கிரிகாலா உடம்ப இரும்பாக்கிக்கடா.. iQOO 15 விலையை கேட்டு OnePlus 15 ஷாக்!
ஒன்பிளஸ் நிறுவனத்திற்கும், அதன் லேட்டஸ்ட் ஸ்மார்ட்போன் ஆன ஐக்யூ 15 மாடலுக்கும் ஒரு பெரிய தலைவலியாக உள்ள ஐக்யூ 15 (iQOO 15) ஸ்மார்ட்போன் வருகிற நவம்பர் 26 ஆம் தேதி அன்று இந்தியாவிலும், உலக சந்தைகளிலும் அறிமுகம் செய்யப்பட உள்ளது.
ஒன்பிளஸ் 15 ஸ்மார்ட்போனில் அதே சிப்செட் மட்டுமின்றி, ஒன்பிளஸ் 15 மாடலுடன் நேரடியாக போட்டியிடும் அளவிலான பல பிளாக்ஷிப் அம்சங்களை கொண்டுள்ள ஐக்யூ 15 ஆனது, ஒன்பிளஸ் 15 மாடலை விட "மிகவும்" மலிவான விலைக்கு அறிமுகமாகி, ஒன்பிளஸ் 15-ன் இந்திய விற்பனையை சரித்துவிடுமென்று எதிர்பார்க்கப்படுகிறது.

நேற்று வெளியான ஒரு லீக் தகவல், ஐக்யூ 15 ஆனது ஒன்பிளஸ் 13 மாடலை விட ரூ.13,000 மலிவான விலைக்கு இந்தியாவில் அறிமுகமாகும் என்று பரிந்துரைத்தது. ஆனால் இன்று வெளியாகியுள்ள ஒரு புதிய லீக் ஆனது அதற்கு நேர் மாறாக உள்ளது.
டிப்ஸ்டர் அபிஷேக் யாதவின் எக்ஸ் தள பதிவின்படி, அமேசான் இந்தியா வலைத்தளத்தில் ஐக்யூ 15 ஸ்மார்ட்போனின் லிஸ்டிங் காணப்பட்டது. அதில் 12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் உடனான பேஸிக் வேரியண்ட் ரூ.72,999 க்கும், 16ஜிபி ரேம் + 512ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் கொண்ட ஆப்ஷன் ரூ.79,999 க்கும் பட்டியலிடப்பட்டு இருந்தது.
மேலும் குறிப்பிட்ட அமேசான் இந்தியா லிஸ்டிங்கில் ஐக்யூ 15 ஸ்மார்ட்போன் ஆல்பா மற்றும் லெஜண்ட் ஆகிய 2 கலர்களில் கிடைக்கும் என்பதும் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. மேற்கண்ட விலை நிர்ணயம் "உண்மையாக" இருந்தால் ஐக்யூ 15 ஸ்மார்ட்போன் ஆனது ஒன்பிளஸ் 15 ஸ்மார்ட்போனின் "அதே விலைக்கு" அறிமுகமாகும். அதாவது இரண்டிற்கும் விலை அடிப்படையில் வேறுபாடு இருக்காது.
நினைவூட்டும் வண்ணம் இந்தியாவில் ஒன்பிளஸ் 15 ஸ்மார்ட்போனின் 12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் உடனான பேஸிக் வேரியண்ட் ரூ.72,999 க்கும், 16ஜிபி ரேம் + 512ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் கொண்ட ஆப்ஷன் ரூ.79,999 க்கும் வாங்க கிடைக்கிறது.
இருப்பினும் கேஜெட்ஸ் 360-ன் சமீபத்திய அறிக்கை, அறிமுக சலுகைகளுடன் சேர்த்து ஐக்யூ 15 ஸ்மார்ட்போனின் விலை ரூ.65,000 - ரூ. 70,000 க்குள் வரை இருக்கும் என்று நிபுன் மரியா (ஐக்யூ இந்தியா நிறுவனத்தின் சிஇஓ) சூசகமாக தெரிவித்ததாக கூறுகிறது. மேலும் அவர் "மூலப்பொருட்களின் விலைகள் அதிகரித்திருந்தால், விலை உயர்வுக்கு மாற்று இல்லை" என்று கூறியதாகவும் குறிப்பிட்டுள்ளது.
ஐக்யூ 15 ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்:
- 6.85-இன்ச் Samsung M14 AMOLED டிஸ்பிளே
- 3என்எம் ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 5 சிப்செட்
- ட்ரிபிள் ரியர் கேமரா
- 50-மெகாபிக்சல் (f/1.88) ப்ரைமரி சென்சார்
- 100x டிஜிட்டல் ஜூம் வரை வழங்கும் 50-மெகாபிக்சல் (f/2.65) பெரிஸ்கோப் சென்சார்
- 50-மெகாபிக்சல் (f/2.05) வைட்-ஆங்கிள் லென்ஸ்
- 32-மெகாபிக்சல் (f/2.2) செல்பீ கேமரா
- 7,000mAh பேட்டரி
- 100W வயர்டு மற்றும் 40W வயர்லெஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு
ஒன்பிளஸ் 15 ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்:
165 ஹெர்ட்ஸ் வரை ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.78-இன்ச் மூன்றாம் தலைமுறை பிஓஇ பிளெக்சிபில் அமோஎல்இடி டிஸ்பிளே
- அட்ரெனோ 840 ஜிபியு உடன் இணைக்கப்பட்ட குவால்காமின் ஆக்டா-கோர் 3என்எம் ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 5 சிப்செட்
- ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்
- 24 மிமீ ஃபோக்கல் லெங்த் உடனான 50-மெகாபிக்சல் (எப்/1.8) ப்ரைமரி கேமரா
- 50-மெகாபிக்சல் (எப்/2.0) அல்ட்ராவைடு கேமரா
- 50-மெகாபிக்சல் (எப்/1.8) டெலிஃபோட்டோ கேமரா
- 32-மெகாபிக்சல் (எப்/2.4) செல்பீ கேமரா
- 7300mAh பேட்டரி
- 120W சூப்பர் ஃப்ளாஷ் சார்ஜ் வயர்டு சார்ஜிங் மற்றும் 50W வயர்லெஸ் ஃப்ளாஷ் சார்ஜ் ஆதரவு


Click it and Unblock the Notifications








