இப்படி ஒரு ஆல்-ரவுண்டர் பட்ஜெட் போனுக்காக தான் பல மாசம் காத்திருந்தோம்!

|

சிலர் ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட ஸ்மார்ட்போனை வாங்குங்கள் என்று பரிந்துரைக்கிறார்கள், சிலர் பெரிய பேட்டரி கொண்ட மொபைல் போனை வாங்குங்கள் என்று பரிந்துரைக்கிறார்கள்.

உண்மையில் எதை தான் வாங்க வேண்டும் என்று எங்களிடம் கேட்டால்.. இரண்டுமே உள்ள ஒரு ஸ்மார்ட்போனை பார்த்து வாங்குங்கள் என்று தான் கூறுவோம்.

அதாவது 'டிசன்ட்' ஆன ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் மற்றும் 5000mAh க்கு மேலான திறனை கொண்ட பேட்டரியை பேக் செய்யும் ஒரு ஸ்மார்ட்போனை வாங்குங்கள் என்று கூறுவோம்.

அப்படி ஒரு ஸ்மார்ட்போன் இருக்கிறது; அதுவும் பட்ஜெட் விலையில்!

அப்படி ஒரு ஸ்மார்ட்போன் இருக்கிறது; அதுவும் பட்ஜெட் விலையில்!

நாம் இங்கே விரிவாக பேசவுள்ள ஸ்மார்ட்போனின் பெயர் இன்பினிக்ஸ் ஹாட் 12 (Infinix Hot 12) ஆகும். இந்த ஸ்மார்ட்போன் வருகிற ஆகஸ்ட் 17 ஆம் தேதியன்று இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

இன்பினிக்ஸ் ஹாட் 12 ஸ்மார்ட்போன் ஆனது 18W ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் 6,000mAh பேட்டரியை கொண்டுள்ளது. இதன் 'பேட்டரி டிப்பார்ட்மென்ட்' மட்டும் தான் வெயிட்டான அம்சங்களை பேக் செய்கிறது என்று நினைத்து விட வேண்டாம்.

பெரிய டிஸ்பிளே.. விலையை மீறிய கேமரா செட்டப்!

பெரிய டிஸ்பிளே.. விலையை மீறிய கேமரா செட்டப்!

இந்த லேட்டஸ்ட் இன்பினிக்ஸ் ஸ்மார்ட்போனின் மற்ற அம்சங்களும் கூட வாடிக்கையாளர்களை ஈர்க்க தவறவில்லை. அப்படி என்னென்ன அம்சங்களை கொண்டுள்ளது? என்ன விலைக்கு அறிமுகமாகும்? எப்போது முதல் விற்பனைக்கு வரும்? வாருங்கள் விரிவாக பார்க்கலாம்!

Infinix Hot 12 ஸ்மார்ட்போனின் இந்திய வேரியண்ட் ஆனது 6.82-இன்ச் HD+ டிஸ்ப்ளேவை கொண்டிருக்கும் என்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. மேலும் இது 50-மெகாபிக்சல் மெயின் சென்சார் உடனான ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்பையும் கொண்டிருக்கும்.

Infinix Hot 12 ஸ்மார்ட்போனின் விரிவான அம்சங்கள்!

Infinix Hot 12 ஸ்மார்ட்போனின் விரிவான அம்சங்கள்!

இன்பினிக்ஸ் Hot 12 ஆனது 90Hz ரெஃப்ரெஷ் ரேட் சப்போர்ட் உடனான 6.8 இன்ச் அளவிலான HD+ டிஸ்ப்ளேவை கொண்டிருக்கும். இதன் டிஸ்பிளேவில் செல்பீ கேமராவை உட்பொதிப்பதற்கான வாட்டர் டிராப்-ஸ்டைல் ​​நாட்ச்சும் உள்ளது.

இது ஆண்ட்ராய்டு 12 ஓஎஸ் அடிப்படையிலான நிறுவனத்தின் சொந்த XOS 10.6 கொண்டு இயங்குகிறது. மேலும் இது ஆக்டா-கோர் MediaTek Helio G85 SoC உடனாக 6GB வரையிலான ரேம் உடன் இணைக்கப்படும்.

கேமராக்களை பொறுத்தவரை, இதில் 50எம்பி மெயின் கேமரா மட்டுமே தற்போது வரை உறுதி செய்யப்பட்டுள்ளது. மீதம் உள்ள சென்சார்கள் - 2 மெகாபிக்சல் இரண்டாம் நிலை கேமரா மற்றும் AI லென்ஸ் ஆக இருக்கலாம். முன்பக்கத்தில், இது 8 மெகாபிக்சல் செல்பீ கேமராவை கொண்டிருக்கலாம்.

நல்ல ஸ்டோரேஜ்.. போதும்-போதும்னு பேட்டரி!

நல்ல ஸ்டோரேஜ்.. போதும்-போதும்னு பேட்டரி!

128ஜிபி அளவிலான இன்டர்னல் ஸ்டோரேஜ் உடன் வரும் இன்பினிக்ஸ் ஹாட் 12 ஸ்மார்ட்போன் ஆனது பக்கவாட்டில் பொருத்தப்பட்ட ஃபிங்கர் பிரிண்ட் சென்சாரையும் வழங்குகிறது.

முன்னரே குறிப்பிட்டபடி, இது 18W ஃபாஸ்ட் சார்ஜிங்கை ஆதரிக்கும் 5,000mAh பேட்டரி மூலம் சக்தியூட்டப்படும். சுவாரசியமாக இந்த ஸ்மார்ட்போனில் டிடிஎஸ் உடன் கூடிய டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்களும் உள்ளன.

என்ன விலைக்கு வரும்?

என்ன விலைக்கு வரும்?

வருகிற ஆகஸ்ட் 17 ஆம் தேதி நடக்கும் இந்திய அறிமுகத்திற்கு பின்னர், இன்பினிக்ஸ் ஹாட் 12 ஸ்மார்ட்போன் ஆனது பிரபல இகாமர்ஸ் வலைத்தளமான பிளிப்கார்ட் வழியாக விற்பனை செய்யப்படும்.

இருப்பினும் இதன் இந்திய விலை விவரங்கள் குறித்து எந்த தகவலும் இல்லை. ஆனாலும் Infinix Hot 12 ஆனது இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட சில உலகளாவிய சந்தைகளில் ஏற்கனவே அறிமுகமாகி விட்டதால், நம்மால் சில கணிப்புகளை நிகழ்த்த முடியும்.

நைஜீரியாவில் இன்பினிக்ஸ் ஹாட் 12 ஸ்மார்ட்போனின் 4ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ஆனது இந்திய மதிப்பின்படி தோராயமாக ரூ.17,200 க்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவிலும் நாம் இதேபோன்ற விலை நிர்ணயத்தை எதிர்பார்க்கலாம்.

இது லெஜண்ட் ஒயிட், லக்கி கிரீன், ஆரிஜின் ப்ளூ மற்றும் ரேசிங் பிளாக் என்கிற 4 கலர் ஆப்ஷன்களின் கீழ் வெளியாகும் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
New Mid Range Budget Smartphone Infinix Hot 12 India Launch Date August 17 Price Specifications

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X