இந்த 5G போனின் விலையை சொன்னா.. பொய் சொல்றோம்னு நினைப்பீங்க! அவ்ளோ கம்மி!

|

கடந்த சில வாரங்களாகவே டெக்னோ (Tecno) என்கிற ஸ்மார்ட்போன் நிறுவனத்தின் பெயரை அடிக்கடி கேட்க முடிகிறது.

பட்ஜெட் மற்றும் மிட்-ரேன்ஜ் பட்ஜெட் விலையிலான ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து, மெல்ல மெல்ல இந்திய சந்தையில் தனக்கென ஒரு இடத்தை, தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை "கைப்பற்றி" வரும் ஒரு நிறுவனம் தான் - டெக்னோ இந்தியா!

வரிசையாக புது போன்களை அறிமுகம் செய்யும் Tecno!

வரிசையாக புது போன்களை அறிமுகம் செய்யும் Tecno!

நினைவூட்டும் வண்ணம், டெக்னோ இந்தியா நிறுவனமானது, கடந்த ஜூன் மாதம் Pova 3 மாடலை அறிமுகம் செய்தது. பின்னர் ஜூலை மாதம் Camon 19 மற்றும் Camon 19 Neo மாடல்களை வெளியிட்டது. சமீபத்தில் அட்டகாசமான பட்ஜெட் விலையில் Spark 9T மாடலையும் அறிமுகம் செய்தது.

அறியதோர்களுக்கு, டெக்னோ நிறுவனத்தின் கீழ் ஃபாண்டம், கேமன், ஸ்பார்க், போவா, பாப் என்கிற 5 சீரீஸ்களின் கீழ், பல வகையான விலைகளின் கீழ், பல வகையான ஸ்மார்ட்போன்கள் வாங்க கிடைக்கின்றன.

Tecno Spark 9T: ரூ.10,000 பட்ஜெட்டில் உள்ள எல்லா போன்களும் காலி.. இனி Tecno Spark 9T: ரூ.10,000 பட்ஜெட்டில் உள்ள எல்லா போன்களும் காலி.. இனி "இது" தான் மாஸ்!

அந்த வரிசையில் சேரும் புதிய Mid-range 5G Phone!

அந்த வரிசையில் சேரும் புதிய Mid-range 5G Phone!

டெக்னோ இந்தியா நிறுவனமானது அதன் கேமன் சீரீஸின் கீழ் 19 ப்ரோ என்கிற புதிய 5ஜி ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யவுள்ளது. குறிப்பிட்ட ஸ்மார்ட்போனை பார்க்கும் போதே, அது ஒரு மிட் ரேன்ஜ் மாடல் என்பதை அறிந்துகொள்ள முடிகிறது.

இன்னொரு சுவாரசியமான விடயம் என்னவென்றால், டெக்னோ கேமன் 19 ப்ரோ 5ஜி ஆனது ஒரு கேமரா-சென்ட்ரிக் ஸ்மார்ட்போனாக (அதாவது கேமராவிற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் ஸ்மார்ட்போனாக) அறிமுகமாகும்.

64MP நைட் கேமராவுடன்.. தெறிக்க விடுமாம்!

64MP நைட் கேமராவுடன்.. தெறிக்க விடுமாம்!

நிறுவனத்திடமிருந்து பெறப்பட்ட அதிகாரப்பூர்வ தகவலின்படி, டெக்னோ கேமன் ப்ரோ 19 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது "புரட்சிகரமான லோ லைட் அனுபவத்துடன்" அறிமுகம் செய்யப்படும். இது 64MP மெயின் கேமரா உடன் வரும் என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த ஸ்மார்ட்போனில் இடம்பெறும் RGBW + (G + P) மற்றும் 64MP நைட் கேமராவானது, குறைந்த வெளிச்சத்தில் கூட சிறந்த புகைப்படங்களைக் கிளிக் செய்யும் என்று கூறப்படுகிறது.

Infinix Hot 12 Pro: எதுவும் சொல்ல வேண்டாம்; இந்தா ரூ.9,999! முதல்ல இந்த Phone-ஐ கொடு!Infinix Hot 12 Pro: எதுவும் சொல்ல வேண்டாம்; இந்தா ரூ.9,999! முதல்ல இந்த Phone-ஐ கொடு!

கேமரா மட்டும் தானா? வேறு என்னென்ன அம்சங்களை பேக் செய்யும்?

கேமரா மட்டும் தானா? வேறு என்னென்ன அம்சங்களை பேக் செய்யும்?

மெயின் கேமராவை தவிர்த்து மேலும் சில முக்கிய அம்சங்களையும் டெக்னோ இந்தியா நிறுவனம் உறுதிப்படுத்தி உள்ளது.

டெக்னோ மொபைல் இந்தியா ட்விட்டர் பக்கத்தில் வெளியான டீஸர்களின் படி, டெக்னோ கேமன் 19 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 0.98 மிமீ என்கிற அளவிலான, மிகவும் மெலிதான பெசல்களுடன் வரும்.

