Home
Mobile

ஏப்.30 வரை ரூ.12,000 டிஸ்கவுண்ட்.. திடீர் தள்ளுபடியை பெற்ற Samsung போன்.. என்ன மாடல்?

சாம்சங் (Samsung) நிறுவனத்தின் பிரீமியம் பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் மீது லிமிடெட் பீரியட் ஆபர் (Limited Period Offer) அறிவிக்கப்பட்டுள்ளது. அது சாம்சங் கேலக்ஸி எஸ்25 அல்ட்ரா மாடல் ஆகும். கடந்த 2025 ஜனவரி மாதம் நடந்த கேலக்ஸி அன்பேக்டு நிகழ்வின் போது அறிமுகம் செய்யப்பட்ட போது இதன் ஆரம்ப விலை ரூ. 1,29,999 ஆகும்.

ஆனால் தற்போது இது தள்ளுபடி விலையில் வாங்குவதற்கு கிடைக்கிறது. தென் கொரிய பிராண்ட் ஆன சாம்சங் இந்த ஸ்மார்ட்போனின் மீது ரூ.12,000 வரையிலான உடனடி கேஷ்பேக் ஆபரை வழங்குகிறது. இதோடு சேர்த்து எக்ஸ்சேஞ்ச் ஆபர் மற்றும் நோ காஸ்ட் இஎம்ஐ விருப்பங்களும் உள்ளன. சாம்சங் அறிவித்துள்ள இந்த எல்லா சலுகைகளுமே அதன் ஆன்லைன் ஸ்டோர் வழியாக கிடைக்கிறது.

ஏப்.30 வரை ரூ.12,000 டிஸ்கவுண்ட்.. திடீர் தள்ளுபடியை பெற்ற Samsung போன

வாடிக்கையாளர்கள் டைட்டானியம் சில்வர்ப்ளூ கலர் ஆப்ஷனை வாங்கும்போது ரூ. 11,000 மதிப்புள்ள உடனடி வங்கி தள்ளுபடி அல்லது ரூ. 12,000 எக்ஸ்சேஞ்ச் போனஸை பெறலாம். இதன் மூலம் சாம்சங் கேலக்ஸி எஸ்25 அல்ட்ரா ஸ்மார்ட்போனின் தொடக்க விலையை ரூ.1,29,999 இல் இருந்து ரூ.1,17,999 ஆக குறைக்க முடியும். இந்த சலுகை ஏப்ரல் 30 வரை மட்டுமே செல்லுபடியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது

மேலும், சாம்சங் ஷாப் ஆப் மூலம் சாம்சங் கேலக்ஸி எஸ்25 அல்ட்ரா ஸ்மார்ட்போனை வாங்குபவர்கள் கூடுதலாக ரூ.4,000 வெல்கம் ஆபரை பெறலாம். கேலக்ஸி எஸ்25 அல்ட்ராவிற்கான நோகாஸ்ட் இஎம்ஐ விருப்பங்கள் ஆனது ரூ.3,278 முதல் தொடங்குகின்றன. தங்கள் பழைய ஸ்மார்ட்போனை எக்ஸ்சேன்ஜ் செய்யும் கஸ்டமர்களுக்கு ரூ.75,000 வரை தள்ளுபடி கிடைக்கும்

சாம்சங் கேலக்ஸி எஸ்25 அல்ட்ரா ஸ்மார்ட்போனின் இந்த திடீர் ஆபருக்கு பின்னால், சாம்சங் கேலக்ஸி எஸ்25 எட்ஜ் ஸ்மார்ட்போனின் அறிமுகம் ஒரு காரணமாக இருக்கலாம். சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எஸ்25 சீரீஸின் கீழ்.. சூப்பர்-ஸ்லிம் மாடல் ஆக அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படும் கேலக்ஸி எஸ்25 எட்ஜ் (Galaxy S25 Edge) மாடலின் வருகைக்காகவே எஸ்23 அல்ட்ரா மீதான திடீர் சலுகை அறிவிக்கப்பட்டு இருக்க்கலாம்.

