Realme-யின் புதிய போன்: 'ரிச்' ஆன அம்சங்கள்; 'வாவ்' சொல்ல வைக்கும் விலை!

|

ரியல்மி இந்தியா (Realme India) நிறுவனம், அதன் அடுத்த ஸ்மார்ட்போனை 'டீஸ்' செய்ய தொடங்கி உள்ளது. அதென்ன ஸ்மார்ட்போன்? எப்போது அறிமுகமாகும்? என்னென்ன அம்சங்களை பேக் செய்யும்? என்ன விலைக்கு அறிமுகமாகும்? வாருங்கள் விரிவாக பார்க்கலாம்!

Realme-யின் அடுத்த ஸ்மார்ட்போன்!

Realme-யின் அடுத்த ஸ்மார்ட்போன்!

அது Realme GT Neo 3T ஆகும். இந்த ஸ்மார்ட்போன் 80W பாஸ்ட் சார்ஜிங் உடன் வரும் என்பதை ரியல்மி இந்தியா அதிகாரப்பூர்வமாக டீஸ் செய்துள்ளது.

இருப்பினும் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ டீஸர் இந்த ஸ்மார்ட்போனின் சரியான வெளியீட்டு தேதியை வெளிப்படுத்தவில்லை, ஆனால் "விரைவில் வரும்" என்பதை மட்டும் உறுதிப்படுத்துகிறது.

பிரீமியம் போன் வாங்கணும்னு முடிவு பண்ணிட்டா இந்த 8-ல 1 தான் வாங்கணும்!பிரீமியம் போன் வாங்கணும்னு முடிவு பண்ணிட்டா இந்த 8-ல 1 தான் வாங்கணும்!

டிசைன் - நல்லாவே இருக்கு!

டிசைன் - நல்லாவே இருக்கு!

80W ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் வரும் Realme GT Neo 3T-க்கான மைக்ரோசைட் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் லைவ் ஆக உள்ளது.

அதன் வழியாக, இந்த ஸ்மார்ட்போன் ஆனது பஞ்ச் ஹோல் டிஸ்ப்ளே மற்றும் கர்வ்டு எட்ஜ்களைக் கொண்டிருக்கும் என்பதை அறிய முடிகிறது.

இது என்னென்ன அம்சங்களை பேக் செய்யும்?

இது என்னென்ன அம்சங்களை பேக் செய்யும்?

Realme GT Neo 3T ஸ்மார்ட்போன் ஆனது ஏற்கனவே ஐரோப்பிய சந்தையில் அறிமுகமாகி விட்டதால், அதன் அம்சங்கள் குறித்து பெரிய அளவிலான குழப்பங்கள் இல்லை; இந்திய வேரியண்ட்டும் அதே அம்சங்களுடன் தான் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Truecaller சீக்ரெட்ஸ்: இது தெரிஞ்ச அடுத்த நிமிஷமே App-ஐ திறப்பீங்க!Truecaller சீக்ரெட்ஸ்: இது தெரிஞ்ச அடுத்த நிமிஷமே App-ஐ திறப்பீங்க!

Realme Pad X-ஐ தொடர்ந்து!

Realme Pad X-ஐ தொடர்ந்து!

நினைவூட்டும் வண்ணம், Realme GT Neo 3T ஸ்மார்ட்போன் ஆனது கடந்த ஜூன் மாதம் உலகளவில் அறிமுகப்படுத்தப்பட்டது.

முன்னதாக இது அகமதாபாத்தில் உள்ள Realme நிறுவனத்தின் ஃபிளாக்ஷிப் ஸ்டோரில் Realme Pad X உடன் காட்சிப்படுத்தப்பட்டது.

Pad X சில வாரங்களுக்கு முன்பு இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில், Realme GT Neo 3T விரைவில் அறிமுகமாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

என்ன டிஸ்பிளே? என்னே ப்ராசஸர்?

