ஆரம்பமே அட்டகாசமான ஆஃபர்.. விற்பனைக்கு வந்தது புதிய Lava 5ஜி போன்.. சோனி கேமரா.. எந்த மாடல்?
கடந்த வாரம் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்ட லாவா போல்டு 5ஜி (Lava Bold 2 5G) ஸ்மார்ட்போன் இன்று முதல் முறையாக விற்பனைக்கு வந்துள்ளது. அதாவது அமேசான் தளத்தில் தற்போது இந்த போனை வாங்க முடியும். இப்போது இந்த புதிய போனின் விலை, சலுகைகள் மற்றும் அம்சங்களைப் பார்க்கலாம்.
6ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி கொண்ட லாவா போல்டு 5ஜி போனின் விலை ரூ.12,999-ஆக உள்ளது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் ரூ.1000 தள்ளுபடியும் உள்ளது. எனவே இந்த லாவா 5ஜி போனை ரூ.11,999 விலையில் வாங்கிவிட முடியும். ஃபெதர் ஒயிட் மற்றும் மிட்நைட் பிளாக் நிறங்களில் இந்த போன் வெளிவந்துள்ளது.

லாவா போல்டு 5ஜி அம்சங்கள் (Lava Bold 2 5G specifications): மீடியாடெக் டைமன்சிட்டி 7060 எஸ்ஒசி (MediaTek Dimensity 7060 SoC) சிப்செட் உடன் லாவா போல்டு 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த சிப்செட் ஆனது மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். அதேபோல் இந்த போனில் அனைத்து ஆப்களையும் தடையின்றி பயன்படுத்த முடியும்.
அதேபோல் 50எம்பி ஏஐ சோனி ரியர் கேமரா உடன் லாவா போல்டு 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் மூலம் தெளிவான வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமராவும் இந்த போனில் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளது.
குறிப்பாக 6.67-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் AMOLED டிஸ்பிளே வசதியுடன் வெளிவந்துள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (120Hz Refresh Rate) மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளது. பெரிய டிஸ்பிளே உடன் இந்த போன் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.
அதுவும் ஆண்ட்ராய்டு 15 (Android 15) இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த லாவா போல்டு 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஆனாலும் இந்த ஸ்மார்ட்போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும். 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, ப்ளூடூத் 5.3, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த போனில் உள்ளன.

இந்த லாவா போல்டு 5ஜி ஸ்மார்ட்போனில் இன்-டிஸ்பிளே அல்ட்ராசோனிக் ஃபிங்கர் பிரிண்ட் சென்சார் (in-display ultrasonic fingerprint sensor) வசதி உள்ளது. அதேபோல் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி உடன் லாவா போல்டு 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
மேலும் 5000mAh பேட்டரி உடன் லாவா போல்டு 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும். இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 33W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. ஆகவே இந்த போனை விரைவாக சார்ஜ் செய்துவிட முடியும். IP64 ரேட்டிங் கொண்ட டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட், யூ. எஸ். பி டைப்-சி ஆடியோ (USB Type-C audio)போன்ற வசதிகளும் இந்த போனில் உள்ளன.


Click it and Unblock the Notifications








