ஆக.31 வரை.. ஆஃபர் விலையில் கிடைக்கும் Oppo Reno 12 சீரிஸ்.. கூடவே LivePhoto அம்சமும் அறிமுகம்!
கடந்த மாதம் இந்தியாவில் அறிமுகமான ஒப்போ ரெனோ 12 சீரீஸ் (OPPO Reno12 Series ) ஸ்மார்ட்போன்களில் ஒரு புதிய மற்றும் "தனித்துவமான" அம்சம் சேர்க்கப்பட்டுள்ளது. ஒப்போ நிறுவனம் அதை லைவ்ஃபோட்டோ (Livephoto) என்று அழைக்கிறது. கூடவே ஒப்போ நிறுவனமானது இவ்விரு ஸ்மார்போன்களின் மீதும் சில அட்டகாசமான சலுகைகளையும் அறிவித்துள்ளது. இந்த சலுகைகள் ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரை அணுக கிடைக்கும். அதென்ன சலுகைகள்? ஒப்போ ரெனோ 12 சீரீஸில் சேர்க்கப்பட்டுள்ள லைவ்ஃபோட்டோ அம்சத்தின் பயன் என்ன? இதோ விவரங்கள்:
ஒப்போ ரெனோ 12 சீரீஸில் சேர்க்கப்பட்டுள்ள லைவ்ஃபோட்டோ அம்சத்தின் பயன் என்ன? உங்களின் தினசரி ஏஐ கம்பானியன் (Your Everyday AI Companion) என்கிற வாக்குறுதியின் அறிமுகம் செய்யப்பட்ட ஒப்போ ரெனோ 12 சீரீஸ் ஸ்மார்ட்போன்களில் லைவ்ஃபோட்டோ அம்சத்துடனான புதிய அப்டேட்டை பெறுகிறது. இது பயனர்கள் தங்கள் வைட்-ஆங்கிள், மெயின் அல்லது டெலிஃபோட்டோ கேமரா லென்ஸை கொண்டு ஷார்ட் பர்ஸ்ட்ஸ் ஆப் மோஷன்ஸ்-ஐ கேப்ச்சர் செய்ய அனுமதிக்கிறது.

அதாவது இது ஸ்டில் போட்டோக்களால் 'காப்பி' செய்ய முடியாத டைனமிக் ஆன தருணங்களை படம்பிடிப்பதற்கான ஆக்கப்பூர்வமான சாத்தியங்களை திறக்கிறது. லைவ்ஃபோட்டோ அம்சமானது ஒப்போவின் ஏஐ டச்-அப் தொழில்நுட்பத்துடன் ஒருங்கிணைகிறது. இது உங்கள் போட்டோக்களில் உள்ள ஒளி, வண்ணம் மற்றும் பிற கூறுகளை தானாகவே மேம்படுத்துகிறது. ஒட்டுமொத்தமான மிகவும் 'க்விக்' ஆன தருணங்களை ஆச்சரியமளிக்கும் வகையிலான கிளாரிட்டி உடன் கைப்பற்ற உதவுகிறது.
ஒப்போ ரெனோ 12 5ஜி மற்றும் ரெனோ 12 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன்களில் ஏற்கனவே ஏஐ சம்மரி, ஏஐ ரெக்கார்ட் சம்மரி, ஏஐ கிளியர் வாய்ஸ், ஏஐ ரைட்டர் மற்றும் ஏஐ ஸ்பீக் உள்ளிட்ட ஏஐ அம்சங்களுடனும், ஏஐ பெஸ்ட் ஃபேஸ் மற்றும் ஏஐ ஏரேர்2.0 உள்ளிட்ட ஏஐ கேமரா அம்சங்களும் உள்ளன என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.
ஒப்போ ரெனோ 12 சீரீஸ் மீது அறிவிக்கப்பட்டுள்ள சலுகைகள் என்னென்ன? ஒப்போ நிறுவனம் அதன் மெம்பர்களுக்கான இரண்டாம் ஆண்டு நிறைவை கொண்டாடும் வகையில் மெகா சேல்-ஐ அறிவித்துள்ளது. முன்னரே குறிப்பிட்டபடி இந்த விற்பனை ஆகஸ்ட் 31 வரை நடக்கும். இதன்கீழ், ரெனோ 12 சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் மீது பல வகையான இன்-ஸ்டோர் மற்றும் ஆப்லைன் சலுகைகள் கிடைக்கிறது.
இன்-ஸ்டோர் சலுகைகளை பொறுத்தவரை, தேர்ந்தெடுக்கப்பட்ட பேங்க் கார்டுகளில் 10% வரை கேஷ்பேக் மற்றும் 6 மாதங்கள் வரையிலான நோ-காஸ்ட் இஎம்ஐ விருப்பங்கள் அணுக கிடைக்கும். ரூ.649 மற்றும் அதற்கு மேற்பட்ட திட்டங்களை ரீசார்ஜ் செய்யும் புதிய போஸ்ட்பெய்டு வாடிக்கையாளர்களுக்கு ரிலையன்ஸ் ஜியோவிடமிருந்து ரூ.2250 மதிப்புள்ள சிறப்பு பலன்கள் கிடைக்கும். மேலும் ஜீரோ டவுன் பேமென்ட் திட்டங்களும் அணுக கிடைக்கும்.
ஆன்லைன் சலுகைகளை பொறுத்தவரை, ஒப்போ இ-ஸ்டோர் (OPPO e-Store) வழியாக ஸ்மார்ட்போன்கள், கூப்பன்கள் மற்றும் ரிவார்ட் பாய்ண்ட்கள் உட்பட ஒப்போவின் பிரத்தியேக ரேஃபிளின்கீழ் உத்தரவாதமான பரிசுகள் கிடைக்கும். ஒப்போ ஸ்மார்ட்போன்களுடன் சேர்த்து என்கோ பட்ஸ் 2 இயர்போன்களை வாங்கினால் 68% வரை தள்ளுபடி கிடைக்கும். இதுதவிர்த்து குறிப்பிட்ட ஒப்போ மாடல்களுக்கு அதிகப்படியான எக்ஸ்சேஞ்ச் போனஸும் கிடைக்கும்.
ஒப்போ ரெனோ 12 சீரீஸ் ஸ்மார்ட்போன்களின் விலை விவரங்கள்: ஒப்போ ரெனோ 12 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனின் 12ஜிபி ரேம் + 256ஜிபி ஆப்ஷன் ரூ.36,999 க்கும், 12ஜிபி ரேம் + 512ஜிபி ஆப்ஷன் ரூ.40,999 க்கும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஒப்போ ரெனோ 12 5ஜி ஸ்மார்ட்போனின் 8ஜிபி ரேம் + 256ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.32,999 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








