Home
Mobile

வீட்டுல இருக்குற எல்லோருக்கும் 1 வாங்கும் விலைக்கு.. தீபாவளிக்கு முன்பே புதிய JioPhone Prima 4G அறிமுகம்!

முகேஷ் அம்பானி (Mukesh Ambani) தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ (Reliance Jio) நிறுவனமானது.. எந்த விதமான முன்னறிவிப்பும் இல்லாமல்.. ஜியோ போன் ப்ரைமா 4ஜி (JioPhone Prima 4G) என்கிற புதிய மொபைல் போனை, இந்திய சந்தையில் அறிமுகம் செய்து உள்ளது.

புது தில்லியில் நடந்து வரும் இந்திய மொபைல் காங்கிரஸ் 2023 (Indian Mobile Congress 2023) நிகழ்வில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள புதிய ஜியோ போன் ப்ரைமா 4ஜி போனின் விலை நிர்ணயம் என்ன? இது என்னென்ன அம்சங்களை பேக் செய்கிறது? எப்போது முதல் விற்பனைக்கு வரும்? இதோ விவரங்கள்:

தீபாவளிக்கு முன்பே புதிய JioPhone Prima 4G அறிமுகம்!

இந்த மொபைல் போன் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் சொந்த இ-ரீடெய்ல் இணையதளமான ஜியோமார்ட்டில் பட்டியலிடப்பட்டுள்ளது. முன்னதாக இந்த மொபைல் போன் தீபாவளிக்கு அறிமுகமாகும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இருப்பினும் சற்றே முன்னதாக அறிமுகம் செய்யப்பட்டு, டெல்லி மற்றும் மும்பை போன்ற முக்கிய நகரங்களில் டெலிவரி செய்யப்பட தயார் நிலையில் உள்ளது.

ஜியோ போன் ப்ரைமா 4ஜி போனின் அம்சங்கள்: பிரீமியம் ரேன்ஜ் ஃபீச்சர் போன் (Premium Range Feature Phone) வடிவமைப்பை கொண்டுள்ள ஜியோ போன் ப்ரைமா 4ஜி போன் ஆனது வாட்ஸ்அப் (WhatsApp), யூட்யூப் (YouTube) மற்றும் பல சமூக ஊடக ஆப்களுக்கான ஆதரவுடன் வருகிறது.

பெயர் குறிப்பிடுவது போலவே இது 4ஜி கனெக்டிவிட்டி உடன் வரும் ஜியோ போன் ப்ரைமா 4ஜி போன் ஆனது 320 × 240 பிக்சல்ஸ் ரெசல்யூஷன் கொண்ட டிஎஃப்டி டிஸ்பிளேவை கொண்டு உள்ளது. பேக் பேனலில் இரண்டு செறிவான வட்டங்களின் எல்லைக்குள் ஜியோ லோகோவை காண முடிகிறது.

வட்டமான விளிம்புகள் மற்றும் மூலைகளைக் கொண்டுள்ள ஜியோ போன் ப்ரைமா 4ஜி மொபைல் போன் ஆனது 1.55செமீ தடிமன் கொண்டது. யூட்யூப் மட்டுமின்றி ஜியோ டிவி (JioTV), ஜியோ சினிமா (Jio Cinema), ஜியோ சாவன் (JioSaavn) மற்றும் ஜியோ நியூஸ் (JioNews) போன்ற பொழுதுபோக்கு ஆப்களுக்கான ஆதரவும் இதில் உள்ளது. கூடுதலாக ஜியோபே (JioPay)ஆப்பும் கூட ப்ரீ-லோலட் செய்யப்பட்டு இருக்கும்.

ஏஆர்எம் கோர்ட்டெக்ஸ் ஏ53 (ARM Cortex A53) சிப்செட் மூலம் இயக்கப்படும் ஜியோ போன் ப்ரைமா 4ஜி போன் ஆனது 128ஜிபி அளவிலான விரிவாக்கக்கூடிய ஸ்டோரேஜ் உடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த போன் எஃப்எம் ரடியோ (FM Radio) மற்றும் 3.5மிமீ ஆடியோ ஜாக் ஆதரவையும் பெற்றுள்ளது.

ஜியோவின் இந்த லேட்டஸ்ட் ஃபீச்சர் போன் ஆனது காய்ஓஎஸ் (KaiOS) மூலம் இயக்கப்படுகிறது. 4ஜி போனாக இருந்தாலும் கூட ஜியோ போன் ப்ரைமா 4ஜி போன் ஆனது சிங்கிள் சிம் ஸ்லாட்டை மட்டுமே பெறுகிறது. கனெக்ட்விட்டி ஆப்ஷன்களை பொறுத்தவரை. ப்ளூடூத் வெர்ஷன் 5.0-வை கொண்டுள்ளது.

ஜியோ போன் ப்ரைமா 4ஜி போன் ஆனது 1,800எம்ஏஎச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. கேமராவை பொறுத்தவரை இதில் 0.3எம்பொ ரியர் கேமராவை கொண்டுள்ளது. கடைசியாக, ரிலையன்ஸ் ஜியோ நிறுவனமானது தனது புதிய ஜியோ போன் ப்ரைமா 4ஜி போனிற்கு ஒரு வருட வாரண்டியை வழங்குகிறது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

ஜியோ போன் ப்ரைமா 4ஜி போனின் விலை மற்றும் விற்பனை விவரங்கள்: ஜியோ போன் ப்ரைமா 4ஜி போன் ஆனது இந்தியாவில் ரூ.2,599 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த போன் நீலம் மற்றும் மஞ்சள் என்கிற 2 கலர் ஆப்ஷன்களில் வாங்க கிடைக்கும்.

முன்னரே குறிப்பிட்டபடி, இது தீபாவளிக்கு முன்பாகவே அறிமுகமாகி, ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் சொந்த வலைதளமான ஜியோமார்ட்டில் விற்பனைக்காக பட்டியலிடப்பட்டு உள்ளது. வெளியீட்டு சலுகைகளை பொறுத்தவரை, ஜியோ போன் ப்ரைமா 4ஜி போனின் மீது கேஷ்பேக் சலுகைகள், வங்கி சலுகைகள் மற்றும் கூப்பன்கள் ஆகியவைகள் அணுக கிடைக்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
New JioPhone Prima 4G Feature Phone Launched in India Price Full Specifications
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X