என்னங்க இப்படி பண்ணிட்டீங்க: இந்திய நிறுவனம் அறிமுகம் செய்த புதிய போன்: வாங்கலாமா? வேண்டாமா?

|

இந்திய நிறுவனமான லாவா தற்போது புதிய Lava Blaze NXT எனும் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மீடியாடடெக் சிப்செட், ட்ரிபிள் ரியர் கேமரா உள்ளிட்ட பல்வேறு அம்சங்களுடன் வெளிவந்துள்ளது.

ஐபிஎஸ் டிஸ்பிளே வசதி

ஐபிஎஸ் டிஸ்பிளே வசதி

முதலில் இதன் அமச்ஙகளைப் பார்ப்போம். அதாவது லாவா Blaze NXT ஸ்மார்ட்போன் ஆனது 6.5-இன்ச் HD ஐபிஎஸ் டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது. பின்பு பச்சை மற்றும் சிவப்பு நிறத்தில் இந்த புதிய போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

வெயிட்டிங் லிஸ்ட் ரயில் டிக்கெட்டிற்கு மாற்றாக இலவச விமான டிக்கெட்.! இந்த ஆப்ஸை நோட் பண்ணுங்க.!வெயிட்டிங் லிஸ்ட் ரயில் டிக்கெட்டிற்கு மாற்றாக இலவச விமான டிக்கெட்.! இந்த ஆப்ஸை நோட் பண்ணுங்க.!

64ஜிபி ஸ்டோரேஜ் வசதி

64ஜிபி ஸ்டோரேஜ் வசதி

அதேபோல் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி ஸ்டோரேஜ் வசதியைக் கொண்டுள்ளது இந்த லாவா போன். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவும் உள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு உள்ளது.

இதை விட ஒரு நல்ல சான்ஸ் இனி கிடைக்காது! முதல் முறையாக ரூ.60,000 பட்ஜெட்டிற்கு இறங்கி வந்த iPhone 14!இதை விட ஒரு நல்ல சான்ஸ் இனி கிடைக்காது! முதல் முறையாக ரூ.60,000 பட்ஜெட்டிற்கு இறங்கி வந்த iPhone 14!

13எம்பி ட்ர்பிள் ரியர் கேமரா

13எம்பி ட்ர்பிள் ரியர் கேமரா

குறிப்பாக லாவா Blaze NXT ஸ்மார்ட்போன் ஆனது 13எம்பி ட்ர்பிள் ரியர் கேமரா அமைப்புடன் வெளிவந்துள்ளது. மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த புதிய போன்.

விண்வெளியில் தெரிந்த திட்டுத்திட்டான மேகங்கள்.. அதற்கு பின்னால் என்ன இருந்தது? NASA சொல்லும் பதில்!விண்வெளியில் தெரிந்த திட்டுத்திட்டான மேகங்கள்.. அதற்கு பின்னால் என்ன இருந்தது? NASA சொல்லும் பதில்!

5000 எம்ஏஎச் பேட்டரி

5000 எம்ஏஎச் பேட்டரி

இந்த புதிய Blaze NXT ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி வசதி உள்ளது. எனவே சீண்ட நேரம் பேட்டரி பேக்கப் கிடைக்கும். மேலும் இந்த சாதனம் பிரீமியம் கிளாஸ் பேக் பேனல் வடிவமைப்பையும் கொண்டுள்ளது மற்றும் பின்புறத்தில் கைரேகை சென்சார் உள்ளது.

உங்க ஏரியாவில் உங்க ஏரியாவில் "பவர் கட் (shutdown)" எப்போது? ஆன்லைனில் செக் செய்வது எப்படி? இதோ ஈஸி டிப்ஸ்.!

