Home
Mobile

போட்டோ எடுக்க பிடிக்கும் என்றால், நீங்கள் வாங்க வேண்டியது இந்த Lenovo போன் தான்.!

லெனோவா நீண்ட நாட்களுக்கு பிறகு லெனோவா லீஜியன் ஒய்70 (Lenovo Legion Y70)எனும் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் முதலில் சீனாவில் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. அதன்பிறகு மற்ற நாடுகளில் அறிமுகம் செய்யப்படும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விசி கூலிங் சேம்பர்

விசி கூலிங் சேம்பர்

இப்போது ஆன்லைனில் கசிந்த லெனோவா லீஜியன் ஒய்70 ஸ்மார்ட்போனின் அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம். விரைவில்
அறிமுகமாகும் லெனோவா லீஜியன் ஒய்70 போனில் விசி கூலிங் சேம்பர் வசதி உள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் அவ்வளவு சீக்கிரம்
சூடாகாது.

நீங்கள் எதிர்பார்த்த சிப்செட் வசதி

நீங்கள் எதிர்பார்த்த சிப்செட் வசதி

லெனோவா லீஜியன் ஒய்70 போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 சிப்செட் வசதி உள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் சற்று உயர்வான விலையில் தான் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ஆண்ட்ராய்டு 12 இயங்குதள வசதியைக் கொண்டுள்ளது
இந்த அட்டகாசமான லெனோவா ஸ்மார்ட்போன்.

ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே

ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே

புதிய லெனோவா லீஜியன் ஒய்70 ஸ்மார்ட்போன் ஆனது ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே வசதியுடன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனின் டிஸ்பிளே உங்களுக்கு ஒரு தனித்துவமான அனுபவத்தை கொடுக்கும் என்றே கூறலாம்.

மேலும் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 450 நிட்ஸ் ப்ரைட்னஸ், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு இந்த புதிய ஸ்மார்ட்போன் அறிமுகமாகும்.

 அட்டகாசமான கேமரா

அட்டகாசமான கேமரா

இணையத்தில் கசிந்த தகவலின்படி இந்த ஸ்மார்ட்போன் ட்ரிபிள் ரியர் கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது. அதாவது இந்த போன் 50எம்பி பிரைமரி கேமரா + 13எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 2எம்பி டெப்த் சென்சார் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது.

மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமரா ஆதரவுடன் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் தரமான படங்களை எடுக்க முடியும்.

 சூப்பரான பேட்டரி

சூப்பரான பேட்டரி

விரைவில் அறிமுகமாகும் லெனோவா லீஜியன் ஒய்70 ஸ்மார்ட்போன் ஆனது 5100 எம்ஏஎச் பேட்டரி வசதியை கொண்டுள்ளது. எனவே இந்த போனில்
நீண்ட நேரம் கேம் விளையாட முடியும். அதேபோல் 68W பாஸ்ட் சார்ஜிங் வசதியைக் கொண்டு வெளிவரும் இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன்.

 எப்போது அறிமுகம்?

எப்போது அறிமுகம்?

லெனோவா லீஜியன் ஒய்70 ஸ்மார்ட்போன் கருப்பு, சிவப்பு மற்றும் சில்வர் நிறங்களில் வெளிவரும். குறிப்பாக இந்த புதிய லெனோவா போன் சீனாவில் வரும் ஆகஸ்ட் 18-ம் தேதி சீனாவில் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

Best Mobiles in India

English summary
New Lenovo Legion Y70 smartphone to launch on August 18: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X