பல டூபாக்கூர் கேமரா போன்களுக்கு.. ஜூன் 7ல் ஆப்பு ஒன்னு காத்திருக்கு.. அதுக்கு காரணம் இந்த Xiaomi போன் தான்!
இந்திய சந்தையில் பெஸ்ட் கேமரா ஸ்மார்ட்போன் (Best Camera Smartphone in India) என்று வந்துவிட்டால் "நாங்க தான் ராஜா!" என்று கொக்கரிக்கும் பல நிறுவனங்களுக்கு ஜூன் 7 ஆம் தேதியன்று ஒரு பெரிய ஆப்பு காத்திருக்கிறது மற்றும் அந்த ஆப்பை வைக்கப்போவது சியோமி (Xiaomi) தான்!
விஷயம் என்னவென்றால், ஜூன் 7 ஆம் தேதியன்று மிகவும் எதிர்பார்க்கப்படும் சியோமி ஸ்மார்ட்போன் ஒன்று உலகளவில் அறிமுகம் செய்யப்படவுள்ளது; ஆக இது இந்தியாவிற்கும் வரலாம். நாம் இங்கே பேசுவது சியோமி 13 அல்ட்ரா (Xiaomi 13 Ultra) மாடலை பற்றித்தான். இது என்ன விலைக்கு வரும்? என்னென்ன அம்சங்களை பேக் செய்யும்? இதோ விவரங்கள்:

சியோமி 13 அல்ட்ரா கேமராக்கள், சும்மா தெறிக்க விடுது! ஏற்கனவே சீனாவில் (கடந்த ஏப்ரல் மாதம்) அறிமுகமாகி விட்டதால், இந்த ஸ்மார்ட்போனின் விரிவான அம்சங்கள் (Full Specifications) குறித்து எந்த குழப்பமும் இல்லை. முதலில், மற்ற கேமரா போன்களை தெறிக்க விடும் அளவிற்கு இந்த போனில் அப்படி என்னென்ன கேமரா சென்சார்கள் உள்ளன என்று பார்ப்போம்.
சியோமி 13 அல்ட்ராவானது லைகா (Leica) நிறுவனத்தால் 'ட்யூன்' செய்யப்பட்ட குவாட்-ரியர் கேமரா செட்டப்பை பேக் செய்கிறது. அவைகள் ஹைஎண்ட் கஸ்டம் சம்மிக்ரான் லென்ஸ்களுடன் (High-end Custom Summicron Lenses) வருகின்றன. இதன் குவாட்-ரியர் கேமரா செட்டப்பின் மெயின் கேமராவானது 1-இன்ச் ஐஎம்எக்ஸ்989 சென்சார் உடனான 50-மெகாபிக்சல் சென்சார் ஆகும்.
மீதமுள்ள மூன்று கேமராக்களுமே வெவ்வேறு திறன்களை கொண்ட 50-மெகாபிக்சல் ஐஎம்எக்ஸ்858 சென்சார்களாக உள்ளன. அதாவது சியோமி 13 அல்ட்ரா ஸ்மார்ட்போனில் உள்ள நான்கு கேமராக்களுமே 50எம்பி சென்சார்கள் ஆகும். இப்படியாக இந்த போனின் கேமராக்களால் 6 மாறுபட்ட ஃபோக்கல் லென்ஸ்களை (Focal Lens) வழங்குகின்றன.
செல்பீ கேமராவை பொறுத்தவரை, சியோமி 13 அல்ட்ராவில் 32-எம்பி சென்சார் உள்ளது. மற்ற அம்சங்களை பொறுத்தவரை, இது 6.73-இன்ச் அமோஎல்இடி டபுள்யூக்யூஎச்டி பிளஸ் (AMOLED WQHD+) டிஸ்பிளேவை கொண்டுள்ளது; அது 120 ஹெர்ட்ஸ் வரையிலான ரெஃப்ரெஷ் ரேட்டை ஆதரிக்கிறது.
ஆக்டா-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 சிப்செட் (Qualcomm Snapdragon 8 Gen 2 chipset) மூலம் இயக்கப்படும் சியோமி 13 அல்ட்ராவானது ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ்-ஐ (Android 13 OS) அடிப்படையாக கொண்ட நிறுவனத்தின் சொந்த எம்ஐயுஐ 14 உடன் வருகிறது. ரேம் மற்றும் ஸ்டோரேஜை பொறுத்தவரை, 12ஜிபி வரையிலான ரேம் மற்றும் 512ஜிபி வரையிலான இன்டர்னல் ஸ்டோரேஜ் கிடைக்கும்.
பேட்டரி டிப்பார்ட்மென்ட்டை பொறுத்தவரை, இது 5000mAh பேட்டரியை கொண்டுள்ளது. அது 90W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு மற்றும் 50W வயர்லெஸ் ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவை பெற்றுள்ளது. சீன மொபைல் நிறுவனமான சியோமியின்படி, இதன் வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் வெறும் 34 நிமிடங்களில், மொபைலை 0 - 100% சார்ஜ் செய்யும்.
சியோமி 13 அல்ட்ரா விலை: இந்த ஸ்மார்ட்போனின் உலகளாவிய விலை நிர்ணயம் குறித்து எந்தவிதமான அதிகாரப்பூர்வ தகவலும் இல்லை. இருப்பினும் சீன விலை நிர்ணயத்தை வைத்து எதிர்பார்க்கப்படும் இந்திய விலையை நம்மால் அறிந்துகொள்ள முடிகிறது. அதன்படி சியோமி 13 அல்ட்ராவின் சிங்கிள் 12ஜிபி ரேம் + 512ஜிபி ஆப்ஷன் ஆனது தோராயமாக ரூ.1,33,000 க்கு அறிமுகம் செய்யப்படலாம்.


Click it and Unblock the Notifications