிக்சல் (f/2.4) பொக்கே கேமரா + 2-மெகாபிக்சல் f/2.4) மேக்ரோ சென்சார் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்பை பேக் செய்கிறது.

செல்பீக்கள் மற்றும் வீடியோ கால்கள் என்று வரும் போது, இதில் f/2.0 அபெர்ச்சர் லென்ஸுடனான 16 மெகாபிக்சல் முன்பக்க கேமரா உள்ளது.

2 நாள் பேட்டரி லைஃப் வேணும்னா.. இந்த 10 Samsung போன்களும் தான் லாயக்கி!2 நாள் பேட்டரி லைஃப் வேணும்னா.. இந்த 10 Samsung போன்களும் தான் லாயக்கி!

மொத்த எவ்வளவு ஸ்டோரேஜ்? என்னென்ன கனெக்டிவிட்டி ஆப்ஷன்ஸ்?

மொத்த எவ்வளவு ஸ்டோரேஜ்? என்னென்ன கனெக்டிவிட்டி ஆப்ஷன்ஸ்?

புதிய Vivo Y35 ஆனது 128GB வரையிலான இன்டர்னல் ஸ்டோரேஜ் உடன் வருகிறது. மேலும் மைக்ரோ எஸ்டி கார்ட்டை பயன்படுத்துவதன் வழியாக, இதன் ஸ்டோரேஜை 1TB வரை விரிவாக்க முடியும்.,

கனெக்டிவிட்டி விருப்பங்களை பொறுத்தவரை, இதில் வைஃபை, ப்ளூடூத் வி5, ஜிபிஎஸ், க்ளோனாஸ், ஓடிஜி, FM ரேடியோ மற்றும் யூஎஸ்பி டைப்-சி போர்ட் போன்றவைகள் உள்ளன

என்னென்ன சென்சார்களை பேக் செய்கிறது? பேட்டரித்திறன் எவ்வளவு?

என்னென்ன சென்சார்களை பேக் செய்கிறது? பேட்டரித்திறன் எவ்வளவு?

விவோ ஓய்35 ஸ்மார்ட்போனில் ஆக்ஸலரேமீட்டர், ஆம்பியன்ட் லைட், இ-காம்பஸ், கைரோஸ்கோப் மற்றும் ப்ராக்ஸிமிட்டி (Accelerometer, Ambient light sensor, e-Compass, Gyroscope and Proximity) போன்ற சென்சார்கள் உள்ளன.

தவிர இந்த ஸ்மார்ட்போனில் ஃபிங்கர் பிரிண்ட் சென்சார் மற்றும் ஃபேஸ் வேக் அம்சமும் உள்ளது. முன்னரே குறிப்பிட்டபடி, இது 44W ஃபிளாஷ் சார்ஜ் ஆதரவை கொண்ட 5,000mAh பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது.

Camera Phone-னு வாங்குனா இதை வாங்கணும்; இல்லனா போட்டோவே எடுக்க கூடாது!Camera Phone-னு வாங்குனா இதை வாங்கணும்; இல்லனா போட்டோவே எடுக்க கூடாது!

Vivo Y35 ஸ்மார்ட்போனின் விலை & விற்பனை:

Vivo Y35 ஸ்மார்ட்போனின் விலை & விற்பனை:

இந்தியாவில் Vivo Y35 ஸ்மார்ட்போன் ஆனது சிங்கிள் 8ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷனின் கீழ் மட்டுமே அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

அதன் விலை ரூ.18,499 ஆகும். இது விவோ இந்தியா இ-ஸ்டோர் வழியாகவும், அனைத்து பார்ட்னர் ரீடெய்ல் ஸ்டோர்களின் வழியாகவும் வாங்க கிடைக்கிறது.

அறிமுக சலுகை உண்டா?

அறிமுக சலுகை உண்டா?

அகேட் பிளாக் மற்றும் டான் கோல்ட் என்கிற 2 கலர் ஆப்ஷன்களின் கீழ் விற்பனைக்கு வந்துள்ள விவோ ஒய்35 ஸ்மார்ட்போனின் மீது ஒரு பிரத்யேக சலுகை அணுக கிடைக்கிறது.

நீங்கள் இந்த ஸ்மார்ட்போனை ICICI / SBI / Kotak / OneCard வழியாக வாங்கினால் ரூ.1000 என்கிற கேஷ்பேக் ஆபர் அணுக கிடைக்கும். விவோ இந்தியா நிறுவனத்தின் கூற்றுப்படி இந்த கேஷ்பேக் சலுகைக்கு ஆனது 2022 ஆம் செப்டம்பர் 30 ஆம் தேதி வரை மட்டுமே அணுக கிடைக்கும்!

Most Read Articles
Best Mobiles in India

English summary
New Mid Range Smartphone Under Rs 20000 Vivo Y35 Launched in India Offer Price Sale Specifications

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X