Home
Mobile

ரூ.8000 பட்ஜெட்டில் எகிறி அடிக்கும் புது Itel போன்.. 4GB ரேம், ஆண்ட்ராய்டு 16, 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?

சைனீஸ் ஸ்மார்ட்போன் பிராண்ட் ஆன ஐடெல், இந்தியாவில் கடைசியாக அறிமுகப்படுத்திய ஸ்மார்ட்போன் ஐடெல் ஏ100 4ஜி (Itel A100 4G) ஆகும். இருப்பினும், அந்நிறுவனம் தற்போது தனது பவர் சீரீஸின் ஒரு பகுதியாக ஒரு புதிய ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய தயாராகி வருவதாக தெரிகிறது.

ஐடெல் பவர் 80 (Itel Power 80) என்ற பெயரில் சந்தைப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படும் இந்த ஸ்மார்ட்போன், ஒரு பெஞ்ச்மார்க்கிங் தளத்தில் காணப்பட்டதாக கூறப்படுகிறது. அதன் வழியாக இந்த ஸ்மார்ட்போனின் சிப்செட், ஓஎஸ் மற்றும் ரேம் திறன் உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் வெளிப்படுத்தப்பட்டு உள்ளது.

ரூ.8000 பட்ஜெட்டில் எகிறி அடிக்கும் புது Itel போன்!

ஐடெல் பவர் 80 ஸ்மார்ட்போனில் என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்? பெஞ்ச்மார்க்கிங் தளமானது, இந்த ஸ்மார்ட்போன் ஆக்டா கோர் ஸ்ப்ரெட்ரம் UMS9230E சிப்செட் உடன் வரும் என்று குறிப்பிடுகிறது. இது யூனிசாக் T7250 சிப்செட் ஆக இருக்கலாம்.ஆக இது பெரும்பாலும் ரூ.10000 க்குள் (இன்னும் சொல்லப்போனால் ரூ.8000-ஐ சுற்றிய) பட்ஜெட்டில் அறிமுகம் செய்யப்பட வாய்ப்புகள் அதிகம்.

மேலும், இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் மற்றும் 3.69ஜிபிரேம் உடன் பட்டியலிடப்பட்டுள்ளது, ஆனால் சீன தொழில்நுட்ப நிறுவனம் இதை 4ஜிபி ரேம் ஆக சந்தைப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. செயல்திறனை பொறுத்தவரை, இந்த போன் சிங்கிள்-கோர் சோதனையில் 445 புள்ளிகளையும், கீக்பெஞ்சின் மல்டி-கோர் செயல்திறன் சோதனையில் 1,451 புள்ளிகளையும் பெற்றுள்ளது. பேட்டரியை பொறுத்தவரை அதன் "பவர்" என்ற பெயரின் காரணமாக, இந்த போனில் 5000mAh அல்லது அதற்கும் அதிகமான திறன் கொண்ட ஒரு பெரிய பேட்டரி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

இந்த ஸ்மார்ட்போன் குறித்து ஐடெல் நிறுவனம் எந்த விவரங்களையும் இன்னும் உறுதிப்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் பெஞ்ச்மார்க்கிங் லிஸ்டிங் ஆனது இது கூடிய விரைவில் தேர்ந்தெடுக்கப்பட்ட உலகளாவிய சந்தைகளில் அறிமுகப்படுத்தப்படலாம் என்பதை உணர்த்துகிறது. ஐடெல் நிறுவனம் முன்னதாக ஐடெல் ஏ100 4ஜி ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகப்படுத்தி இருந்தது. இது கடந்த பிப்ரவரி 9 ஆம் தேதி அன்று இந்தியாவில் அறிமுகமானது.

ஐடெல் ஏ100 4ஜி ஸ்மார்ட்போனின் விலை மற்றும் அம்சங்கள்: அறிமுகமான நேரத்தில், இந்தியாவில் ஐடெல் ஏ100 4ஜி ஸ்மார்ட்போனின் 3ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.6,799 க்கு வாங்க கிடைத்தது. இதே ஸ்மார்ட்போனின் 4ஜிபி ரேம் ஆப்ஷன் ரூ.7,499 க்கு வாங்க கிடைத்தது. இந்த ஸ்மார்ட்போன் சில்க் கிரீன், ப்யூர் பிளாக் மற்றும் டைட்டானியம் கோல்ட் ஆகிய கலர்களில் கிடைக்கிறது.

ஐடெல் ஏ100 4ஜி ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்:
- டூயல் சிம் (நானோ-சிம் + நானோ-சிம்)
- ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் அடிப்படையாக கொண்ட ஐடெல் ஓஎஸ் 15
- 90ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்
- 269பிபிஐ பிக்சல் டென்சிட்டி
- 180ஹெர்ட்ஸ் டச் சாம்பிளிங் ரேட்
- 6.6-இன்ச் (720 x 1,612 பிக்சல்கள்) எச்டி பிளஸ்+ ஐபிஎஸ் எல்சிடி டிஸ்பிளே

- ஆக்டா-கோர் யுனிசாக் டி7100 சிப்செட்
- 4ஜிபி வரை ரேம் மற்றும் 64ஜிபி வரை இன்டர்னல் ஸ்டோரேஜ்
- 8ஜிபி வரை விர்ச்சுவல் ரேம்
- LED ஃபிளாஷ் கொண்ட 8-மெகாபிக்சல் ரியர் கேமரா
- 5-மெகாபிக்சல் செல்பீ கேமரா
- 4ஜி LTE
- ப்ளூடூத்
- வைஃபை
- ஜிபிஎஸ்
- 3.5மிமீ ஹெட்போன் ஜாக்

- ஒரு ஐஆர் பிளாஸ்டர்
- ஒரு யுஎஸ்பி டைப்-சி போர்ட்
- நெட்வொர்க் இணைப்பு இல்லாத பகுதிகளில் உள்ள மற்ற ஐடெல் பயனர்களுக்கு, அவசரகால தொடர்பு முறைகளை பயன்படுத்தி அழைப்புகளை மேற்கொள்ள அனுமதிக்கும் அல்ட்ராலிங்க் அம்சம்
- நீடித்து உழைக்கும் தன்மைக்காக IPX4 நீர் சிதறல் எதிர்ப்பு திறன்
- MIL-STD-810H இராணுவ தரச்சான்றிதழ்
- 10W வயர்டு சார்ஜிங்கை ஆதரவு
- 5000mAh பேட்டரி

Best Mobiles in India

English summary
New Itel 4G Phone Under Rs 10000 Coming Soon to India Could be Itel Power 80 What to Expect
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X