ரூ.8999-விலையில் இந்திய நிறுவனம் அறிமுகம் செய்த புதிய ஸ்மார்ட்போன்.! முழு விவரம்.!
பல்வேறு முன்னணி நிறுவனங்களுக்குப் போட்டி கொடுக்கும் வகையில் புதிய புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்த வண்ணம் உள்ளது லாவா நிறுவனம். குறிப்பாக இந்நிறுவனம் அறிமுகம் செய்யும் போன்கள் பட்ஜெட் விலையில் வெளிவருவதால் நல்ல வரவேற்பு உள்ளது. இந்நிலையில் புதிய ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது லாவா நிறுவனம்.
அதாவது லாவா நிறுவனம் Lava Blaze 2 எனும் ஸ்மார்ட்போனை தான் தற்போது அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய போன் கம்மி விலை பல அசத்தலான சிறப்பு அம்சங்களுடன் வெளிவந்துள்ளது. இப்போது லாவா பிளேஸ் 2 ஸ்மார்ட்போனின் விலை மற்றும் அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.

புதிய லாவா பிளேஸ் 2 ஸ்மார்ட்போன் ஆனது 6.5-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது. பின்பு 1600 × 720 பிக்சல்ஸ், 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாகக் கொண்டு இந்த லாவா பிளேஸ் 2 ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக பெரிய டிஸ்பிளே என்பதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.
லாவா பிளேஸ் 2 ஸ்மார்ட்போனில் 2ஜிகாஹெர்ட்ஸ் UNISOC T616 ஆக்டோ-கோர் 12என்எம் பிராசஸர் உடன் Mali-G57 GPU ஆதரவு உள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனை இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். மேலும் ஆண்ட்ராய்டு 12 இயங்குதள வசதியுடன் இந்த போன் வெளிவந்துள்ளது. இருந்தபோதிலும் கூடிய விரைவில் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.
புதிய லாவா பிளேஸ் 2 ஸ்மார்ட்போன் ஆனது 6ஜிபி ரேம் மற்றும் 12ஜிபி ஸ்டோரேஜ் வசதியைக் கொண்டுள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டு இந்த புதிய ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவைக் கொண்டுள்ளது இந்த புதிய லாவா ஸ்மார்ட்போன் மாடல்.
புதிய லாவா பிளேஸ் 2 ஸ்மார்ட்போன் 13எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி மேக்ரோ கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா வசதியைக் கொண்டுள்ளது இந்த புத்தம் புதிய ஸ்மார்ட்போன் மாடல். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த புதிய போன். பின்பு எல்இடி பிளாஷ் மற்றும் பல கேமரா அம்சங்கள் இவற்றுள் அடக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.
5000 எம்ஏஎச் பேட்டரி வசதியைக் கொண்டு வெளிவந்துள்ளது இந்த லாவா பிளேஸ் 2 ஸ்மார்ட்போன். எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் கிடைக்கும். பின்பு 18 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதி, கைரேகை ஸ்கேனர் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களுடன் இந்த புதிய லாவா பிளேஸ் 2 ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.

இந்த லாவா பிளேஸ் 2 ஸ்மார்ட்போன் 4ஜி எல்டிஇ, புளூடூத் 5.0, வைஃபை 802.11, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட், 3.5எம்எம் ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டுள்ளது இந்த லாவா ஸ்மார்ட்போன் மாடல். மேலும் இந்த போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது லாவா நிறுவனம்.
கிளாஸ் பிளாக், கிளாஸ் ஆரஞ்சு, கிளாஸ் ப்ளூ ஆகிய நிறங்களில் இந்த லாவா பிளேஸ் 2 ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் இந்த போனின் விலை ரூ.8,999-ஆக உள்ளது. வரும் ஏப்ரல் 18-ம் தேதி லாவா இணையதளம் மற்றும் அமேசானில் இந்த புதிய லாவா பிளேஸ் 2 ஸ்மார்ட்போனை வாங்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