என்ன டிஸ்பிளே? என்னே ப்ராசஸர்?

ரியல்மி ஜிடி நியோ 3டி ஆனது 6.2-இன்ச் AMOLED FHD+ டிஸ்ப்ளேவுடன் வரக்கூடும், இது 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்-ஐ வழங்குகிறது.

இந்த ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 870 சிப்செட் மூலம் இயக்கப்படும் மற்றும் 5 ஜிபி 'விர்ச்சுவல் ரேம்' உடன் 8 ஜிபி வரையிலான ரேம்-ஐ பேக் செய்யலாம். இது 256ஜிபி வரையிலான இன்டர்னல் ஸ்டோரேஜையும் வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

OPPO ஸ்மார்ட்போன் வைத்து இருக்கும் எல்லோருக்கும் ஒரு முக்கிய அலெர்ட்!OPPO ஸ்மார்ட்போன் வைத்து இருக்கும் எல்லோருக்கும் ஒரு முக்கிய அலெர்ட்!

கேமராக்கள் எப்படி?

கேமராக்கள் எப்படி?

கேமராக்களை பொறுத்தவரை, Realme GT Neo 3T ஆனது ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்பைக் கொண்டிருக்கும்.

அதில் 64MP மெயின் சென்சார் + அல்ட்ரா-வைட் ஆங்கிள் லென்ஸ் + மேக்ரோ லென்ஸ் ஆகியவற்றை கொண்டிருக்கும். செல்பீ மற்றும் வீடியோ கால்களுக்காக 16MP கேமராவை கொண்டிருக்கக்கூடும்.

கேமராக்கள் எப்படி? என்ன பேட்டரியை பேக் செய்யும்?

கேமராக்கள் எப்படி? என்ன பேட்டரியை பேக் செய்யும்?

கேமராக்களை பொறுத்தவரை, Realme GT Neo 3T ஆனது ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்பைக் கொண்டிருக்கும்.

அதில் 64MP மெயின் சென்சார் + அல்ட்ரா-வைட் ஆங்கிள் லென்ஸ் + மேக்ரோ லென்ஸ் ஆகியவற்றை கொண்டிருக்கும். செல்பீ மற்றும் வீடியோ கால்களுக்காக 16MP கேமராவை கொண்டிருக்கக்கூடும்.

பேட்டரியைப் பொறுத்தவரை, முன்னரே குறிப்பிட்டபடி Realme GT Neo 3T ஆனது 80W ஃபாஸ்ட் சார்ஜிங்கை ஆதரிக்கும் 5,000 mAh பேட்டரியுடன் வரக்கூடும்.

ஸ்மார்ட் வாட்ச் அலெர்ட்! செப்.7 வரை பொறுமை அவசியம்! ஏனென்றால்?ஸ்மார்ட் வாட்ச் அலெர்ட்! செப்.7 வரை பொறுமை அவசியம்! ஏனென்றால்?

இந்தியாவில் என் விலைக்கு அறிமுகமாகும்?

இந்தியாவில் என் விலைக்கு அறிமுகமாகும்?

Realme GT Neo 3T ஆனது கண்டிப்பாக மிட் ரேன்ஜ் பிரிவில் தான் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது இந்தியாவில் இதன் விலை ரூ.30,000-ஐ சுற்றிய பட்ஜெட்டில் எங்காவது ஒரு புள்ளியில் அமரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த ஸ்மார்ட்போன் மூன்று கலர் ஆப்ஷன்களில் வரும். ரேசிங் ஃபிளாக் டிசைன் உடன் யெல்லோ மற்றும் ஒயிட் வேரியண்ட்கள் மற்றும் மேட் பினிஷ் டிசைன் உடன் பிளாக் கலர் ஆப்ஷன்!

Best Mobiles in India

English summary
New Mid Range Smartphone 2022 Realme GT Neo 3T India Launch Date Specifications Price

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X