கனெக்டிவிட்டி

கனெக்டிவிட்டி

4ஜி, டூயல்-பேண்ட் வைஃபை, ப்ளூடூத் 5.0, ஜிபிஎஸ், யுஎஸ்பி-சி மற்றும் 3.5மிமீ ஹெட்ஃபோன் ஜாக் போன்ற பல கனெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டுள்ளது இந்த புதிய லாவா Blaze NXT ஸ்மார்ட்போன் மாடல்.

ஒரு நல்ல மிட்-ரேன்ஜ் போனை தேடுறீங்களா? அப்போ Redmi-யின் இந்த ப்ரைஸ் கட்-ஐ பயன்படுத்திகோங்க!ஒரு நல்ல மிட்-ரேன்ஜ் போனை தேடுறீங்களா? அப்போ Redmi-யின் இந்த ப்ரைஸ் கட்-ஐ பயன்படுத்திகோங்க!

ஹிலியோ ஜி37 ஆக்டோ-கோர் சிப்செட்

ஹிலியோ ஜி37 ஆக்டோ-கோர் சிப்செட்

குறிப்பாக லாவா Blaze NXT ஸ்மார்ட்போன் ஆனது மீடியாடெக் ஹிலியோ ஜி37 ஆக்டோ-கோர் சிப்செட் மூலம் இயங்குகிறது. அதேபோல் ஆண்ட்ராய்டு 12 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன். 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி ஸ்டோரேஜ் வசதி கொண்ட இந்த லாவா Blaze NXT ஸ்மார்ட்போனின் விலை ரூ.9,299-ஆக உள்ளது.

வாங்குனா.. Samsung-ன் இந்த மூன்று 5G போன்களில் 1-ஐ மட்டுமே வாங்குங்க.. இல்லனா காசு வேஸ்ட்டு! ஏன் அப்படி?வாங்குனா.. Samsung-ன் இந்த மூன்று 5G போன்களில் 1-ஐ மட்டுமே வாங்குங்க.. இல்லனா காசு வேஸ்ட்டு! ஏன் அப்படி?

சிறப்பு அம்சங்கள் இல்லை

அதாவது இப்போது சில நிறுவனங்கள் ரூ.10,000-க்குள் தரமான சிப்செட், 64எம்பி ரியர் கேமரா, 16எம்பி செல்பி கேமரா உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களுடன் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்கின்றன. ஆனால் லாவா நிறுவனம் அறிமுகம் செய்துள்ள புதிய போனில் அவ்வளவு சிறப்பு அம்சங்கள் இல்லை என்றே கூறலாம்.

ரூ.12000 போதும் பக்கா 5ஜி போன் வாங்கலாம்! 50 எம்பி கேமரா, 5000 எம்ஏஎச் பேட்டரி என எல்லாமே சிறப்பு!ரூ.12000 போதும் பக்கா 5ஜி போன் வாங்கலாம்! 50 எம்பி கேமரா, 5000 எம்ஏஎச் பேட்டரி என எல்லாமே சிறப்பு!

நல்ல வரவேற்பு கிடைக்கும்

அதேபோல் இன்னும் சில நிறுவனங்கள் கம்மி விலையில் 5ஜி போன்களை அறிமுகம் செய்ய அதிக ஆர்வம் காட்டுகின்றன. ஆனால் லாவா நிறுவனம் இப்போது அறிமுகம் செய்துள்ள லாவா Blaze NXT போன் ஆனது 4ஜி ஆதரவுடன் வெளிவந்துள்ளது. எனவே இந்த போனில் 5ஜி வசதி
இல்லை, சிறப்பான அம்சங்களும் இல்லை என்பது தான் உண்மை. இதுபோன்ற போன்களை அறிமுகம் செய்யாமல் லாவா நிறுவனம் கம்மி விலையில் 5ஜி போன்களை அறிமுகம் செய்தால் நல்ல வரவேற்பு கிடைக்கும்.

மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

Best Mobiles in India

English summary
New Lava Blaze NXT Smartphone Launched Under Rs 10,000: Worth Buying?: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X