Home
Mobile

அடுத்த மாசம் கச்சேரி தான்.. OnePlus 13 சும்மா வேற மாறி இருக்கே.. புதிய கேமரா டிசைன், வேகன் லெதர் பேக் பேனல்!

OnePlus 13: இந்தியாவில், ஒன்பிளஸ் நிறுவனத்தின் புதிய இயர்பட்ஸ் ஆக ஒன்பிளஸ் நோர்ட் பட்ஸ் 3 (OnePlus Nord Buds 3) அறிமுகம் செய்யப்பட்ட வேகத்தில் இந்நிறுவனத்தின் அடுத்த பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் ஆன ஒன்பிளஸ் 13 குறித்து ஒரு சுவாரசியமான விவரம் வெளியாகி உள்ளது. ஏற்கனவே இது எதிர்பார்த்ததை விட முன்கூட்டியே அறிமுகமாகும் என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில், தற்போது வெளியாகியுள்ள புதிய தகவல் ஒன்பிளஸ் 13-ஐ எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கும் வாடிக்கையாளர்களின் ஆர்வத்தை மேலும் தூண்டியுள்ளது.

ஸ்னாப்டிராகன் 8 ஜென் 4 ஃபிளாக்ஷிப் சிப்செட் உடன், வருகிற 2024 அக்டோபரில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படும் ஒன்பிளஸ் 13 ஸ்மார்ட்போனை பற்றிய விவரங்கள் தொடர்ச்சியான முறையில் ஆன்லைனில் வெளிவருகின்றன. அதனொரு பகுதியாக, நம்பகமான ​​டிப்ஸ்டர்களில் ஒருவரான சஞ்சு சவுத்ரி வழியாக, ஒன்பிளஸ் 13 ஸ்மார்ட்போன் ஆனது க்ரீன் வேகன் லெதர் பேக் பேனலுடன் (Green vegan leather back panel) வரும் என்கிற தகவல் கிடைத்துள்ளது.

OnePlus 13 சும்மா வேற மாறி இருக்கே.. வேகன் லெதர் பேக் பேனல்!

இது தொடர்பாக வெளியான ரெண்டரின் (புகைப்படத்தின்) வழியாக க்ரீன் வேகன் லெதர் பேக் பேனல் உடன் சேர்த்து ஒன்பிளஸ் 13 ஸ்மார்ட்போனின் பேக் பேனலில் ஒரு வட்ட வடிவிலான கேமரா யூனிட் இருக்கும் என்பதையும், அதில் 3 கேமரா சென்சார்கள் மற்றும் 1 பிளாஷ் இருப்பதையும் தெளிவாக பார்க்க முடிகிறது ஒன்பிளஸ் 13 ஸ்மார்ட்போன் ஆனது புதிய க்ரீன் கலர் ஆப்ஷனை பெற்றாலும் கூட, வெளியான ரெண்டரில் இருக்கும் வடிவமைப்பை பெறுமா என்று கேட்டால்.. அதிக வாய்ப்புகள் இல்லை என்றுதான் கூற வேண்டும்.

ஏனென்றால் ஒன்பிளஸ் 13 ஸ்மார்ட்போன் ஆனது வழக்கமான சர்குலர் வடிவ கேமரா செட்டப்பில் இருந்து விலகி, புதுப்பிக்கப்பட்ட கேமரா வடிவமைப்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக ஒன்பிளஸ் 13 ஸ்மார்ட்போனின் ரியர் கேமராக்கள் செங்குத்தாக மேல் இடது மூலையில் அடுக்கி வைக்கப்படலாம்.

இதுதவிர்த்து இந்த ஸ்மார்ட்போன் "லேட்டஸ்ட் ஜெனரேஷன் ஃபிளாக்ஷிப் சிப்களில்" இயங்கும் என்பதை ஒன்பிளஸ் நிறுவனம் உறுதிப்படுத்தி உள்ளது இது ஸ்னாப்டிராகன் 8 ஜென் 4 சிப்செட் (Snapdragon 8 Gen 4 Chipset) உடன் வரலாம் என்பதற்கான அறிகுறியாக இருக்கலாம். மேலும் இந்த ஸ்மார்ட்போன் தொழில்துறையின் முதல் 120-ஃபிரேம் "ஜென்ஷின் இம்பாக்ட்" அனுபவத்தை வழங்கும் என்றும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

டிஸ்பிளேவை பொறுத்தவரை ஒன்பிளஸ் 13 ஆனது 2கே ரெசல்யூஷன் மற்றும் LTPO தொழில்நுட்பத்துடன் கூடிய 6.8-இன்ச் மைக்ரோ-கர்வ்டு டிஸ்பிளேவை பேக் செய்யலாம். கூடவே மேம்படுத்தப்பட்ட அல்ட்ராசோனிக் பிங்கர் பிரிண்ட் சென்சாரும் அறிமுகம் செய்யப்படலாம். பேட்டரியை பொறுத்தவரை, ஒன்பிளஸ் 13 ஆனது ஒரு பெரிய 6,000mAh பேட்டரியை பேக் செய்யலாம்.

இது ஒன்பிளஸ் 12 ஸ்மார்ட்போனில் உள்ள 5400mAh பேட்டரியில் இருந்து கணிசமான அப்கிரேட் ஆகும். இருப்பினும் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 4 சிப்செட்டின் ஆற்றல் தேவைகள் காரணமாக ஒன்பிளஸ் 13 ஸ்மார்ட்போனின் பேட்டரி லைஃப்பில் பெரிய அளவிலான மாற்றங்கள் இருக்காது. அதிகரித்த ஆற்றல் தேவைகளை ஈடுசெய்ய ஒரு பெரிய பேட்டரியை சேர்க்க ஒன்பிளஸ் முடிவு செய்து இருக்கலாம்.

அறிமுகத்தை பொறுத்தவரை, ஒன்பிளஸ் சீனாவின் தலைவரான லூயிஸ் லீ ஒன்பிளஸ் 13 அடுத்த மாதம் (அக்டோபர்) சீனாவில் அறிமுகமாகுமென்பதை உறுதிப்படுத்தியுள்ளார். வழக்கமாக ஒன்பிளஸின் பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் ஆனது டிசம்பர் மாத வாக்கில் சீனாவில் அறிமுகமாகி, பின்னர் ஜனவரி அல்லது பிப்ரவரி மாத வாக்கில் இந்தியாவில் அறிமுகமாகும். ஆனால் இம்முறை (2024) ஒன்பிளஸ் 13 ஆனது முன்கூட்டியே சீனாவிலும், அதை தொடர்நது இந்தியாவிலும் அறிமுகமாகவுள்ளது.

Best Mobiles in India

English summary
New leak suggests OnePlus 13 will get Green Vegan Leather Back Panel All You Need to Know
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X