வாங்குனா OnePlus 11 தானா? அப்போ பழைய மாடலை வாங்கிடாதீங்க.. வருத்த படுவீங்க.. இந்த புது எடிஷனை பாருங்க!
வாங்கினால் ஒன்பிளஸ் 11 5ஜி (OnePlus 11 5G ) ஸ்மார்ட்போனை தான் வாங்குவேன் என்கிற திட்டம் மற்றும் அதற்கான பட்ஜெட் உங்களிடம் இருந்தால்.. அவசரப்பட்டு "பழைய" ஒன்பிளஸ் 11-ஐ வாங்கி விடாதீர்கள். "என்னது பழைய மாடலா? இந்த ஆண்டின் தொடக்கத்தில் அறிமுகமான ஒரு போன் எப்படி பழைய மாடலாக மாறும்?" என்று நீங்கள் நினைக்கலாம்!
புதிய எடிஷன் (New Edition) வந்துவிட்டால்... முன்னதாக அறிமுகமான மாடல் பழையதாகி விடும் தானே? ஆம்! சீன ஸ்மார்ட்போன் தயாரிப்பாளர் ஆன ஒன்பிளஸ் அதன் லேட்டஸ்ட் ஸ்மார்ட்போன் ஆன ஒன்பிளஸ் 11 5ஜி-க்கான புதிய மாறுபாட்டை இந்தியாவில் அறிமுகப்படுத்த தயாராக உள்ளது.

அது ஒன்பிளஸ் 11 5ஜி மார்பில் ஓடிஸி எடிஷன் (OnePlus 11 5G Marble Odyssey Edition) என அழைக்கப்படும் என்பதையும், இதுவொரு லிமிடெட் எடிஷன் ஆக இருக்கும் என்பதையும் ஒன்பிளஸ் உறுதிப்படுத்தியுள்ளது. இருப்பினும் இது சரியாக எப்போது அறிமுகமாகும் என்கிற தேதி பகிரப்படவில்லை. வரவிருக்கும் நாட்களில் இதுபற்றிய கூடுதல் விவரங்கள் வெளியாகலாம்.
மேலும் "ஒன்பிளஸ் 11 5ஜி மார்பில் ஓடிஸி எடிஷன் ஆனது கலை மற்றும் தொழில்நுட்பத்திற்கு இடையேயான இடைவெளியைக் குறைக்கும், தனித்துவத்தின் சாரத்தை வெளிப்படுத்தும், இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் கைவினைத்திறன் மற்றும் புதுமைக்கான புதிய தரத்தை அமைக்கும்" என்றும் ஒன்பிளஸ் நிறுவனம் கூறியுள்ளளது.
ஒன்பிளஸ் 11 5ஜி அம்சங்கள்: நினைவூட்டும் வண்ணம், இது 1440 x 3216 பிக்சல்ஸ் ரெசல்யூஷன் உடனான 6.7-இன்ச் குவாட் எச்டி+ டிஸ்பிளேவை கொண்டுள்ளது. இது 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான ஆதரவுடன் வரும் ஒரு அமோஎல்இடி டிஸ்பிளே ஆகும். உடன் இது கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் பாதுகாப்பையும் கொண்டுள்ளது.
ஆக்டா-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 சிப்செட் மூலம் இயக்கப்படும் இந்த ஸ்மார்ட்போன் 16ஜிபி வரையிலான ரேம் உடன் இணைக்கப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்டு 13 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் கீழ் இயங்கும் ஒன்பிளஸ் 11 ஆனது, தடையற்ற பயனர் அனுபவத்திற்காக நிறுவனத்தின் சொந்த ஆக்சிஜன்ஓஎஸ் உடன் அனுப்பப்படுகிறது.
இந்த இடத்தில், ஒன்பிளஸ் 11 5ஜி ஸ்மார்ட்போனிற்கு நான்கு வருட ஓஎஸ் அப்டேட்களும், ஐந்து வருட செக்யூரிட்டி அப்டேட்களும் கிடைக்குமென்று உறுதியளிக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது. கேமராக்களை பொறுத்தவரை, இது ஹசல்பிளாட் பவர்டு ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்பை கொண்டுள்ளது.
அதில் சோனி IMX890 சென்சார் மற்றும் எப்/1.8 அபெர்க்ஷர் உடனான 50எம்பி மெயின் கேமரா + சோனி IMX581 சென்சார் மற்றும் எப்/2.2 அபெர்க்ஷர் உடனான 48எம்பி அல்ட்ரா-வைட் கேமரா + 32எம்பி RGBW டெலிஃபோட்டோ லென்ஸ் ஆகியவைகள் உள்ளன. முன்பக்கத்தில், பாதுகாப்பான அன்லாக்கிங்கிற்காக இன்-டிஸ்பிளே ஃபிங்கர் பிரிண்ட் சென்சார் உடன் 16எம்பி செல்பீ கேமரா உள்ளது.
5000mAh பேட்டரியை கொண்டுள்ள ஒன்பிளஸ் 11 5ஜி ஸ்மார்ட்போனானது 100W ஃபாஸ்ட் சார்ஜிங்கை ஆதரிக்கிறது. நிறுவனத்தின் கூற்றுப்படி, இந்த ஸ்மார்ட்போன் வெறும் 25 நிமிடங்களில் முழுமையாக சார்ஜ் ஆகிவிடும். பெரும்பாலும் புதிய எடிஷனில் எந்த வகையான அம்சங்களும் சேர்க்கப்படாது; நீக்கப்படாது என்பதால் மார்பில் ஓடிஸி எடிஷனில் மேற்கண்ட எல்லா அம்சங்களையும் நாம் எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications








