Home
Mobile

LAVA-வின் அடுத்த சிக்ஸர்.. ரூ.10,000 பட்ஜெட்ல இன்னொரு பக்காவான 5G போன்.. என்ன மாடல்? என்னென்ன அம்சங்கள்?

யாரெல்லாம் பட்ஜெட் விலையில் "நல்ல-நல்ல" 5ஜி ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்கிறார்களோ.. அவர்கள் தான் இந்திய மொபைல் சந்தையில் தங்களுக்கான இடங்களை தக்கவைத்து கொள்ள முடியும் என்கிற சூழ்நிலை உருவாகி.. ஏற்கனவே பல மாதங்கள் ஆகிவிட்டன. இதற்காக பல நிறுவனங்கள்.. போட்டிபோட்டு கொண்டு தத்தம் பட்ஜெட்-விலை 5ஜி ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் அறிமுகம் செய்த வண்ணம் உள்ளனர். இந்த ஜூலையில் கூட ரெட்மி 13 5ஜி (Redmi 13 5G) மற்றும் சிஎம்எப் போன் 1 (CMF Phone 1) ஆகிய மாடல்கள் அறிமுகத்திற்கு தயாராக உள்ளன.

இதற்கிடையில் "போட்டிக்கு நாங்களும் வரலாமா!" என்கிற பாணியில்.. இந்திய மொபைல் தயாரிப்பாளர் ஆன லாவா மொபைல்ஸ் (Lava Mobiles) நிறுவனம் தனது பிளேஸ் சீரீஸின் கீழ் இன்னொரு புதிய 5ஜி ஸ்மார்ட்போனை (5G Smartphone) இந்த ஜூலையில் அறிமுகம் செய்யவுள்ளது. அது லாவா பிளேஸ் எக்ஸ் (Lava Blaze X) மாடல் ஆகும். இது என்ன விலைக்கு வரும்? என்னென்ன அம்சங்களை பேக் செய்யும்? இதோ விவரங்கள்:

ரூ.10,000 பட்ஜெட்ல இன்னொரு பக்காவான LAVA 5G போன்!

லாவா பிளேஸ் எக்ஸ் ஸ்மார்ட்போனில் என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்? எக்ஸ் தளம் (X Platform) வழியாக பகிரப்பட்டுள்ள டீஸர் போட்டோக்கள் வழியாக.. லாவா பிளேஸ் எக்ஸ் ஸ்மார்ட்போனின் உடனடி வருகை மட்டுமே சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. லாவா நிறுவனம் இந்த ஸ்மார்ட்போனின் சரியான வெளியீட்டு தேதி (Launch Date) மற்றும் முக்கிய அம்சங்கள் (Major Specifications) இன்னும் வெளிப்படுத்தவில்லை.

இருப்பினும் லாவா பிளேஸ் எக்ஸ் ஸ்மார்ட்போனின் டீஸர்கள் வழியாக.. இந்த ஸ்மார்ட்போன் கர்வ்டு டிஸ்பிளேவை (Curved Display) கொண்டிருக்கும் என்பதையும், பேக் பேனலில் கேமரா பம்ப் (Camera Bump) கொண்ட ஸ்டைலான டிசைனை கொண்டிருப்பதையும் தெளிவாக பார்க்க முடிகிறது. மேலும் வெளியான டீஸர் போட்டோவானது இது பிளாக் கலர் வேரியண்ட்டில் அறிமுகமாகும் என்பதோடு சேர்த்து, ஸ்மார்ட்போனின் வலது பக்கத்தில் வால்யூம் மற்றும் பவர் பட்டன்களின் இருப்பிடத்தையும் வெளிப்படுத்துகிறது.

மற்றொரு டீஸர் வீடியோவானது லாவா பிளேஸ் எக்ஸ் ஸ்மார்ட்போனின் பழுப்பு நிற வேரியண்ட்டை காட்டுகிறது. இதன் வழியாக பேக் பேனலின் மையத்தில் அமைந்துள்ளது ஒரு வட்ட வடிவிலான கேமரா செட்டப் (Circular camera module) என்பதை அறிந்துகொள்ள முடிகிறது. இதே ஸ்மார்ட்போனின் பிரத்யேக மைக்ரோசைட் ஆனது அமேசான் இந்தியாவில் (Amazon India) நேரலையில் உள்ளது. ஆக இந்தியாவில் அறிமுகம் செய்த பின்னர், இது அமேசான் வலைத்தளம் வழியாக வாங்க கிடைக்கும் என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

எதிர்பார்க்கப்படும் மற்ற அம்சங்களை பொறுத்தவரை, லாவா பிளேஸ் எக்ஸ் ஆனது டூயல் ரியர் கேமரா செட்டப்பை (Dual Rear Camera Setup) கொண்டிருக்கலாம். அதில் 64எம்பி மெயின் சென்சார் உடனாக எல்இடி ப்ளாஷ் அமைப்பும் இடம்பெறலாம். ஸ்மார்ட்போனின் கேமரா மாட்யூல் கருப்பு நிறமாக இருக்கலாம், ஆனால் பேக் பேனல் பழுப்பு நிறத்தில் இருக்கலாம். அதாவது லாவா பிளேஸ் எக்ஸ் ஸ்மார்ட்போன் ஆனது டூயல்-டோன் டிசைனை (Dual-tone Design) பெறலாம்.

மேலும் இந்த ஸ்மார்ட்போன் 5ஜி இணைப்புடன் (5G Connectivity) வருவதற்கான வாய்ப்பும் அதிகமாக உள்ளது. ஏனென்றால் லாவா பிளேஸ் சீரீஸின் கீழ் அறிமுகமான லாவா பிளேஸ் (Lava Blaze), லாவா பிளேஸ் 2 (Lava Blaze 2), லாவா பிளேஸ் ப்ரோ (Lava Blaze Pro), லாவா பிளேஸ் கர்வ் (Lava Blaze Curve) ஆகிய மாடல்கள் 5ஜி கனெக்டிவிட்டி ஆதரவுடன் வருகின்றன. ஆக லாவா பிளேஸ் எக்ஸ் மாடலும் கூட பெரும்பாலும் 5ஜி ஆதரவு உடனே வரும்.

லாவா பிளேஸ் எக்ஸ் ஸ்மார்ட்போன் என்ன விலைக்கு அறிமுகம் செய்யப்படும்? விலை நிர்ணயத்தை பொறுத்தவரை, இந்தியாவில் இது ரூ.10,999 க்கு அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. லாவா பிளேஸ் எக்ஸ் பேக் செய்யும் முக்கிய அம்சங்களை பொறுத்து இந்த விலை வேறுபடுவதற்கான வாய்ப்புகளும் உள்ளன. ஆனால் எப்படி பார்த்தாலும் இது ரூ.15,000 க்குள் என்கிற பட்ஜெட்டில் தான் அறிமுகம் செய்யப்படும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
New Lava Smartphone Coming soon Lava Blaze X India Launch Price Specifications
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X