Home
Mobile

சத்தமின்றி குறைந்த விலையில் புதிய போனை இறக்கிவிட்ட இந்திய நிறுவனம்.! என்னென்ன அம்சங்கள்?

பிரபல இந்திய நிறுவனமான லாவா தொடர்ந்து அட்டகாசமான ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்த வண்ணம் உள்ளது என்றுதான் கூறவேண்டும். குறிப்பாக கம்மி விலையில் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய அதிக ஆர்வம் காட்டுகிறது இந்நிறுவனம். இந்த நிலையில் புதிய ஸ்மார்ட்போன் ஒன்றை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது லாவா.

அதாவது லாவா யுவா 2 ப்ரோ (Lava Yuva 2 Pro)எனும் ஸ்மார்ட்போனை தான் தற்போது அறிமுகம் செய்துள்ளது லாவா நிறுவனம். இந்த போன் குறைந்த விலையில் அனைத்து சிறப்பு அம்சங்களுடனும் வெளிவந்துள்ளது. இப்போது இந்த புதிய போனின் அம்சங்கள் மற்றும் விலைப் பற்றிய தகவல்களைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.

சத்தமின்றி குறைந்த விலையில் புதிய போனை இறக்கிவிட்ட இந்திய நிறுவனம்.!

லாவா யுவா 2 ப்ரோ அம்சங்கள்

இந்த புதிய லாவா யுவா 2 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது 6.5-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வசதியைக் கொண்டு வெளிவந்துள்ளது. மேலும் 1600 × 720 பிக்சல்ஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த புதிய போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல் இந்த போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது லாவா நிறுவனம்.

லாவா யுவா 2 ப்ரோ ஸ்மார்ட்போனில் சக்திவாய்ந்த ஆக்டோ-கோர் மீடியாடெக் ஹீலயோ ஜி37 12என்எம் பிராசஸர் உடன் IMG PowerVR GE8320 ஜிபியு ஆதரவு உள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனை இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். மேலும் இந்த புதிய போன் ஆண்ட்ராய்டு 12 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு வெளிவந்துள்ளது.

சத்தமின்றி குறைந்த விலையில் புதிய போனை இறக்கிவிட்ட இந்திய நிறுவனம்.!

இப்போது அறிமுகம் செய்யப்பட்ட லாவா ஸ்மார்ட்போனில் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் வசதி உள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவுடன் இந்த புதிய போன் வெளிவந்துள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இதில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

லாவா யுவா 2 ப்ரோ ஸ்மார்ட்போன் 13எம்பி பிரைமரி கேமரா + விஜிஏ டெப்த் சென்சார் + விஜிஏ கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. எனவே இந்த ரியர் கேமரா உதவியுடன் தெளிவாகப் புகைப்படங்களை எடுக்க முடியும். பின்பு செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 5எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த லாவா போன்.

சத்தமின்றி குறைந்த விலையில் புதிய போனை இறக்கிவிட்ட இந்திய நிறுவனம்.!

அருமையான பேட்டரி

புதிய லாவா யுவா 2 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது 5000 எம்ஏஎச் பேட்டரி வசதியைக் கொண்டுள்ளது. எனவே இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு 10 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதி, கைரேகை ஸ்கேனர், டூயல் சிம் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களுடன் இந்த புதிய போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இந்த புதிய போனில் அனைத்து அம்சங்களும் மிகவும் அருமையாக உள்ளது. ஆனால் இது 5ஜி போன் கிடையாது. அதாவது 4ஜி வசதியைக் கொண்டு வெளிவந்துள்ளது லாவா யுவா 2 ப்ரோ. குறிப்பாக 4ஜி வோல்ட்இ, வைஃபை 802.11 ஏசி, ப்ளூடூத் 5.0, யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டுள்ளது இந்த புதிய போன்.

சத்தமின்றி குறைந்த விலையில் புதிய போனை இறக்கிவிட்ட இந்திய நிறுவனம்.!

என்ன விலை?

4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் வசதி கொண்ட லாவா யுவா 2 ப்ரோ ஸ்மார்ட்போனின் விலை ரூ.7,999-ஆக உள்ளது. பின்பு வெள்ளை, பச்சை, லாவெண்டர் நிறங்களில் இந்த போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பின்பு லாவா வலைதளம் மற்றும் ஆஃப்லைன் ஸடோர்களில் இந்த லாவா யுவா 2 ப்ரோ மாடலை வாங்க முடியும்.

Best Mobiles in India

English summary
new Lava Yuva 2 Pro smartphone has been launched at a price of Rs.7,999 : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X