மேலும் இதன் டிஸ்பிளேவின் மேல் மையத்தில் பஞ்ச்-ஹோல் கட்அவுட் டிசனையும் பெறும். வால்யூம் ராக்கர் மற்றும் பவர் பட்டன் ஆனது ஸ்மார்ட்போனின் வலது பக்கத்தில் அமைந்துள்ளன.

இரண்டு ரிங்ஸ்.. ஆனால் மூன்று கேமராக்கள்!

இரண்டு ரிங்ஸ்.. ஆனால் மூன்று கேமராக்கள்!

இந்த ஸ்மார்ட்போனின் பின் பக்க பேனலில் "பாரம்பரியமான" இரண்டு வட்ட வடிவிலான கேமரா ரிங்ஸ் உள்ளன. ஆனால் அதில் ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப் உட்பொதிக்கப்பட்டுள்ளது.

அதாவது முதல் ரிங்கில், நைட் மோட் உடன் வரும் 64MP RGBW மெயின் கேமரா சென்சார் உள்ளது மற்றும் இரண்டாவது ரிங்கில் இரண்டு லென்ஸ்கள் உள்ளன.

Camon 19 Pro 5G ஆனது 5G இணைப்புக்கான ஆதரவுடன் MediaTek Dimensity 810 ப்ராசஸர் உடன் வரும் என்பதும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த Phone-ஐ கண்ணை மூடிக்கிட்டு வாங்க.. 1 இல்ல 9 காரணம் சொல்லலாம்!இந்த Phone-ஐ கண்ணை மூடிக்கிட்டு வாங்க.. 1 இல்ல 9 காரணம் சொல்லலாம்!

டிஸ்பிளே, ரேம், ஸ்டோரேஜ் பற்றி?

டிஸ்பிளே, ரேம், ஸ்டோரேஜ் பற்றி?

மேற்கூறிய விவரங்களைத் தவிர, டெக்னோ இந்தியா வழியாக வெளியான டீஸர்கள் வேறு எதையும் வெளிப்படுத்தவில்லை. ஆனாலும் கூட, இந்த ஸ்மார்ட்போனின் க்ளோபல் வேரியண்ட் ஏற்கனவே அறிமுகமாகி விட்டதால், நம்மால் சில சாத்தியமான கணிப்புகளை நிகழ்த்த முடியும்

Tecno Camon 19 Pro 5G ஸ்மார்ட்போனின் "உலகளாவிய மாறுபாடானது", 6.8 இன்ச் அளவிலான LCD FHD+ டிஸ்ப்ளேவை 120Hz ரெஃப்ரெஷ் ரேட் சப்போர்ட் உடன் பேக் செய்கிறது. அது 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி வரையிலான இன்டர்னல் ஸ்டோரேஜையும் கொண்டுள்ளது.

க்ளோபல் வேரியண்ட் ஆனது முன்பக்கத்தில் 16MP செல்பீ கேமராவை கொண்டுள்ளது, அதை நாம் இந்திய வேரியண்ட்டிலும் எதிர்பார்க்கலாம்.

மேலும் இந்த ஸ்மார்ட்போன் 33W ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் 5,000mAh பேட்டரி யூனிட்டிலிருந்து சக்தியூட்டப்படலாம் மற்றும் அவுட் ஆஃப் பாக்ஸ் Android 12 OS மூலம் இயங்கும்.

Tecno Camon 19 Pro எப்போது அறிமுகம் ஆகும்?

Tecno Camon 19 Pro எப்போது அறிமுகம் ஆகும்?

முக்கிய அம்சங்களோடு சேர்த்து, இந்நிறுவனம் டெக்னோ கேமன் 19 ப்ரோ ஸ்மார்ட்போன் எப்போது அறிமுகமாகும் என்பதையும் வெளிப்படுத்தி உள்ளது.

இது ஆகஸ்ட் 10 ஆம் தேதி அறிமுகமாகும் என்பது போல் தெரிகிறது. ஏனெனில் டெக்னோ இந்தியா ட்வீட்டர் பக்கமானது "இன்னும் 3 நாட்களில்" என்கிற டீசரை ஆகஸ்ட் 7 ஆம் தேதி போஸ்ட் செய்துள்ளது.

அட! ரூ.2000-க்குள் இப்படிலாம் கூட மொபைல் போன் கிடைக்குமா? சொல்லவே இல்ல!அட! ரூ.2000-க்குள் இப்படிலாம் கூட மொபைல் போன் கிடைக்குமா? சொல்லவே இல்ல!

Camon 19 Pro 5G போனின் விலை நிர்ணயம் எப்படி இருக்கும்?

Camon 19 Pro 5G போனின் விலை நிர்ணயம் எப்படி இருக்கும்?

இதுவொரு மிட்-ரேஞ்ச் ஸ்மார்ட்போன் என்பதால், மேலும் இதுவொரு 5ஜி மொபைல் என்பதால் , இது சுமார் ரூ.25,000 என்கிற பட்ஜெட்டின் கீழ் அறிமுகமாக அதிக வாய்ப்புள்ளது.

Photo Courtesy: Tecno Twitter Page

Best Mobiles in India

English summary
New Mid Range 5G Smartphone with 64MP Night Camera Tecno Camon 19 Pro India launch on August 10

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X