குறிப்பாக ஏப்ரல் 30 வரை இந்த ஆபர் கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டு இருப்பது எங்கள் சந்தேகத்தை இன்னும் அதிகமாக்குகிறது. ஏனென்றால் முதலில் இந்த ஸ்மார்ட்போன் 2025 ஏப்ரல் மாதம் அறிமுகப்படுத்தப்படும் என்று தகவல் வெளியானது. குறிப்பாக இது ஏப்ரல் 14 அல்லது 15 ஆம் தேதி அறிமுகம் செய்யப்படலாம் என்று கூறப்பட்டது.

பின்னர் சாம்சங் கேலக்ஸி எஸ்25 லாட்ஜ் ஸ்மார்ட்போனின் ஏப்ரல் அறிமுகம் ஒத்திவைக்கப்பட்டு உள்ளதாகவும், இந்த ஸ்மார்ட்போன் 2025 மே 13 ஆம் தேதி அன்று அறிமுகப்படுத்தப்படும் என்றும் தகவல் வெளியானது. அதாவது சாம்சங் நிறுவனம் இந்த ஸ்மார்ட்போனின் அறிமுகத்தை ஒரு மாதம் தாமதப்படுத்தியுள்ளது. அதுவரையிலாக எஸ்25 அல்ட்ரா மீது ஆபர் வழங்கும் என்பது போல் தெரிகிறது.

சாம்சங் கேலக்ஸி எஸ்25 எட்ஜ் ஸ்மார்ட்போன் என்ன விலைக்கு அறிமுகம் செய்யப்படலாம்? இந்த ஸ்மார்ட்போனின் பேஸிக் 256ஜிபி ஆப்ஷன் தோராயமாக ரூ.1,13,660 முதல் ரூ.1,23,132 வரை என்கிற விலைக்குள் அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதேபோல 512ஜிபி ஆப்ஷன் தோராயமாக ரூ.1,23,132 முதல் ரூ.1,32,603 வரை என்கிற விலைக்குள் அறிமுகம் செய்யப்படலாம்.

சாம்சங் கேலக்ஸி எஸ்25 எட்ஜ் ஸ்மார்ட்போனில் என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்? டிஸ்பிளேவை பொறுத்தவரை, இது 2கே ரெசல்யூஷன் வரும் என்றும் டிப்ஸ்டர் வெளிப்படுத்துகிறார். இது சாம்சங் கேலக்ஸி எஸ்25 பிளஸ் மாடலில் காணப்படும் 3120 x 1440 பிக்சல்களை போலவே இருக்கும் என்றும், எஸ்25 மாடலில் உள்ள எப்எச்டி பிளஸ் ரெசல்யூஷனை விட அதிகமாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

முன்னதாக டிப்ஸ்டர் ஐஸ் யுனிவர்ஸ் வழியாக லீக் ஆன விவரங்கள் ​​சாம்சங் கேலக்ஸி எஸ்25 எட்ஜ் ஸ்மார்ட்போனின் பில்ட் மெட்டீரியல் மற்றும் டிஸ்பிளே பற்றிய விவரங்களை வெளிப்படுத்தின. அதன்படி சாம்சங் கேலக்ஸி எஸ்25 எட்ஜ் ஸ்மார்ட்போன் ஆனது டைட்டானியம் அலாய் மிடில் ஃபிரேமை (Titanium alloy middle frame) கொண்டிருக்கும்.

அதாவது இந்த ஸ்மார்ட்போன் சாம்சங் கேலக்ஸி எஸ்25 அல்ட்ரா (Samsung Galaxy S25 Ultra) மாடலை போலவே இருக்கும் என்று அர்த்தம். இது உண்மையாகும் பட்சத்தில், எட்ஜ் மாடல் ஆனது கேலக்ஸி எஸ் சீரீஸில் டைட்டானியம் பாடியை கொண்ட இரண்டாவது ஸ்மார்ட்போனாக இருக்கும். மேலும் சாம்சங் கேலக்ஸி எஸ்25 எட்ஜ் ஸ்மார்ட்போன் ஆனது டைட்டானியம் ஐசிப்ளூ, டைட்டானியம் சில்வர் மற்றும் டைட்டானியம் ஜெட்பிளாக் ஆகிய 3 கலர்களில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
New Limited Period Offer on Samsung Galaxy S25 Ultra Until April 30 S25 Edge Launch Could be Reason
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X