விரைவில் வருகிறது எல்ஜி விக்டர்

Posted By: Staff

விரைவில் வருகிறது எல்ஜி விக்டர்
எல்ஜி மொபைல் நிறுவனம் தரமான ஆன்ட்ராய்டு மொபைல்களை அறிமுகப்படுத்துவதில் மும்மரமாக உள்ளது. அவற்றில் ஒன்றுதான் எல்ஜி விக்டர். முதல் பார்வையிலேயே வாடிக்கையாளர்களை வசீகரித்து விடும் அளவிற்கு படு ஸ்டைலாக இருக்கிறது.

எல்ஜி விக்டர் மொபைல் 3.8 இன்ச் உள்ள பெரிய தொடுதிரை டிஸ்பிளேயை கொண்டுள்ளது. இதனால் படங்கள் மற்றும் வீடியோ காட்சிகளை மிக தெளிவாகப் பார்க்க முடியும்.

எல்ஜி விக்டர் மொபைலின் ஹார்ட்வேரில் ஆன்ட்ராய்ட் 2.3.5ன் ஜிஞ்ஜர்ப்ரட் ஓஎஸ் இயங்குகிறது. மேலும் அதன் டிவைஸ் 1ஜிஎச்எஸ் ப்ராஸஸரைக் கொண்டிருப்பதால் எல்ஜி விக்டர் மொபைலின் செயல்பாடு மிகச் சிறப்பாக இருக்கும்.

எல்ஜி விக்டர் மொபைல் ஏராளமான மல்டிமீடியா வசதிகளை அதாவது எம்பி3, எம்பி4, எவிஐ, ஏஏசி+ மற்றும் சிறந்த அளவிலான எச்263 மற்றும் எச்264 வீடியோ ஃபார்மெட்களை கொண்டுள்ளது. மேலும் அது ஸ்டீரியோ ஸ்பீக்கருடன் இணைந்த எஃப்எம் ரேடியோ மற்றும் 3.5எம்எம் யுனிவர்சல் ஆடியோ கொண்டிருப்பதால் இசையை கேட்பதற்க மிகவும் இனிமையாக இருக்கும்.

எல்ஜி விக்டர் மொபைலின் டிவைஸ் 720பி அளவில் வீடியோ ரிக்கார்டிங் செய்யும் திறன் உள்ளது. மேலும் இது விரைவாக 3ஜி நெட்வொர்க்கில் இயங்கக்கூடிய விஜிஎ கேமராவையும் கொண்டிருக்கிறது. இதனுடைய சிறப்பு என்னவென்றால் மைக்ரோ எல்டி ஸ்லாட் வழியாக 32ஜிபி அளவிற்கு விரிவுபடுத்தக்கூடிய அளவிற்கு இன்டர்னல் மெமரியைக் கொண்டுள்ளது.

மேலும் இது நவீன தொடர்பு வசதிகளான வைஃபை, 3ஜி, ப்ளூடூத் மற்றும் டேட்டா ட்ரான்ஸ்ஃபருக்கான யுஎஸ்பி சின்க் இவற்றை வழங்குகிறது. இதன் டேட்டா ட்ரான்ஸ்ஃபரின் வேகம் 3ஜி ஹார்ட்வேரால் சப்போர்ட் செய்யப்பட்டு 14எம்பிபிஎஸ் அளவிற்கு உள்ளது.

எல்ஜி விக்டர் மொபைலின் சிறப்புகள்:

* ஆன்ட்ராய்டு ஜிஞ்ஜர்போர்டு ஓஎஸ்

* 5 மெகா பிக்ஸல் கேமரா

* 3ஜி வைபை மற்றும் ப்ளூடூத்

* ஜாவா சப்போர்ட்

* 32ஜிபி வரை விரிவாக்கக்கூடிய மெமரி

* மல்டி ஃபார்மட் மியுசிக் மற்றும் வீடியோ பிளேயர்

எல்ஜி விக்டர் மொபைலின் விலை இன்னும் அறிவிக்கப்படவில்லை. இது அக்டோபர் 2011ல் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கலாம்.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்